இதுவரை தமிழ்நாடு, கர்நாடக, ஆந்திரா, கேரளா, அஸ்ஸாம், பீகார், குஜராத், ஹரியானா, ஹிமாச்சல் பிரதேஷ், மத்திய பிரதேஷ், ஒரிசா, ராஜஸ்தான், பஞ்சாப், மஹாராஸ்டிரா, திரிபுரா, உத்தர்பிரதேஷ், மேற்கு வங்காளம் மற்றும் உத்திராஞ்சல் ஆகிய மாநிலங்களில் வக்ப் வாரியங்களை அம்மாநில அரசுகள் அமைத்துள்ளன.
பாண்டிசேரி, சண்டிகர், அந்தமான் நிகோபார், தாதர் நாகர் ஹவேலி ஆகிய மத்திய ஆட்சிக்குட்பட்ட மாநிலங்களிலும் அம்மாநில அரசுகள் வக்ப் வாரியங்களை அமைத்து உள்ளன.
அருணாச்சல் பிரதேஷ், ஜார்கண்ட், மிசோரம், நாகலாந்து, சிக்கிம் ஆகிய மாநிலங்களிலும் டாமன் மற்றும் டையு யூனியன் பிரதேசத்திலும் வக்ப் வாரியம் இன்னும் அமைக்கப்படவில்லை.1995 வக்ப் சட்டத்தில் 83 ஆவது பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ள வக்ப் நடுவர் மன்றங்கள் இன்னும் ஏற்ப்படுதப்படவில்லை.
வக்ப் நெறிமுறைகளை 14 மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் அறிவிக்கை செய்துள்ளன. இதர ஆறு மாநிலங்கள் வெறும் நெறிமுறைகளை மட்டும் இயற்றி உள்ளன.எஞ்சியுள்ள மாநிலங்களும், யூனியன் பிரதேசங்களுக்கும் இதில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.