இஸ்ரேலிய அரசாங்கத்தின் இராணுவ இணையதளத்திற்கு ஆப்பு வைத்த எகிப்து இஸ்லாமிய இயக்கம்... ~ சஹாரா தமிழ்

ads

ஞாயிறு, 3 ஆகஸ்ட், 2014

இஸ்ரேலிய அரசாங்கத்தின் இராணுவ இணையதளத்திற்கு ஆப்பு வைத்த எகிப்து இஸ்லாமிய இயக்கம்...இஸ்ரேலிய அரசாங்கத்தின் அதிக பாதுகாப்பு மிக்க இராணுவ இணையதளத்திற்கு ஆப்பு வைத்த எகிப்து இஸ்லாமிய இயக்கம்:-
நேற்றைய தினம் இஸ்ரேலிய அரசாங்கத்தின் அதிக பாதுகாப்பு மிக்க இராணுவ இணையதளத்தை எகிப்து நாட்டை சேர்ந்த இஸ்லாமிய இயக்கம் முடக்கியுள்ளது. இதுதவிர இஸ்ரேலின் இன அழிப்பு நடவடிக்கை தொடர்பான பல்வேறு பட்ட இணையதளங்களும் செயலிழக்க வைக்கப்பட்டுள்ளது.

இஸ்ரேலின் இராணுவ இணையதளமான www.mossad.gov.il எனும் இணையத்தளம் நேற்றைய தினம் GMT 00:40 மணிமுதல் செயலிழக்க வைக்கப்பட்டு தற்போது வரை இயங்காமலேயே உள்ளது. இந்த தகவலை இஸ்ரேலிய இராசாங்கம் மூடி மறைத்துள்ளது.

பலஸ்தீனத்தின் மீது இஸ்ரேல் ஜூலை 7ம் திகதி முதல் மனிதாபிமானமற்ற முறையில் கொலை வெறி தாக்குதல் நடத்திய நாள் முதல் இஸ்ரேலுடைய இணையங்களை முடக்குவதற்கான அணைத்து வேலைப்பாடுகளும் மும்முரமாக நடைபெற்று வந்துள்ளது.

இதன் பலனாக கிட்டதட்ட இஸ்ரேலிய அரசாங்கத்துக்கு ஆதரவான 170 இணையதளங்களை தாம் முடக்கியுள்ளதாக இஸ்லாமிய அமைப்பு தெரிவித்து முடக்கப்பட்ட சில இணையதளங்களையும் வெளியிட்டுள்ளது.
இவ் இஸ்லாமிய குழுவானது கடந்த 2 வருடங்களாக நூற்றுக்கணக்கான இஸ்ரேலிய இராணுவ இணையதளங்களை முடக்கியுள்ளதுடன் இஸ்ரேலிய இராணுவத்தின் 5000 இரகசிய கோப்புகளையும் வெளியிட்டது.

Source - Kiliyanurseaithikal
#MohamedHaris

இன்றைய சித்திரம்

இன்றைய சித்திரம்