இலங்கையி­ருந்து ஒரு தமிழ் திருக்குர்ஆன் மொழிபெயர்ப்பு ~ சஹாரா தமிழ்

ads

வியாழன், 1 அக்டோபர், 2009

இலங்கையி­ருந்து ஒரு தமிழ் திருக்குர்ஆன் மொழிபெயர்ப்பு

இலங்கையி­ருந்து ஒரு தமிழ் திருக்குர்ஆன் மொழிபெயர்ப்பு

இலங்கையி­ருந்து தமிழுலகிற்கு புதியதொரு தமிழ் திருக்குர்ஆன் மொழிபெயர்ப்பு வந்து சேர்ந்துள்ளது. அகில இலங்கை ஜம்இய்யது அன்ஸாரிஸ் ஸீன்னத்தில் முஹம்மதிய்யாவும், சர்வ தேச நூல் வெளியீட்டாகமான தாருஸ் ஸலாமும் இணைந்து இப்பணியைச் செய்துள்ளன.


இதுவரை தமிழில் பல திருக்குர்ஆன் மொழிபெயர்ப்புகள் வெளிவந்திருந்தாலும் இலங்கையி­ருந்து வெளிவரும் முதல் தமிழ் மொழியாக்கம் என்ற அடிப்படை யில் இது சிறப்புப் பெருகின்றது.
அத்துடன் இது தனிநபர் முயற்சியாக அல்லாமல் கூட்டு முயற்சியால் உருவான புது வரவு என்பதும் இதன் சிறப்பம்சமாகும்.

அன்ஸாருஸ் ஸின்னாவின் அறிஞர் குழுவான எஸ்.எச்.எம். இஸ்மாயில் (ஸலபி), எம்.ஜெ.எம். ரிஸ்வான் மதனி, எம்.எச்.எம். அஸ்பர் பலாஹி ஆகியோர் இதன் மொழியாக்கப் பணியில் ஈடுபட எம்.சி. அன்ஸார் ரியாதி, என்.பி. ஜூனைத் மதனி, எம்.எஸ்.எம். ரிஸ்வி மதனி ஆகியோர் மேற்பார்வையாளர்களாக செயல்பட்டுள்ளனர். அத்துடன் அன்ஸாரிஸ் ஸþன்னாவின் தலைவர் அஷ்ஷெய்க் என்.பி.எம். அபுபக்கர் சித்திக் மதனி அவர்களின் கண்கானிப்பின் கீழ் இப்பணி பூர்த்தி செய்யப்பட்டுள்ளது.
அபுபக்கர் சித்திக் மதனி அவர்களின் மதிப்புரையில் ''இம்மொழியாக்கத்தின் தமிழ்நடை எளிமையானதாகவும் அடைப்பு குறிகள் குறைவானதாகவும் இருப்பது இதன் சிறப்பியல்புகளில் ஒன்றாகும். அதேவேளை குர்ஆன் சுன்னாவின் அடிப்படையில் ஸலபுஸ் ஸா­ஹீன் களது விளக்கங்களுக்கு முன்னுரிமை கொடுத்து இம்மொழியாக்கம் செய்யப் பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கதாகும்'' எனக் குறிப்பிட்டுள்ளார்.
தமிழாக்க மற்றும் மேற்பார்வை குழுவினரின் முன்னுரையில் ''ஏற்கெனவே பல மொழி பெயர்ப்புகள் தமிழில் வெளிவந்துள்ளன. முதன்முத­ல் திருக் குர்ஆனைத் தமிழில் தரும் பணியைச் செய்த அப்துல் ஹமீத் பாகவி (ரஹ்) அவர்களை இவ்வகையில் நன்றியுடன் நினைவு கூர்கின்றோம். இவருக்குப் பின்னரும் பலரும் இப்பணியைச் செய்துள்ளனர். அவர்கள் அனை வரையும் நன்றி யுடன் நாம் நிறை வு கூர்கின்றோம்'' எனக் குறிப் பிட்டுள்ளமை இக்குழுவின் பணிவையும் பண்பாட்டையும் பறை சாட்டுகின்றது.
கடந்த காலத்தில் பணியாற்றி யவர்களையெல்லாம் குறைகூறி கேவலப் படுத்திவிட்டு தமது பணியைத் தூக்கி நிறுத்தும் தவறான போக்கு அவர்களிடம் தென்படாமை இஸ்லாமியப் பணியாளர் கள் கவனத்தில் கொள்ள வேண்டிய அம்சமாகும்.
அத்துடன் பலர் பங்கு கொண்ட பணி என்றாலும் இதில் தவறுகளும் குறை களும் இடம் பெற வாய்ப்பு உள்ளமையை நிச்சயமாக நாம் மறுக்க மாட்டோம். எனவே, எமது தமிழாக்கத்தில் குறைகளை யும், தவறுகளையும் காணும் வாசகர்கள் அவற்றைச் சுட்டிக்காட்டினால் திருத்திக் கொள்ளப் பெரிதும் உதவியாக அமையும் என்று பணிவுடன் தெரிவித்துக் கொள் கின்றோம்'' என்று குறிப்பிட்டுள்ளமையும் கவனத்தில் கொள்ளத் தக்கதாகும்.
அழகிய வடிவமைப்பில் நேர்த்தியான கட்டமைப்பில் வெளியிடப்பட்டுள்ள இந்த தமிழாக்கத்தின் இலங்கை தவிர்த்த ஏனைய நாடுகளுக்கு பதிப்புரிமையை சவூதியை தலைமையகமாக கொண்டு இயங்கும் இஸ்லாமியப் பிரச்சாரப் பேரவை சார்பாக சென்னையில் ரமலானில் நடைபெறும் தொடர் சொற்பொழிவில் பங்குக் கொள்ள சென்னை வந்திருந்த குழுவைச் சேர்ந்த மவ்லவி இஸ்மாயில் சலபி, தமுமுக தலைவருக்கு அகில இலங்கை ஜம்மியத்து அன்ஸாரிஸ் ஸீன்னத்துல் முஹம்மதிஸ் சார்பாக திருக்குர்ஆன் தமிழாக்கப் பிரதி ஒன்றை வழங்கினார். தாருஸ்ஸலாம் வெளியீட்டு உரிமையை தன்னுடைமையாக்கியுள்ளது.
இந்த புதிய வரவு மக்களிடம் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளதுடன் நிச்சயமாக இது நல்ல வரவேற்பையும் பெறும் எனக் கட்டியம் கூறலாம்.

--tmmk-ksa--

www.tamilsaral.com

இன்றைய சித்திரம்

இன்றைய சித்திரம்