ஷார்ஜா : சுற்றுச் சூழல் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் முமுக ~ சஹாரா தமிழ்

ads

ஞாயிறு, 4 அக்டோபர், 2009

ஷார்ஜா : சுற்றுச் சூழல் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் முமுக

ஐக்கிய அரபு அமீரகங்களில் ஒன்றான ஷார்ஜா-வில் அக்டோபர் 3ம் தேதி, சுற்றுச் சூழல் விழிப்புணர்வு நிகழ்ச்சியை ஷார்ஜா அரசு ஏற்பாடு செய்திருந்தது. அல்கானில் உள்ள கடற்கரைப் பகுதியை துப்புரவு செய்தல், இயற்கை மாசுபடுவதை தடுக்கும் முறைகள் பற்றிய ஆலோசனை, பயனுள்ள வினாடி வினா நிகழ்ச்சிகள், இயற்கை வளம் குறித்த வரைபடம் வரையும் பயிற்சி உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

இந்நிகழ்ச்சியில் காரெஃபோர், டல்ஸ்கோ, நேஷனல் எலெவேட்டர்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் பணியாளர்களும், கல்லூரி, பள்ளி மாணவ மாணவிகளும், பொதுமக்களும், சமூக தொண்டு ஆர்வலர்களும் கலந்துக் கொண்டனர். தமிழகத்தை மையமாகக் கொண்டு பல்வேறு சமுதாயப் பணிகளை அமீரகத்தில் செய்து வரும் முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தொண்டர்கள் ஷார்ஜா மண்டல முமுக தலைவர் நெல்லிக்குப்பம் இக்பால் தலைமையில் கலந்துக் கொண்டு சேவையாற்றினார்.

பல்வேறு நாடுகளைச் சார்ந்த ஆண்கள், பெண்கள், பெரியவர்கள், குழந்தைகள் என அனைத்து தரப்பினரும் ஆயிரக்கணக்கில் கலந்துக் கொண்டனர்.

--Tmmk-Ksa--

இன்றைய சித்திரம்

இன்றைய சித்திரம்