திருநெல்வேலி மாவட்டம் ஏர்வாடியில் கடந்த 26/09/2009 அன்று பெண்கள் இஜ்திமா நடைபெற்றது. இஜ்திமாவிற்கு ஏர்வாடி மகளிர் அணி செயலாளர் பாத்திமா ஜரினா தலைமை வகித்தார். செய்யதலி பாத்திமா, மெஹர்பானு, சுபைதா ஆயிஷா ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஏர்வாடி துணைச் செயலாளர் பர்வீன் பாத்திமான வரவேற்புரை நிகழ்த்தினார்.
சகோதரி। ஷபானா ஆலிமா ஸஹாபா பெண்கள் கற்றுத் தந்த பாடம் என்ற தலைப்பிலும், சகோதரி. அஜ்ஹரா ஆலிமா நமது பெண்களும் நவீன கலாச்சாரமும் என்ற தலைப்பிலும், சகோதரி, பாத்திமா சோபியா இறையச்சம் என்ற தலைப்பிலும், சகோதரி. பாத்திமான பர்வீன் இஸ்லாமிய குடும்பவியல் என்ற தலைப்பிலும் சிறப்புரையாற்றினர்.
இந்த இஜ்திமாவில் கோவை மூட நம்பிக்கை ஒழிப்பு பிரச்சார குழுவினரின் (பேய் ஆட்டம்) மூட நம்பிக்கையை தகர்த்தெரியும் செயல் முறை விளக்கம் நடைபெற்றது. ஏர்வாடி மகளிர் அணி துணைச் செயலாளர் ஷேக் மும்தாஜ் பானு நன்றியுரை கூறினார்.
இந்த இஜ்திமாவில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் திரளாக கலந்து கொண்டனர்.