டென்மார்க், அக்டோபர் 26, 2009
போஸ்னியாவின் சர்வதேச குற்றவாளியான ராடவன் கராட்சிக் மீதான விசாரணை இன்று ஹாலந்தின் கேக் நகரில் சர்வதேச நீதிமன்றத்தில் துவங்கியது.
தன்மீதுள்ள வழக்கை ஆரம்பிப்பதற்கு மேலும் கால அவகாசம் வேண்டும் என்று அவர் கேட்டார், ஆனாலும் அதற்கான அனுமதியை நீதிமன்றம் வழங்கவில்லை.
1995ல் நடந்த இனப்படுகொலையில் 8,000 க்கும் மேற்பட்ட போஸ்னிய முஸ்லிம்களை படுகொலை செய்தார் என்பது இவர் மீது சுமத்தப்பட்ட முக்கிய குற்றச்சாட்டாகும்.
மனிதஇனத்திற்கு எதிராக நடந்து கொண்டமை, போர் விதிகளை அப்பட்டமாக மீறியமை, மனிதஇன படுகொலை, மனிதத்தன்மையற்ற பெரும் கொலையாளி ஒரு இனத்தின் தலைவனாக இருந்தமை போன்ற 11 குற்றங்கள் இவர் மீது சுமத்தப்பட்டுள்ளன.
இந்த அத்தனை குற்றங்களையும் ராடவன் கராட்சிக் நிராகரித்துள்ளார்.
கடந்த 12 வருடங்களாக தேடப்பட்டு வந்த ராடவன் கராட்சிக் 2008 ஜுலை மாதம் பயோகாட் நகரில் பிடிபட்டார்.
ஒரு வருடம் கழித்து இப்போது தான் விசாரணை துவங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
--tmmk-ksa--
செவ்வாய், 27 அக்டோபர், 2009
ராடவன் கராட்சிக்கின் விசாரணை இன்று துவங்கியது
8:20 PM