தமிழகத்தைப்போல புதுவையில் முஸ்லிம்களுக்கு தனி இடஒதுக்கீடு ~ சஹாரா தமிழ்

ads

வியாழன், 24 டிசம்பர், 2009

தமிழகத்தைப்போல புதுவையில் முஸ்லிம்களுக்கு தனி இடஒதுக்கீடு


தமிழகத்தைப்போல புதுச்சேரியில் உள்ள முஸ்லிம்களுக்கு தனி இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று சமூகநீதி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

முஸ்லிம்களுக்கு முறையான இடஒதுக்கீடு வாங்கவும், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீட்டை பாதுகாக்க கோரியும் சமூக நீதிக் கூட்டம் நேற்று காலை சின்னசுப்புராயப்பிள்ளை வீதியில் உள்ள பிலிட்ஸ் இன் அரங்கில் நடந்தது. இந்த கூட்டத்திற்கு மக்கள் உரிமை கூட்டமைப்பு செயலாளர் சுகுமாரன் தலைமை தாங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழக தலைவர் பேராசிரியர் எம்.எச். ஜவாஹிருல்லா, மாநில துணை செயலாளர் ஜின்னா ஆகியோர் சிறப்புரை ஆற்றினர்.

இந்த கூட்டத்தில் மனித நேய மக்கள் கட்சி அஷ்ரப், த.மு.மு.க. தலைவர் அப்துல் ரஜாக் கான், லியாத்அலி, கிராம பஞ்சாயத்து தலைவர்களின் ஒருங்கிணைந்த கூட்டமைப்பு துணை அமைப்பாளர் ஜெகன்நாதன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

தீர்மானங்கள்

சிறுபான்மையின முஸ்லிம் மக்களுக்கு தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் வழங்குவது போல அவர்கள் எந்த பிரிவில் வருகிறார்களோ அந்தந்த பிரிவிலேயே பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் செய்துள்ள பரிந்துரையை ஏற்று 2.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்க உடனடியாக அரசாணை வெளியிட வேண்டும்.

புதுச்சேரியில் உள்ள மீனவர்களின் வாழ்க்கை நிலை கடைகோடி விளிம்பு நிலையில் உள்ளதால் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பில் இருந்து மீனவர்களுக்கு தனி இடஒதுக்கீடு வழங்கி உடனடியாக அரசாணை வெளியிட வேண்டும். பழங்குடியின மக்களுக்கு இடஒதுக்கீடு வழங்கி உடனடியாக அரசாணை வெளியிட வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. --Tmmk.in--

0 comments:

கருத்துரையிடுக

இன்றைய சித்திரம்

இன்றைய சித்திரம்