...மனிதன் ஆகு!... அல்லது சாமி(ஞானி)யார்? ~ சஹாரா தமிழ்

ads

வெள்ளி, 5 மார்ச், 2010

...மனிதன் ஆகு!... அல்லது சாமி(ஞானி)யார்?

http://www.filetransit.com/images/screen/2c8422531537a809707a29cdc87bbf3f_Free_Islamic_cartoon_screensaver.jpg

உண்மையான துறவறம் என்பது மனதில் பற்றற்று இருப்பதுதான். பத்திரிக்கைகளில் துறவறம் பேசும் வேஷதாரிகள், முற்றும் அறிந்தவர்போல் எழுதும்

(ஆ)சாமியார்கள் உண்மையில் சாமியார்கள் இல்லை। இவர்கள் பேசுவது ஞானம் இல்லை। வெறும் சாணம்।ஞானம் பேசலாம், எழுதலாம்। ஆனால் அது போல் வாழ வேண்டும்.இந்தியாவில் தோன்றிய ராமகிருஷ்ண பரமஹம்சர், வடலூர் வள்ளலார், திருச்சி தாயுமாண சுவாமிகள் மற்றும் ரமணர் போன்றோர்கள் மிக உண்மையான ஞானிகளாக இருந்தார்கள். இவர்கள் மூலம் ஞானமும் மக்களிடம் பரவியது.

தன்னை அறிந்தவர்கள் ஞானிகள். இவர்கள் இறைவனை அறிந்தவர்கள்.
உலகில் தோன்றிய எல்லா மதங்களிலும் சரியை இல்லை. கிரியை மற்றும் ஞானம் உள்ளது. சரியை என்ற ஷரீயத் இல்லை, அல்லது முழுமையாக இல்லை. இஸ்லாம் மார்க்கத்தில் மட்டும்தான் அது முழுமையாக உள்ளது.
ஒரு பெண் முஹம்மது நபி (ஸல்) அவர்களிடம் வந்து தனது மகன் சீனி (இனிப்பு) அதிகம் சாப்பிடுவதாகவும்

அதைக்கண்டிக்க வேண்டும் எனவும் வேண்டிக்கொண்டார்.முஹம்மது நபிகள் நாயகம் அவர்களோ நாளை வாருங்கள் என மூன்று நாட்களாகக்கூறி மூன்றாம் நாள் அந்த பையனிடம் இனிப்பு சாப்பிடக் கூடாது என்று அறிவுரை கூறினார்கள்.
இதைச்சொல்ல மூன்று நாட்கள் வரச்சொன்னீர்களே! என அப்பெண்மணி கேட்டார்கள். அதற்கு நபிகள் நாயகம் அவர்கள் மூன்று நாட்களில் சீனி சாப்பிடுவதை தான் முதலில் நிறுத்திவிட்டுத்தான் பிறகு அந்த சிறுவனிடம்
கூறியதாகக் கூறினார்கள். சொல்லும் செயலும் வாழ்க்கையும் ஒன்றாக இருந்தது நபிகள் நாயகம் அவர்களின் வாழ்க்கையில்!.முஹம்மது நபி அவர்களின் வாழ்க்கை குர் ஆனாக ( வேதமாக) இருந்தது என அவர்களின் மனைவி ஆயிஷா அவர்கள் கூறினார்கள். வேதம் முழுமை பெற்றது. அதுபோல் முஹம்மது நபி

அவர்களின் வாழ்க்கையும் முழுமை பெற்றதாக இருந்தது.இயற்கையாக எல்லாம் வெளியாகி இருக்கிறது. நெல்லிலிருந்து அரிசியை எடுத்து அதை சமைத்து சாப்பிடுகிறோம். முடி வெட்டிக்கொள்கிறோம், உடை அணிந்துக்கொள்கிறோம். பல் தேய்த்துக் கொள்கிறோம். நெல்லாக சாப்பிடுவோமா? உடை இல்லாமல்தானே பிறந்தோம்
எதற்கு உடை அணியவேண்டும்?
அப்படி இருப்பது இயற்கைதானே?

என்று நாம் சும்மா இருந்துவிடுவதும் இல்லை.மிருகங்கள் இதையெல்லாம்
செய்வது இல்லை. அது அப்படி படைக்கப்படவும் இல்லை. ஆனால் மனிதன் அப்படி இல்லை. ஆறறிவுடன் படைக்கப்பட்டுள்ளான். அறிவுடன் வாழ்வது மட்டும் இல்லாமல் இறைவனை/ தன்னை அறிய தன் சிந்தனையையும் மேம்படுத்திக் கொள்ள வேண்டும்.மனிதன் எல்லாவற்றையும் அடக்க அல்லது ஒடுக்க முடியாது.

ஆனால் அதை ஒழுங்கு படுத்த முடியும்! அதுதான் சரியுமாகும். இயற்கை உடல்
உபாதைகள், பசி, கோபம் இவைகளை அடக்கினால் மனிதன் உயிர் வாழ முடியாது. காமமும் அப்படித்தான். அதை அடக்கினால் மேழெழும்பும்!. அதை திருமணம் மூலம் ஒழுங்கு படுத்த முடியும். உலகில் பிறந்த நாம் இயற்கை அளித்த எல்லாவற்றையும் அனுபவிக்கிறோம். அதேசமயம் முறையாக

சீர்படுத்திச்செய்கிறோம் அல்லவா?. இது மனிதனுக்கு மட்டுமே உள்ள சிறப்பு. ஷரீயத் என்பது சீர்திருத்தப்பட்ட இயற்கைதான்!. இஸ்லாம் மதம் அதைத்தான் போதிக்கிறது.திருமணம் முடித்தவர்தான் என்னைச்சார்ந்தவர். திருமணம்
முடித்த பிறகு தான் ஒருவரின் ஈமான் (நன்னம்பிக்கை) பூர்த்தியாகிறது என்று
முஹம்மது நபி அவர்கள் கூறினார்கள். திருமணம் முடிப்பது ஒழுக்கநெறியை
மேம்படுத்தும். திருமணத்தின் மூலம் ஒரு மனிதன் தவறுகள் செய்வதிலிருந்து மிக எளிதாக தப்பித்துக்கொள்ளலாம். இல்லை என்றபோதுதானே தவறை
நாடிப்போகிறான்!.ம‌த‌ம் என்பது ஒரு வாழ்க்கை நெறி. அது பல பெயர்களில்
உள்ளது. மதம் கொடுக்கும் உயர்ந்த சிந்தனைகளை தவறாக விளங்கிக் கொள்வது மதத்தின் மீது குற்றமல்ல. தவறு நம்மிடம்தான் உள்ளது.நிறை ஞானிகள்தான் மக்களுக்கு நிம்மதியான வாழ்வழியை போதிப்பவர்கள். அவர்கள் யார் என்றால் தன் சொல்லையும் செயலையும் வாழ்க்கையையும் ஒன்றாக்கியிருப்பவர்கள்தான்.

வாருங்கள்!. சமூகத்தை சீர‌ழிக்கும் பொய்யான வேஷதாரி(சாமி)களிடமிருந்து
உண்மையை உணர மக்களே வாருங்கள்!.முதலில் மனிதன் ஆகு. பிறகு ஞானி ஆகலாம்.

ஆக்கம் : அதிரை இனியவன்

இன்றைய சித்திரம்

இன்றைய சித்திரம்