![]() ஹாஷிம் ஆம்லாவை பின்பற்றி, இந்திய அணியின் அதிரடி பேட்ஸ்மேன் யூசுப் பதானும் தன்னளவில் மதுபானத்திற்கு எதிரான போர்ப்பரணியை தொடங்கியிருக்கிறார். ஐ.பி.எல் ட்வென்டி&ட்வென்டி தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடி வரும் இவர், அதிவேக சதமடிப்பதில் பேர் பெற்றவர். இவர் மதுபான விளம்பரங்களை தனது சட்டையில் அணிவதில்லை என்ற துணிச்சலான முடிவினை மேற்கொண்டிருக்கிறார். தனது ஆட்டங்களின் போது சட்டையில் இருந்த கிங்ஃபிஷர் நிறுவன லோகோவை துணியால் மறைந்து களமிறங்கினார். மதுபான தயாரிப்பில் முன்னணியில் இருக்கும் கிங்ஃபிஷர் நிறுவனம் கிரிக்கெட் விளையாட்டின் முக்கிய ஸ்பான்சராகவும், பெங்களூரு ராயல் சேலஞ்ச் அணியின் உரிமையாளராகவும் இருந்து வருகிறது. இந்நிலையில் யூசுப் பதானின் இம்முடிவை சமூகநல ஆர்வலர்கள் பாராட்டுகின்றனர். குஜராத் மாநிலம் பரோடாவில் உள்ள பள்ளிவாசலின், மோதினார் என அழைக்கப்படும் தொழுகை அழைப்பாளரின் மகனான இவர், மதுபான ஒழிப்புக்கு தனது செயலின் மூலம் அழைப்பு விடுத்திருக்கிறார் என்றே சொல்ல வேண்டும். -அபூசாலிஹ்-www.tmmk.in |