ரயில் தண்டவாளத்தை குண்டு வைத்து தகர்த்த கொடும் செயல் தமுமுக கடும் கண்டனம் ~ சஹாரா தமிழ்

ads

திங்கள், 14 ஜூன், 2010

ரயில் தண்டவாளத்தை குண்டு வைத்து தகர்த்த கொடும் செயல் தமுமுக கடும் கண்டனம்

தமுமுக தலைவர் பேரா.எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் வெளியிடும் பத்திரிக்கை அறிக்கை
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவண்டி அருகே ரயில் தண்டவாளம் வெடிகுண்டு வைத்து தகர்க்கப்பட்டுள்ளது. ஓட்டுநரின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் மிகப்பெரிய விபத்து தவிர்க்கப் பட்டது.

நல்வாய்ப்பாக மலைக்கோட்டை விரைவு தொடர்வண்டி மற்றும் அதனைத் தொடர்ந்து வந்த பல தொடர்வண்டிகள் விபத்திலிருந்து தப்பின.

அப்பாவி மக்களின் உயிர்களைக் குடிக்க திட்டமிட்ட சதிகாரர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் கண்டனத்துக் குரியவர்களே. அப்பாவி மக்களின் உயிரை துச்சமாக மதித்து செயல்படுவர்களை கண்டுபிடித்து சரியான தண்டனை வழங்கப்பட வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம்.

உண்மையான சதிகாரர்கள் அவர்களின் பிண்ணனி குறித்து தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்படவேண்டும்.

சமீபகாலமாக தமிழ்நாட்டிற்கு வெளியே தொடர்வண்டிகள், தண்டவாளங்கள் மீதான தாக்குதல்களும் அப்பாவிகளின் உயிருக்கு உலை வைக்கப்படும் செய்திகள் அனைவரையும் கலங்க வைப்பதாக உள்ளது. இந்நிலை தமிழகத்திலும் தொடர மத்திய மாநில அரசுகள் அனுமதிக்கக் கூடாது. சதியும் சதிகாரர்களும் சாய்க்கப்பட அரசுகள் முழு முனைப்பு காட்ட வேண்டும்.

இன்றைய சித்திரம்

இன்றைய சித்திரம்