ஏழை, நடுத்தர மக்களை பாதிக்கும் பெட்ரோல், டீசல் விலை ஏற்றத்தை திரும்ப பெறுக மமக போராட்ட அறிவிப்பு ~ சஹாரா தமிழ்

ads

சனி, 26 ஜூன், 2010

ஏழை, நடுத்தர மக்களை பாதிக்கும் பெட்ரோல், டீசல் விலை ஏற்றத்தை திரும்ப பெறுக மமக போராட்ட அறிவிப்பு

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjO6Nx9uLiBakG1fLpFi5kj9IgvWWLg09SnS4rSw5fRANs74xpeSiVjJEDNjXGoPi1KLxYKKakz6Ju-X8sCzLh41K45qXY7hS2aHa-M02ZnfZZTKgD0qJ6w8IDAv4W0isQBOz60SkIyaqM/s320/mmk.JPGhttps://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgoa0JE9TBTnNCIbH5iuWDKT_Z_DAdrLl_wzeudC7J-Bo_e3ZAObucOJ8rcVYn-vmD8yYZMcPqGTxl3OczPJDOCiyoeMISEAfa2dID8Yc9UZWShnH46Ho7lLaHe5cFpgWvD-LltEGbHTYuq/s320/kalpakkam-2.jpg
ஏழை, நடுத்தர மக்களை பாதிக்கும் பெட்ரோல், டீசல் விலை ஏற்றத்தை திரும்ப பெறுக மனிதநேய மக்கள் கட்சி போராட்ட அறிவிப்பு!

மனிதநேய மக்கள் கட்சியின் பொதுச் செயலாளர் ப. அப்துல் சமது வெளியிடும் பத்திரிக்கை அறிக்கை:
அன்றாட வாழ்க்கையின் அவசிய தேவையான பெட்ரோல், டீசல், மண்ணெண்னை,சமையல் எரிவாயு விலை உயர்வு வன்மையாக கண்டிக்கத் தக்கது. மத்திய அரசின் இந்த மக்கள் விரோதப் போக்கினால் அத்தியாவச பண்டங்களின் விலை உயர்வு பன்மடங்கு பெருகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஏற்கெனவே கடும் விலைவாசி ஏற்றத்தினால் அவதியில் வாடும் ஏழை எளிய நடுத்தர மக்களுக்கு மத்திய அரசு கொடுத்திருக்கும் தண்டனை தான் இந்த பெட்ரோல், டீசல், மண்ணென்னை, சமையல் எரிவாயு விலை உயர்வாகும்.

பெட்ரோல் விலையை எண்ணெய் நிறுவனங்களே தீர்மானித்துக் கொள்ளலாம் என மத்திய அரசு உரிமை அளித்திருப்பது அவமானகரமானது. மத்திய அரசின் இந்த மக்கள் விரோத அறிவிப்பினை திரும்ப பெற வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சி கோருகிறது. மத்திய அரசின் இந்த அறிவிப்பினை எதிர்த்து தமிழகம் தழுவிய அளவில் மாபெரும் அறப்போராட்டத்தை நடத்த மனிதநேய மக்கள் கட்சி முடிவு செய்துள்ளது.

சென்னையில் மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் பெட்ரோல், டீசல், மண்ணெண்னை, சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து  வரும் 29.06.2010 (செவ்வாய்கிழமை) அன்று மாபெரும் அறப்போராட்டம் நடைபெறும். இதில் மனிதநேய மக்கள் கட்சியின் தொண்டர்கள் மற்றும் பெருந்திரளான பொது மக்களும் கலந்து கொள்வார்கள்.
நன்றி-  tmmk .இன்
முஸ்லிம் முன்னேற்றக் கழகம்,
துபாய்.



--

இன்றைய சித்திரம்

இன்றைய சித்திரம்