கொடிய வலியுடன் பிரசவமாகும் இந்திய ஹிந்து பயங்கரவாதத்தின் உண்மைகள்!! ~ சஹாரா தமிழ்

ads

வியாழன், 29 ஜூலை, 2010

கொடிய வலியுடன் பிரசவமாகும் இந்திய ஹிந்து பயங்கரவாதத்தின் உண்மைகள்!!

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiPf1_L0z-zj49AJquJKd8DdkDveR1BuXio1AZgz1lG120pRJdfhAO55z5YnWtooTh3eCsW6UMFC0NTTU49jv57eVPnFPp1u1djIM9d_SVJHwaLhAlWTc0k-jGBfm7AGme8dGZGBlleI0N8/s400/page30.jpgஇந்தியாவில் எங்கு குண்டுகள் வெடித்தாலும் தவறாமல் இஸ்லாமிய பயங்கரவாதம் என்று எந்த ஆதாரங்களும் முன்வைக்காமல் இந்திய அரச இயந்திரங்கள் இந்திய  அரச தனியார் மீடியாக்கள் , இந்திய சினிமா கூத்தாடிகள் என்று அனைவரும் ஒற்றுமையாக முஸ்லிம்களை பயங்கரவாதிகளாக காட்டும் ஒரு கூட்டு சதி நாசவேளையைதான் அண்மைக்காலம் வரையும் செய்துவந்தனர்.


பல இஸ்லாமிய அமைப்புகள் இது பற்றி பல கருத்தரங்குகள், போராட்டங்கள் என்பனவற்றை மேற்கொண்டும் எந்த பயனும் கிடைக்கவில்லை தற்போது நிறைவான ஆதாரங்களுடன் ஹிந்து பயங்கரவாத அமைப்பான ஆர் எஸ் எஸ் -R S S – பல உறுபினர்கள் சிக்கியுள்ளனர் இதை தொடர்ந்து இந்திய குண்டு வெடிப்புகள் பற்றிய ஒரு புதிய பார்வைக்கு அனைவரும் நிர்பந்திக்கபட்டுள்ளனர்.
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjO0oShWP5rRM2zKql959iiD6ni2cisjg5CnYVxWLvLBggIraMs9Xgmu90Wl0MQyEixmJNuYXidfxX2jkNbVZF4AMrjE-vXOUwGIrgbaatTcaP0ZtGJSZppnmfGgMoOKw6dwkjEKuWQip6n/s400/hindu%2520terror.jpg
இந்திய உள்ளாட்டு புலனாய்வு பிரிவான சிபிஐ -CBI- என்ற அமைப்பிடம் சிக்கியுள்ள பல முக்கிய வீடியோ ஆவணங்களில் சில முக்கிய விடியோக்களை சில தினங்களுக்கு முன்னர் இந்திய ஆங்கில செய்தித் தொலைக்காட்சி சேவையான ஹெட்லைன்ஸ் டுடே – Headline Today- என்ற செய்தித் தொலைக்காட்சி சேவை ஒலிஒளி பரப்பி ஹிந்து பயங்கரவாத அமைப்பான ஆர் எஸ் எஸ் -R S S – ன் முக்கியத் தலைவர்கள்தான் உண்மையான பயங்கரவாதிகள் என்ற உண்மை வெளியிட்டுள்ளது விரிவாக பார்க்க இந்த ஆர் எஸ் எஸ் – R S S -ன் பயங்கரவாத முக்கியத் தலைவர்கள் இந்தியாவின் குடியரசு துணைத் தலைவர் ஹமீத் அன்சாரியை கொல்வதற்கான திட்டங்களையும் வகுத்துள்ளனர் என்ற உண்மையும் வெளியாகியுள்ளது
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEii3uS-qDDQ_jCX0MdXExm1aaj4FCLtPVD4CcMVQHKUK1zUZKJI_gJJDZeILSXTUjeY6Taomzgwit9AXyWdGDPzKkN_udBs4htWrrPZdRXWT1UVkrC8CXMa7GaYxm3JvrV7-v6GAF5tuinp/s400/Rss_BJP_1.jpg
2007ஆம் ஆண்டு மே மாதம் ஹைதராபாத் மெக்கா மசூதி வளாகத்தில் நிகழ்ந்த சக்திவாய்ந்த குண்டுவெடிப்பில், 14 பேர் கொல்லப்பட்டனர் 50க்கும் அதிகமானவர்கள் காயமடைந்தனர் சம்பவம் நடந்தவுடனேயே, ஹர்கத்-உல்-ஜிகாத்-இஸ்லாம் – Harkat-ul-Jehad-e-Islami-HuJI- என்ற அமைப்பே இந்த குண்டுவெடிப்பிற்குக் காரணம் என்று ஹைதராபாத் போலீஸ் அறிவித்தது. அப்படி அறிவித்ததோடு மட்டும் அல்லாமல் முஸ்லிம் கள் 26 பேரைக் கைது செய்து, கட்டாயப்படுத்தி குற்றத்தை ஒப்புக்கொள்ளவைத்தது
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg79MEWaxTwnlQNoODCrcwE20Dai8bHZQDkqYK7_j6BW8sClSP_OcJx9knJrFsWGRzGT3c4Q2uNH68msgYWEACk8N03SZxtNBjvzzLst1Po5OPu36C0uh5ylZOF_Azk8QUYd5Z1GaCIGi7i/s400/hindu_0.jpg
ஆனால் இந்த வருடம் -2010- மே மாதம் இந்து மதம் போதிக்கும் இனவாத இயக்கத்தைச் சேர்ந்த நான்கு பேரை இந்த குண்டுவெடிப்பில் தொடர்புடையவர்கள் என்று சிபிஐ கைது செய்தது. அஜ்மீர் குண்டுவெடிப்பிற்கு பயன்படுத்தப்பட்ட, உலோகக் குழாய்களில் வெடிமருந்துகள் நிரப்பப்பட்டு செல்போனும் சிம் கார்டும் கொண்டு இயக்கப்பட்ட அதேவகையான வெடிகுண்டுதான் ஹைதராபாத் மக்கா மசூதி குண்டுவெடிப்பிலும் பயன்படுத்தப்பட்டிருப்பதை சி.பி.ஐ CBI- கண்டுபிடித்தது இந்த பயங்கரவாத அமைப்பை இயக்கியவர்களில் ஒருவன் இந்திரேஸ் குமார் இவர் ஆர் எஸ் எஸ்ல் பல முக்கியப் பொறுப்புகள் வகிப்பவர் இவன் தான் காஷ்மீர் அமர்நாத் நிலப் பிரச்சினையை தூபம் போட்டு வளர்த்தவர்களில் ஒருவன். 

குறிப்பாக ஆர் எஸ் எஸ்ன் முஸ்லீம் பிரிவு என்ற ஒன்றை உருவாக்கி அதன் பொறுப்பில் இருந்துகொண்டு ஹிந்துகளில் கோவில்கள் என்பனவற்றை குண்டு வைத்து தகர்த்து பல ஹிந்துகளை கொன்று பழியை முஸ்லிம்கள் மீது போடும் சதி நாசவேலைகளை வழிநடாத்தியவன்

கடந்த சில வருடங்களில் நடந்த பல குண்டு வெடிப்புகளில் ஆர். எஸ். எஸ்ன் சதி நாசவேலைகள் மீண்டும் மீண்டும் நிருபிக்கப்பட்டு வந்துள்ளது. குறிப்பாக, மலேகான் குண்டு வெடிப்பு கைதுகள் விரிவாக நடந்து அதில் ஆர் எஸ் எஸ்ன் நேரடி பாத்திரம் மறுக்க இயலாத அளவு அம்பலமானது. ஆயினும் ஆர் எஸ் எஸை தடை செய்யவோ அதன் அலுவலகங்களை சோதனையிட்டு வெடிகுண்டுகளை பறிமுதல் செய்யவோ அரசு தயாராக இல்லை என்று குற்றசாட்டுகள் தற்போது எழுந்துள்ளது

மஸ்ஜிதுகளில் முஸ்லிம்களை கொன்று பலியை முஸ்லிம்கள் மீது போடும் சதி நாசவேலைகள் ஈராக் , ஆப்கான் , பாகிஸ்தான் , கஷ்மீர் போன்ற நாடுகளில் சாதாரணமாக நடைபெறுகின்றது அதே போன்ற சதி நாசவேலைகள் இந்தியாவிலும் தொடர்ந்து கண்டுபிடிக்கபட்டு வருகின்றது

அஜ்மீர் குண்டுவெடிப்பு தொடர்பாக தேவேந்திர தாஸ்குப்தா, சந்திரசேகர் என்ற இரண்டு ஆர்.எஸ்.எஸ். பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டனர். இருவரை யும் ராஜஸ்தான் மாநில பயங்கரவாதத் தடுப்புப்படை கைது செய்தது.

இந்த இரண்டு தீவிரவாதி கள் மட்டுமன்றி மாலேகான் குண்டுவெடிப்பு பயங்கரவாதி களான பெண் சாமியார் பிரக்யா சிங், மற்றும் ராணுவத்தில் இருந்து கொண்டு ஹிந்துத்துவா இயக்கத்திற்கு ஆதரவாக செயல்பட்டு கர்னல் ஸ்ரீகாந்த் புரோகித் போன்றவர்களும் மீதும் அவர்களுக்கு எதிரான ஆதாரங்கள் வெளிவந்தவனம் உள்ளன.




மாலேகான் குண்டுவெடிப்பு

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjj7An-87kv9ZBAt18zaiLy6qqhddNaBnVqGfUMnRejc8ZDVVaix4A4594Mp1ULjgcMt63OMBRCcIXSa3Im09cbVZN0J-IgyGWPHjax-gt4Vr15DfOTB0QFsOf6CmICVmt59TEUVMQIOSsz/s400/malegaon_blast2_20100709.jpg 

சம்ஜவுதா ரயில் குண்டுவெடிப்பு

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjA7V7-0jbwEq4anvfvi0I-y12f_1B5mvSV600RAa3TVU8Le5Thy98pkM_LnjElvoslMrGQpyA7fUzhX11wdX482krQ2JQv-QDgSZXHt5Joc_HgZ1RNKaAoel7ysbDTkMsOJxHy1cfozHjG/s400/Ne030307Target_peace.jpg 

மக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்பு 

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgisaOmDhvSbqX-3UPXkYpKEjqzxd9Y9bVB-FFdtd62h3qlYrHVs-ki8ZO2QRAUUXoRLNQ8I8t7CwrJ6iQB7uGJX0dBhnSFKxgbToOolHAlhzQavc8QPYhwoA_vdUBAERVaRa1U7JaTEsY1/s400/Mecca_Masjid_20100709.jpg                       

அஜ்மீர் குண்டுவெடிப்பு

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhGr5FEU8oS0Cvus-gwZy1OzKKFz4Owg0FiMpfEIVtXKeTac3oGxRCKGDZM6Q4yS0x2ZI0h5HPd3rO-30UP21jlDW3cjUtYnJf27pabhyNF_6y-xKOxxwF5-LIELfr93zpJa3zjoh2eg9VP/s400/ajmer-blast22_26.jpg 

                                                                                                    M.ரிஸ்னி முஹம்மது

இன்றைய சித்திரம்

இன்றைய சித்திரம்