ம.ம.கவின் அரசியல் கண்ணியம் (மடல்கள்) வாக்காளர்கள் அவசியம் படிக்க வேண்டியது ~ சஹாரா தமிழ்

ads

ஞாயிறு, 6 மார்ச், 2011

ம.ம.கவின் அரசியல் கண்ணியம் (மடல்கள்) வாக்காளர்கள் அவசியம் படிக்க வேண்டியது

http://makkalavaitherdhal2009.files.wordpress.com/2009/04/e0aeaee0aea9e0aebfe0aea4e0aea8e0af87e0aeaf-e0aeaee0ae95e0af8de0ae95e0aeb3e0af8d-e0ae95e0ae9fe0af8de0ae9ae0aebf.jpg?w=420&h=282
http://t2.gstatic.com/images?q=tbn:ANd9GcS-m9gEceU0ypQzTz_9DK2EtKaw20mCB_Eam-7PUYhaDHQyL9Hg&t=1
2007  மனிதநேய மக்கள் கட்சி தொடக்கம்...


2011 தனிச்சின்னத்தில் மூன்று தொகுதிகள்... (அல்லாஹ் அக்பர்)http://tmmk.in/images/stories/Election/agree-1.jpghttp://tmmk.in/images/stories/Election/media/thehindu.jpg

http://2.bp.blogspot.com/_JZgbPH6iyzw/TCxHu_k0j6I/AAAAAAAAAb8/9jpGLziQ0rY/S269/mmk+and+tmmk.JPG
 http://t0.gstatic.com/images?q=tbn:ANd9GcSsM6TQze4CejxVnjB2K5378093a1Fq9QKz26lUXvRaM4umPjUp&t=1

மூன்று தொகுதிகள் வாங்கியது ஏன்? - வெளிவந்த கேள்வி-பதில் குறித்து மக்கள் உரிமையில் பிரசுரமான வாசகர் மடல்களை இங்கே பதிவு செய்யவும்.

தனித்து போட்டியிடாதது நல்லதே

ஜெயலலிதா மூன்று தொகுதி களுக்கும் குறைவாக கொடுத்தி ருந்தால், மமக தனித்து போட்டியிடும் முடிவை எடுத்திருந்திருக்கலாம். சமுதாயத்தின் அரசியல் உரிமைகளுக்காக, மீண்டும் தியாகம் செய்கிறார்கள் என சமுதாயம் பாராட்டியிருக்கும். 20 அல்லது 30 தொகுதிகளில் தனித்துப் போட்டி யிட்டு, ஒரு தொகுதிக்கு 2000 முதல் 10,000 ஆயிரம் வாக்குகளை பிரிக்கும் வல்லமை மமகவுக்கு உண்டு. ஆனால், இப்போது சட்டமன்றத்தில் முழக்கமிட உடனடியாக சமுதாயத்திற்கு பிரதிநிதிகள் தேவை. எனவே, தனித்துப் போட்டியிடுவது இப்போதைக்கு நல்லதல்ல. எனவே, தனி சின்னத்தில் மூன்று தொகுதிகளை பெற்றது ஒரு நல்ல துவக்கம்தான். எனவே குறைவான தொகுதிகள் வேண்டாம் என்று அவசரப்பட்டு தனித்து போட்டியிடும் முடிவை எடுக்காதது நல்லதாகும். சமுதாயம் உங்கள் பின்னால் அணிவகுக்கிறது என்பதை மனதில் கொண்டு, அடுத்த தேர்தலில் கூடுதல் தொகுதிகளை பெற முயற்சி செய்யுங்கள்.

எஸ்.ஜஹாங்கீர், தூத்துக்குடி

கௌரவம்

மூன்று தொகுதிகளை தனி சின்னத்தில் போட்டியிடும் வகையில் மமக பெற்றது பாராட்டுகுரிய விஷயம். அதிமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்டு கட்சிக்கு அடுத்தபடியான வரிசையில் மமக இடம்பெற்றது சமுதாயத்திற்கு கிடைத்த கௌரவமாகும்.

உஸ்மான் அலி, ராணிப்பேட்டை


வெங்காயம்

மூன்று தொகுதிகளை பெற்றதை பாராட்டாமல், ஒரு சில பொறாமை கூட்டம் மமக&வை விமர்சிக்கிறது. ஒருவேளை 12 தொகுதிகளை பெற்றிருந்தால் மட்டும் இவர்கள் பாராட்டியிருப்பார்களா? என்றால் நிச்சயம் பாராட்டியிருக்க மாட்டார்கள். இதுபோன்ற ‘வெங்காய’ கூட்டம் 50 தொகுதிகளை வாங்கியிருந்தாலும், அதற்கு ஒரு உள்நோக்கம் கற்பித்து விமர்சித்திருக்கும் என்பதுதான் உண்மை.

டி.அன்வர் உசேன், பாளையங்கோட்டை


அருகதை இல்லை

மமக தன்னந்தனியாக தன் பலத்தை காட்டி 3 தொகுதிகள் வாங்கியது நல்ல துவக்கம் என்பதை யாரும் மறுக்க முடியாது. தமிழ்நாட்டில் உள்ள எல்லா பள்ளிவாசல்களுக்குள்ளும், நாங்கள் மட்டும்தான் சொற்பொழிவு ஆற்ற முடியும் என்றும், நாங்கள் 60 வருட கட்சி என்றும், தேசிய கட்சி என்றும் முழக்கமிடும் முஸ்லீம் லீக்கினரால், உதய சூரியன் சின்னத்தில் தான் மூன்று தொகுதிகளை வாங்க முடிந்திருக்கிறது.

கடந்த 2006 ஆண்டு தேர்தலில், 10க்கும், மேற்பட்ட முஸ்லிம் அமைப்புகளோடு ஜெயலலிதாவை சந்தித்த பீ.ஜே. 10 அமைப்பின் பலத்தை காட்டி, தேசியலீக் கட்சிக்கு இரட்டை இலையில் தான் இரண்டு தொகுதிகளை வாங்கி கொடுக்க முடிந்தது. அப்போது பாக்கரின் பலம் டி.என்.டி.ஜே அமைப்பில் இருந்தது என்பது கவனிக்கத்தக்கது.

இதையெல்லாம் ஒப்பிடும்போது தனித்த பலத்தை காட்டி, மூன்று தொகுதிகளை தனிச் சின்னத்தில் போட்டியிடும் வகையில் பெற்ற ம.ம.க.வை குறை சொல்ல எந்த அமைப்புகளுக்கும் அருகதை இல்லை.

எம்.சிராஜூதீன், சென்னை-21

எதிர்காலத்தில் 10

மூன்று தொகுதிகள் ஏன்? என்ற விளக்கம் எங்கள் அனைவரையும் மிகவும் சிந்திக்க வைத்தது. 20 ஆண்டுகளில் காணாமல் போன, நம் சமுதாயத்தின் அரசியல் தன்மானத்தை மீட்டெடுத்த, மமகவின் ராஜதந்திரத்தையும், உணர்ச்சிவசப்படாத நிதானத்தையும் பாராட்டுகிறோம். சொந்த சின்னத்தில் மூன்று தொகுதிகளில் வெற்றி சூட துஆ செய்கிறோம். 2011&ல் தமிழகத்தில் மூன்று தொகுதிகள்; புதுச்சேரியில் 1 தொகுதி! இன்ஷா அல்லாஹ் 2016&ல் 10 தொகுதிகள் என்ற லட்சியத்தோடு பணியாற்றுங்கள்.

எஸ்.முகம்மது உசேன், கே. பீர்முஹம்மது, சீ.சதாம் உசேன் & பெங்களூர்.

சமுதாயத்தில் உயர்வு

குறைந்தது 5 தொகுதிகள் கிடைந்திருந்தால் நமக்கு மிக, மிக மகிழ்ச்சியாக இருந்திருக்கும், என்றாலும், 5 தொகுதிகளுக்காக நீங்கள் நடத்திய உள்போராட்டம் குறித்த விவரங்களை படித்தபோது, தொகுதி எண்ணிக்கைகள் குறைந்தாலும், சமுதாயத்தில் மதிப்பீடுகளில் பல மடங்கு உயர்ந்து விட்டீர்கள். கூடுதல் தொகுதிகளுக்காக போராடிய உங்களுக்கு, இரு உலகிலும் கூலி கிடைக்க பிரார்த்திக்கிறோம்.

ஆர்.இஸ்மாயில் பாகவி, சென்னை-1


அரசியல் கண்ணியம்


இரட்டை இலையில் போட்டியிட்டிருந்தால், 12 தொகுதிகளும் கிடைத்திருக்கும். முழு செலவையும் அதிமுகவே ஏற்றிருந்திருக்கும். ஆனால் ம.ம.க.வைச் சேர்ந்த 12 பேர் எம்.எல்.ஏ.க்களாக பதவிகளை பெற்றிருந்திருக்கவும் முடியும். ஆனால், பதவிகளுக்கும் , பணத்திற்கும் ஆசைப்படாமல், சமுதாயத்தின் அரசியல் கண்ணியத்திற்காக போராடிய மமகவின் தலைமையை பாராட்டுகிறோம். இப்போது சொந்த சின்னத்தில் போட்டியிடுவதால், உங்களுக்கு கூட்டணி கட்சிகள் பணம் தர மாட்டார்கள். திமுக ஒரு தொகுதிக்கு 5 கோடி ரூபாய் செலவு செய்ய உள்ளதாக கூறப்படுகிறது. பணம் இல்லையே என கலங்காதீர்கள். உங்களின் போராட்ட உணர்வுகளுக்கும், அடங்க மறுக்கும் தன்மான சிந்தனைகளுக்கும் அரணாக மாணவர்களாகிய நாங்கள் இருப்போம். வீடு, வீடாக சென்று நிதி திரட்டவும், களப்பணியாற்றவும் மாணவர்கள் நாங்கள் தயாராக இருக்கிறோம். வல்லமை மிக்க அல்லாஹ்வை நம்புவோம். அவன் நமக்கு உதவி செய்வோம்.

எம்.லியாக்கத்அலி, எஸ்.முஸ்டாக், இரண்டாமாண்டு புதுக்கல்லூரி மாணவர்கள், சென்னை-14

அந்த தொண்டர்கள் நல்லவர்கள்


மமகவின் வளர்ச்சியை கண்டு சகோதரர் பி.ஜெ. மிகவும் பயப்படுகிறார். 15 மாவட் டங்களில் வலுவாக செயல்படும் பா.ஜ.கவை எதிர்த்து தீர்மானம் போடாதவர், மமக&வை தோற்கடிப்போம் என சவால் விட்டது, அவருக்கு ஏற்பட்டுள்ள மிகப்பெரும் சறுக்கலாகும். ததஜ அமைப்பின் மாநில நிர்வாகிகளிடமும், பல மாவட்ட நிர்வாகிகளிடமும் இவ்விஷயத்தில் இருவேறு கருத்துகள் நிலவுகிறது. எனவே, பி.ஜெ. என்ற ஒரு நபர் மீது உள்ள கோபத்தில், முழு டி.என்.டி.ஜே. சகோதரர்களையும் நீங்கள் தவறாக நினைக்க வேண்டியதில்லை. ஏராளமான டி.என்.டி.ஜே சகோதரர்கள் மமக போட்டியிடும் தொகுதிகளில் எப் படியாவது வெற்றி பெறுங்கள் என வாழ்த்தி துஆ செய்கிறார்கள். டி.என்.டி.ஜே சகோதரர்களில் பெரும்பாலோர் நேரடி யாக ஆதரிக்காவிட்டாலும், நிச்சயம் நீங்கள் போட்டியிடும் தொகுதிகளில் எதிர்க்க மாட்டார்கள் என்பது உறுதி. வெளியூர்களிலிருந்து அதன் தலைமை, ஆட்களைத் திரட்டி வந்து எதிர்ப்பாக வேலை செய்யும். நீங்கள் கவலைப்படாமல், அல்லாஹ்வின் மீது உறுதியான நம்பிக்கை வைத்து, பணியாற்றுங்கள். பல தரப்பு தவ்ஹீது சகோதரர்களின் ஆலோசனையாக இதை கவனத்தில் கொள்ளுங்கள்.

ஹெச்.சகாபுதீன், கடலூர்.


அன்றும் இன்றும்


இப்போது கலைஞர் முஸ்லீம் லீகிற்கு 3 தொகுதிகளை உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும் வகையில் கொடுத்துள்ளார். இது திமுகவில் உள்ள முஸ்லிம்களின் இட ஒதுக்கீட்டிலிருந்து பெறும் உள் ஒதுக்கீடாகும். 2006& தேர்தலில் முஸ்லீம் லீக்கிற்கு இரண்டு தொகுதிகளைத் தான் கொடுத்தார். இப்போதும் அதே நிலையில் தான் திமுக இருந்தது. ஆனால் ஜெயலலிதா மமகவுக்கு தனி சின்னத்தில் 3 தொகுதிகளை ஒதுக்கியதால், பதறிப்போன கருணாநிதி, முஸ்லிம் லீக்கிறகும், 3 தொகுதிகளை ஒதுக்கியுள்ளார். முன்பு 2006 தேர்தலில் முஸ்லீம் லீகிற்கு கூடுதல் தொகுதிகளை ஒதுக்க வேண்டும் எனது தமுமுகு போராடியது. இப்போது எதிர்அணியில் இருந்தபோதும் தமுமுகவால் தான் முஸ்லீம் லீக்கிற்கு 3 தொகுதிகள் கிடைத்துள்ளது என்பது உண்மை. என்னவாயினும் முஸ்லீம் லீக்கும், மமகவும் ஒரே தொகுதிகளில் மோதாமல் வெவ்வேறு தொகுதிகளில் போட்டியிடும் வகையில் தொகுதிகளை பெற வேண்டும்.

இர்பான், தாம்பரம்

http://mudukulathur.com/wp-content/uploads/2010/08/TMMK_blood1.jpg
                                                                                  
                                              More Info Please Visit - www.tmmk.in

இன்றைய சித்திரம்

இன்றைய சித்திரம்