கச்சத்தீவு - தமிழக எம்.பி.க்கள் ஓரணியில் குரல் கொடுக்க வேண்டும் : பேரா.எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் ~ சஹாரா தமிழ்

ads

ஞாயிறு, 3 ஜூலை, 2011

கச்சத்தீவு - தமிழக எம்.பி.க்கள் ஓரணியில் குரல் கொடுக்க வேண்டும் : பேரா.எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ்

http://www.mmkparty.net/uploads/5/9/5/8/5958386/221605.jpg 
கச்சத்தீவு பிரச்சினை குறித்து நாடாளுமன்றத்தில் தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஓரணியில் குரல் கொடுக்க வேண்டும் என்று மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லாஹ் கேட்டுக் கொண்டுள்ளார்.

மனிதநேய மக்கள் கட்சி மாநில தலைவர் ஜவாஹிருல்லாஹ் வெள்ளிக்கிழமையன்று மதுரை வந்தார். அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது :
தமிழகத்தில் அ.தி.மு.க. ஆட்சி வந்ததும் மக்கள் நலத் திட்டப் பணிகள் சிறப்பாக நடந்து வருகிறது. இது வரவேற்கத்தக்கது. முதல்வர் ஜெயலலிதா மக்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை அறிவித்துள்ளார். தமிழக மீனவர்களின் நலனை கருத்தில் கொண்டு கச்சத்தீவை மீட்க சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இலங்கை தமிழர்களை பேணும் வகையில் இலங்கையில் தமிழர்களுக்கு தனி அந்தஸ்து கிடைக்க வேண்டும். இலங்கை அதிபர் ராஜபக்சேவை போர் குற்றவாளியாக அறிவித்தது, பொருளாதாரத் தடை விதிக்க் கோரி சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது பாராட்டத்தக்கது. இதில் மத்திய - மாநில அரசுகள் விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும். 


கச்சத்தீவு பிரச்சனை, இலங்கை தமிழர் பிரச்சனை குறித்து நாடாளுமன்றத்தின் மக்களவையிலும் மாநிலங்களவையிலும் தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கட்சிப் பாகுபாடின்றி ஓரணியில் குரல் கொடுக்க வேண்டும்.

சமச்சீர் கல்வியை அவசர கோலத்தில் கடந்த ஆட்சியில் நடைமுறைப்படுத்தியது. அதனை அ.தி.மு.க. அரசு ஓராண்டு நிறுத்தி வைத்து அதனை ஆராய நிபுணர் குழுவை அமைத்ததை பாராட்டுகிறோம்.

மதுரை அனுப்பானடியில் ஆடுகளை எந்திரத்தின் மூலம் அறுக்கப் படுகிறது. ஆடுகளை ஹலால் முறைப்படி அறுக்க வேண்டும். எந்திரம் மூலம் அறுக்கப்படுவதை தவிர்க்கப்பட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.


- இந்நேரம்.காம் 

இன்றைய சித்திரம்

இன்றைய சித்திரம்