மமகவின் பொதுக்கூட்டங்கள் ~ சஹாரா தமிழ்

ads

சனி, 16 ஜூலை, 2011

மமகவின் பொதுக்கூட்டங்கள்



மேலைப்பாளையத்தில் பொதுக்கூட்டம் 

திருநெல்வேலி (கி) மாவட்டம் மேலப்பாளையத்தில் கடந்த 02.07.2011 அன்று பஜார் திடலில் மனிதநேய மக்கள் கட்சியின் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்தப் பொதுக் கூட்டத்திற்கு மாவட்டச் செயலாளர் ரசூல் மைதீன் தலைமை தாங்கினார்.

தமுமுக பொருளாளர் .யு. ரஹ்மத்துல்லாஹ், துணைப் பொதுச் செயலாளர் ஜே.எஸ். ரிஃபாயி,மமக பொருளாளர் ஹாருன் ரஷித், துணைப் பொதுச் செயலாளர் எம். தமிமுன் அன்சாரி ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
மாவட்டத் தலைவர் பாளை பாரூக், மாவட்டச் செயலாளர் காசிம் பிர்தௌசி, மாவட்டப் பொருளாளர் சர்தார் அலிக்கான் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்தப் பொதுக்கூட்டத்தில் பெருந்திரளான மக்கள் கலந்து கொண்டனர்.


நெல்லை-ஏர்வாடியில் ..கவின் வெற்றிப் பொதுக்கூட்டம்.

திருநெல்வேலி (கி) மாவட்டம் ஏர்வாடியில் கடந்த 09.07.2011 அன்று மனிதநேய மக்கள் கட்சியின் வெற்றிப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்தப் பொதுக்கூட்டத்திற்கு நகரத்தலைவர் பக்ருதீன் அலி அஹமது தலைமை தாங்கினார். நகரச் செயலாளர் பீர் முஹம்மது வரவேற்புரையாற்றினார்.

.. தலைவர் பேரா. எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ், துணைப் பொதுச் செயலாளர் எம்.தமிமுன் அன்சாரி, தமுமுக மாநிலச் செயலாளர் பி.எஸ். ஹமீது, ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் அஸ்லம் பாட்ஷா, நாங்குநேரி எம்.எல். எர்ணாகுளம் நாராயணன், மாவட்டத் தலைவர் மைதீன் பாரூக், மாவட்ட செயலாளர் ரசூல் மைதின், தலைமை கழகப் பேச்சாளர் ஏர்வாடி ரிஸ்வான் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர்.
இந்தப் பொதுக்கூட்டத்தில் திரளான மக்கள் கலந்து கொண்டனர்.


கடைய நல்லூரில் பொதுக்கூட்டம்

 
திருநெல்வேலி (மே) மாவட்டம் கடையநல்லூரில் கடந்த 03.07.2011 அன்று காயிதெமில்லத் திடலில் மனிதநேய மக்கள் கட்சியின் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்தப் பொதுக்கூட்டத்திற்கு நகரத் தலைவர் செய்யது மசூது தலைமை தாங்கினார். நகரச் செயலாளர் உதுமான் வரவேற்புரை ஆற்றினார்.

இந்தப் பொதுக்கூட்டத்தில் தமுமுக பொருளாளர் .யு. ரஹ்மத்துல்லாஹ், மாநிலதுணைப் பொதுச் செயலாளர் ஜே.எஸ். ரிஃபாய், மனிதநேய மக்கள் கட்சயின் பொருளாளர் ஹாருன் ரஷீத், துணைப் பொதுச் செயலளார் எம். தமிமுன் அன்சாரி, தமுமுக மாநில துணைச் செயலாளர் காதர் மைதன் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர்.

.. மாவட்டத் தலைவர் மைதீன் சேட்கான், தமுமுக மாவட்டச் செயலாளர் நயினார் முகம்மது ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர துணைத் தலைவர் அபுபக்கர் சித்திக் நன்றியுரை கூறினார். இந்த பொதுக் கூட்டத்தில் திரளான மக்கள் கலந்து கொண்டனர்.

இன்றைய சித்திரம்

இன்றைய சித்திரம்