என்னை ஆளுங்கட்சியில் உட்கார வைத்து அழகு பாருங்கள்... விஜயகாந்த் ~ சஹாரா தமிழ்

ads

வெள்ளி, 22 பிப்ரவரி, 2013

என்னை ஆளுங்கட்சியில் உட்கார வைத்து அழகு பாருங்கள்... விஜயகாந்த்

https://encrypted-tbn0.gstatic.com/images?q=tbn:ANd9GcRehxTAQMwoLFxSqPKOVH_CNUsNebTEy0O9NmcIP2f4kNmfbqDq
ரிஷிவந்தியம், பிப்21 : என்னை ஆளுங்கட்சியில் உட்கார வைத்து அழகு பாருங்கள். நான் என்ன செய்கிறேன் என்று பாருங்கள் என்று கூறியுள்ளார் தேமுதிக தலைவர் விஜயகாந்த்.

திருக்கோவிலூர் மற்றும் ரிஷிவந்தியம் தொகுதிகளில் நேற்று நடந்த பல்வேறு நிகழ்ச்சிகளில் தேமுதிக. தலைவர் விஜயகாந்த் கலந்து கொண்டார்.

அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது..

தமிழக அரசின் சாதனைகளை விட வேதனைகள் தான் அதிகம் இருக்கிறது. எங்கள் கட்சி எம்.எல்.ஏ.க்கள் முதல்வரை பார்த்து தொகுதி பிரச்சினை பற்றி பேச கடிதம் கொடுத்து 3 மாதமாகிறது. ஆனால் இன்னும் அதற்கு பதில் இல்லை.

நாங்கள் என்ன வீடு, நிலம் கேட்கப்போகிறோமா? மக்களின் பிரச்சினைகள் பற்றி தான் கூறப்போகிறோம். அதற்கு கூட தேதி இன்னும் கொடுக்கவில்லை.

ஆளும் கட்சியினர் எப்போது வேண்டுமானாலும் ஆர்ப்பாட்டம் நடத்திக் கொள்ளலாம். நாங்கள் ஆர்ப்பாட்டம் நடத்த காவல்துறை மூலம் அனுமதி மறுக்கப்படுகிறது. காவிரி பிரச்சினை குறித்து பேச கர்நாடகா முதல்வர் அனைத்துகட்சி கூட்டத்தை கூட்டி உள்ளார். ஆனால் தமிழக முதல்வர் காவிரி பிரச்சினை பற்றி பேச அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டவில்லை. பிறகு எப்படி உங்களால் தண்ணீர் வாங்க முடியும்?

கட்சி பாகுபாடு இல்லாமல் எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்கள் தொகுதி வளர்ச்சி திட்டபணிகளுக்கு நிதி ஒதுக்கப்படுகிறது என்று முதல்வர் கூறுகிறார். தேமுதிக எம்.எல்.ஏ.க்கள் தொகுதிகள் புறக்கணிக்கப்படுகிறது.

யார் வேண்டுமானாலும், சொல்லி விடலாம். என்னை ஆளுங்கட்சியில் உட்கார வைத்து அழகு பாருங்கள். நான் என்ன செய்கிறேன் என்று பாருங்கள்.

தூக்குதண்டனை விதிக்கப்பட்ட வீரப்பன் கூட்டாளிகள் ஏற்கனவே 20முதல் 23 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்து விட்டார்கள். அவர்களுக்கு தூக்கு தண்டனை தேவையில்லை என்பது என் கருத்து.

நாடு நன்றாக இருக்க வேண்டும். அதற்காக எதிர்க்கட்சி தலைவர் பதவியில் இருந்து விலகி விட்டு என் எம்.எல்.ஏ.க்களை உங்களிடம் அனுப்பி வைக்கிறேன். நாடும், நம்நாட்டு மக்களும் நன்றாக இருந்தால் போதும். அதற்காக எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்க வேண்டாம் என்றார் விஜயகாந்த்.

இன்றைய சித்திரம்

இன்றைய சித்திரம்