ராஜ்பக்‌ஷேவை பழிக்குப் பழி வாங்கிய கனடா! ~ சஹாரா தமிழ்

ads

புதன், 30 ஜூலை, 2014

ராஜ்பக்‌ஷேவை பழிக்குப் பழி வாங்கிய கனடா!



டொரண்டோ: இலங்கை அதிபர் ராஜபக்சேவை பழிக்குப் பழி வாங்கும் விதமாக அவரது விமானம் தரையிறங்க கனடா அரசு அனுமதி மறுத்துள்ளது.
இலங்கை அதிபர் ராஜபக்சே கனடா வழியாக கியூபாவிற்கு பயணம் மேற்கொண்டார். அப்போது, அவரது விமானத்துக்கு பெட்ரோல் (எரிபொருள்) தேவைப்பட்டது. அதற்காக கனடாவில் தரை இறங்க அனுமதி கோரப்பட்டது.

ஆனால் ராஜபக்சே விமானம், கனடாவில் தரை இறங்க அனுமதி தர அந்நாட்டு அரசு மறுத்து விட்டது. எனவே, அவர் பயணம் செய்த விமானத்துக்கு அங்கு பெட்ரோல் நிரப்பப்பட வில்லை. இந்த தகவலை லங்காஸ்ரீ ரேடியோவின் ஆய்வாளர் சுதர்மா தெரிவித்தார்.

கனடா அரசின் அதிகார பூர்வமான குழு சமீபத்தில் இலங்கை சென்றபோது, அந்த குழுவை இலங்கை வெளி விவகார அமைச்சர் ஜி.எல்.பெரீஸ் அவமதித்து அனுப்பியதாக தெரிகிறது. அதற்கு பழிவாங்கும் விதமாக இந்த நடவடிக்கையை கனடா அரசு மேற்கொண்டதாகத் தெரிகிறது.

Source-inneram.com

இன்றைய சித்திரம்

இன்றைய சித்திரம்