மோடியின் மௌனம்... ~ சஹாரா தமிழ்

ads

சனி, 2 ஆகஸ்ட், 2014

மோடியின் மௌனம்...பெட்ரோல் விலை உயர்வு - மவுனம்

ரயில் கட்டணம் விண்ணை முட்டும் அளவுக்கு உயர்வு - மவுனம்

வெங்காய விலை சர்ர்ர்............... - மவுனம்

தக்காளி விலை கிடு கிடு......... ( தக்காளி பணக்காரர்களுக்கான உணவு, ஏழைகள் அதைப்பற்றி யோசிக்கவே கூடாது என தனது அமைச்சரவையில் உள்ள அமைச்சரே கூறும் அளவுக்கு விலை உயர்வு) - அதே மவுனம்

இலங்கை கடற்படையால் தமிழக் மீனவர்கள் தினமும் கைது - மவுனம்

கச்சத்தீவு விவகாரம் - மவுனம்

சுப்ரமணிய சுவாமியின் இலங்கை பயணம், ராஜபக்‌ஷேவுக்கு ஆதரவான பிஜேபியின் நிலைப்பாடு - மவுனம்

சுவிஸ் வங்கியில் இந்தியர்கள் பணம் விவகாரம் - மவுனம்

ரயில் பயணம் என்பதே பணக்காரர்களுக்கு என்பது போல இரண்டாம் வகுப்பு பெட்டிகள் முற்றிலும் அகற்ற திட்டம் - மவுனம்

இவை எல்லாவற்றிக்கும் மேலாக ஒரு மாநில முதல்வர் தனக்கு எழுதிய கடிதங்களை கொச்சை படுத்தி ஒரு நாடு கருத்து வெளியிட்டு உள்ளது இதற்கும் கொஞ்சம் கூட வாய் திறக்காமல் அதே மவுனம்.

மவுனம் மவுனம் மவுனம்..............

முன்னாள் பிரதமர் மான்புமிகு டாக்டர் மன்மோகன் சிங் அவர்களை ரோபோ பிரதமர் என வர்ணித்த வெக்கங்கெட்ட ஊடகங்களே, இப்போது எந்தப்பிரச்சனைக்குமே வாயே திறக்காமல் சைலண்ட் மோடிலேயே இருக்கும் உங்கள் 56 இன்ச் மார்பளவு கொண்ட வீர பிரதமருக்கு என்ன பட்டம் கொடுத்து அழைக்கப்போகிறீர்கள்?


Source- எனதூர் கடையநல்லூர்
‪#Mohamedharis

இன்றைய சித்திரம்

இன்றைய சித்திரம்