மீண்டும் ஓர் "நில்லாடிய நிலமெங்கே.. சொல்லாடிய அவை எங்கே ...,காசா" ~ சஹாரா தமிழ்

ads

சனி, 2 ஆகஸ்ட், 2014

மீண்டும் ஓர் "நில்லாடிய நிலமெங்கே.. சொல்லாடிய அவை எங்கே ...,காசா"இரண்டாம் உலகப் போரில் ஹிட்லரின் இனப் படுகொலை வெறிக்கு பலியான யூதர்கள் ஜெர்மனியை விட்டு ஓடினார்கள் .,

அமேரிக்கா , பிரிட்டன், பிரான்சு போன்ற நாடுகள் அடைக்கலாம் தர மறுத்தன., ஆனால் யூதர்களைப் பாதுகாப்பாக கப்பலில் ஜெர்மனியில் இருந்து மீட்டன .,

அப்போது அனாதைகளாய் நின்ற யூதர்கள் அடைக்கலம் கேட்டு கெஞ்சியபோது எந்த நாடும் அடைக்கலம் கொடுக்க முன்வரவில்லை .,

பலாச்தின முஸ்லிம்கள் அடைக்கலம் கொடுத்தார்கள் ., தங்கள் உணவு ,உடை உறைவிடம் போன்றவற்றை பகிர்ந்து கொண்டார்கள் ., பின்னர் அமெரிக்கா, பிரிட்டன், பிரான்சு நாடுகள் யூதர்களை ராணுவம் அமைக்கவும் நாடு பிரிக்கவும் தூண்டின ., ஆயுதபலமும் ., இராணுவபலமும் கொடுக்கப் பட்டன ., பாலஸ்தினத்தின் இதயத்தில் உதிரத்தால் ஒரு கோடு.., பலஸ்தீன இரண்டாக பிளக்கப் பட்டு யூதர்கலுக்கு இஸ்ரேல் முஸ்லிம்களுக்கு எஞ்சிய பலஸ்தீன என உருவானது .,

அடைக்கலம் கொடுத்ததற்க்கு பெரும் இழப்பை சந்தித்த பாலஸ்தினிய முஸ்லிம்கள் இன்று உயிர் இழப்புகளையும் சந்திக்கின்றனர் .,அகதிகளாய் வந்த யூதர்கள் ஏகாதிபத்திய இனப் படுகொலைகளை வெற்றிகரமாக நடத்திக் கொண்டிருக்கிறார்கள் .,

இலங்கையைப் போல் மீண்டும் ஓர் நில்லாடிய நிலமெங்கே ???

#இன்னும் சிலர் தங்கள் மத வெறியை கொட்டி தீர்க்க மனித நேயம் தொலைத்தவர்களாய் .., இந்தப் படு கொலையை நியாயப் படுத்திக் கொண்டு ., !!!!கண்ணாடி முன் நின்று "நாம் மனிதர்கள் தானா ??"கேட்டுப் பார்க்கிறேன்.,


- உள்ளதை சொல்கிறேன் ராஜ்குமார்'

இன்றைய சித்திரம்

இன்றைய சித்திரம்