மியான்மர் தாக்குதல்: பாஜகவின் மற்றொரு ரேம்போ பொய்! ~ சஹாரா தமிழ்

ads

வியாழன், 11 ஜூன், 2015

மியான்மர் தாக்குதல்: பாஜகவின் மற்றொரு ரேம்போ பொய்!மியான்மர் : "இந்திய இராணுவம் மியான்மருக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தவில்லை; இந்திய எல்லைக்குள்ளேயே தாக்குதல் நடந்தது" என மியான்மர் அரசு கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவுக்குள் பயங்கரவாதத் தாக்குதல்களை நடத்திவிட்டு மியான்மருக்குள் புகுந்து ஒளிந்துகொண்ட பயங்கரவாதிகளை அந்நாட்டுக்குள் புகுந்து தாக்குதல் நடத்த மோடி உத்தரவிட்டதன் பேரில் இந்திய இராணுவம் மியான்மருக்குள் புகுந்து நடத்திய அதிரடி தாக்குதலில் 100 க்கு மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர் என்ற செய்தி கடந்த நாட்களில் இந்தியாவில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்தியா மீது அத்துமீறுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கும் இதுதான் கதி என்றும் எந்த நாடாக இருந்தாலும் மியான்மருக்குள் புகுந்து தாக்குதல் நடத்தியதுபோன்றே அந்நாட்டுக்குள் புகுந்தும் இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாதிகளை ஒழிக்க இந்தியா தயங்காது என்றும் பாகிஸ்தான் தொடர்பாக கேட்கப்பட்ட கேள்வி ஒன்றுக்கு மத்திய பாஜக அமைச்சர் வீராவேசமாக முழங்கியிருந்தார்.

இந்திய பாதுகாப்புக்காக மியான்மருக்குள் புகுந்து இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தி பயங்கரவாதிகளைக் கொன்றது என்ற செய்தி இந்திய மக்களிடையே மிகுந்த ஆர்வத்துடன் பேசப்பட்டது. ஆனால், நடத்தப்பட்ட தாக்குதல் இந்திய எல்லைக்குள்ளேயே நடத்தப்பட்டதாகும் மியான்மருக்குள் இந்திய இராணுவம் நுழையவில்லை என்றும் பயங்கரவாதிகள் இந்தியாவிலேயே ஒளிந்திருந்தனர் என்றும் மியான்மர் அரசு வெளியிட்டுள்ள மறுப்பறிக்கை, பாஜகவின் மற்றொரு பொய்யைக் கிழித்து தொங்கவிட்டுள்ளது.

இது தொடர்பாக மியான்மர் அதிபர் மாளிகை இயக்குநர் ஸா ஹிதாய் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

"அண்டை நாடுகளைத் தாக்க மியான்மர் மண்ணை யாரும் பயன்படுத்த அனுமதிக்க மாட்டோம். இந்த நாட்டில் பயங்கரவாதிகளுக்கு இடமில்லை. இருப்பினும் இந்திய ராணுவத்தின் நடவடிக்கை இந்திய எல்லைக்குள்தான் இருந்தது. மியான்மர் ராணுவம் கொடுத்த தகவலின்படி, இந்திய - மியான்மர் எல்லையில், இந்தியாவுக்கு உட்பட்ட பகுதியில்தான் இந்த நடவடிக்கை நடந்ததாக அறிகிறோம். எந்த வெளிநாட்டு சக்தியும், மியான்மர் மண்ணைப் பயன்படுத்தி அண்டை நாடுகளைத் தாக்குவதை அனுமதிக்க மாட்டோம்."

மேற்கண்டவாறு அந்தச் செய்தி குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

"பயங்கரவாதிகளை ஒழிக்க எந்த நாட்டுக்குள்ளும் மியான்மர் போன்று உள்நுழைந்து தாக்குதல் நடத்த மத்திய அரசு தயங்காது" என வீராவேசம் பேசிய மத்திய பாஜக அமைச்சரிடமிருந்து மேற்கண்ட மியான்மர் அதிபர் மாளிகையின் அறிக்கை குறித்தான எந்தப் பதிலையும் காணமுடியவில்லை.

இன்றைய சித்திரம்

இன்றைய சித்திரம்