பசுவிற்காகப் பாம்புகள்......... முனைவர்.ஹாஜா கனி ~ சஹாரா தமிழ்

ads

வியாழன், 17 செப்டம்பர், 2015

பசுவிற்காகப் பாம்புகள்......... முனைவர்.ஹாஜா கனிபசுவிற்காகப் பாம்புகள்.........முனைவர்.ஹாஜா கனி
பசுவை வைத்து பால் கறந்தது அந்தக் காலம்
ரத்தம் கறப்பது இந்தக் காலம்
பசுவுக்காக வாதாடுகின்றன பாம்புகள்...
அரசாங்கமோ பாம்புகளுக்கு பால் வார்க்கிறது
எருமை மாட்டில் எமன் சுற்றுகிறானாம்
யார் சொன்னது இப்போது பசு மாட்டோடு
எமகாதகர்கள் சுற்றுகிறார்கள்

கர்ப்பிணி வயிற்றைக் கீறி சிசுவை நெருப்பிட்டு சிதைத்தவர்கள்
பசுவைக் காப்பாற்ற பரிவு காட்டுகிறார்கள்
சக மனிதர்களை நரவேட்டை யாடும் கொலைவெறிக் கும்பல்
கோமாதவைக் காக்க கூப்பாடு போடுகிறது
பட்டினிக் கொடுமையால் பழங்குடிகள் சாவது
காவிக் கண்களுக்கு கட்டாயம் தெரியாது
கோமாதவுக்கு மட்டுமே கோஷம்
இது ஜீவகாருண்யமல்ல வேஷம்
நல்லிணக்கம் கொன்று நாட்டுப் பாதுகாப்புக்கு
வேட்டு வைத்தவர்கள் மாட்டுப் பாதுகாப்புக்காய்
மாரடிக்கிறார்கள்...
காரணம் ஓட்டு...
தேசமே இந்த கயவர்களை ஓட்டு...
நன்றி : பேராசிரியர்.முனைவர்.ஹாஜா கனி
(
மாநில செயலாளர் தமுமுக)


இன்றைய சித்திரம்

இன்றைய சித்திரம்