பாரீஸ் உடன்படிக்கை- இந்தியா கையெழுத்து! ~ சஹாரா தமிழ்

ads

திங்கள், 25 ஏப்ரல், 2016

பாரீஸ் உடன்படிக்கை- இந்தியா கையெழுத்து!

http://image.slidesharecdn.com/globalwarmingcausesandeffects-120805014958-phpapp02/95/global-warming-causes-and-effects-1-728.jpg?cb=1344132017 
நியூயார்க்(24-04-16): பாரிஸ் உடன்படிக்கையில் இந்தியா உள்ளிட்ட 171 நாடுகள் கையெழுத்திட்டுள்ளன.‘குளோபல் வாமிங்’ என்று கூறப்படும் உலக வெட்டமயமாதலை தடுப்பதற்காக முயற்சியில் பலநாடுகள் ஒன்றினைந்து ஒரு நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

நேற்று நியூயார்க், ஐ.நா. பொதுச்சபையில் 171 நாடுகளின் தலைவர்களும் ஒன்றிணைந்து, இந்த வாயுக்கள் வெளியேறுவதை கட்டுப்படுத்தும் விதமாக ஒருஒப்பந்தத்தை கையெழுத்திட்டனர். ‘பாரீஸ் உடன்படிக்கை’ என்று அழைக்கப்படுகிற உடன்பாட்டில் இந்தியா உள்பட 171 நாடுகள் கையெழுத்திட்டன.

இந்தியாவின் சார்பில் இந்த உடன்படிக்கையில் மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை மந்திரி பிரகாஷ் ஜவடேகர் கையெழுத்திட்டார்.
புவி வெப்பமயமாதலுக்கு 55% காரணம் என குற்றம் சாட்டப்படுகிற 55 நாடுகளின் பாராளுமன்றங்கள் ஒப்புதல் அளிக்கும் பட்சத்தில் 30 நாட்களில் இந்த உடன்படிக்கை அமலுக்கு வரும்.

இன்றைய சித்திரம்

இன்றைய சித்திரம்