அல்லாஹ் என்று சொன்னதால் விமானத்திலிருந்து இறக்கிவிடப்பட்ட தம்பதி... ~ சஹாரா தமிழ்

ads

சனி, 6 ஆகஸ்ட், 2016

அல்லாஹ் என்று சொன்னதால் விமானத்திலிருந்து இறக்கிவிடப்பட்ட தம்பதி...

சிகாகோ: அல்லாஹ் என்று சொன்னதற்காக இஸ்லாமிய தம்பதியை விமானத்தில் பயணிக்க அனுமதி மறுத்துள்ளது அமெரிக்காவைச் சேர்ந்த டெல்டா ஏர்லைன்ஸ் விமான சேவை நிறுவனம்.

நஸியா - ஃபைசல் அலி ஆகிய இஸ்லாமிய தம்பதி பாரிஸிலிருந்து சின்சினாட்டி செல்ல விமானத்தில் பதிவு செய்திருந்தனர். விமானத்தில் பயணத்திற்கு ஆயத்தமாக அமர்ந்திருந்த இருவரையும் விமானி மற்றும் பிற விமான பணியாளர்கள் இணைந்து விமானத்திலிருந்து வெளியேற்றியுள்ளனர்.

நஸியா தலையை மூடிய படுதா அணிந்திருந்து ஹெட்செட் அணிந்திருந்தார் என்றும் ஃபைசல் புழுக்கத்தினால் "அல்லா" என்று அடிக்கடி கூறினார் என்றும் கூறிய விமான பணியாளர்கள் அதனையே காரணமாகக் கொண்டு அவர்கள் விமானத்தில் பயணிக்க அனுமதிக்க அனுமதி மறுத்துள்ளனர்.

அவர்களிடம் சில கேள்விகள் கேட்க வேண்டும் என்பதால் தங்கள் உடைமைகள் அனைத்தையும் எடுத்துக்கொண்டு வெளியே வருமாறு கேட்டுக்கொண்ட விமானப் பணிப்பெண் அவர்கள் விமானத்தில் பயணம் செய்ய முடியாது என்று தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து, அமெரிக்க விமான நிறுவனங்களிடம் இந்த இஸ்லாமிய விரோதப் போக்கு தொடர்கிறது என்றும் இதனை எதிர்த்து அமெரிக்க அரசுக்கு இஸ்லாமிய நல அமைப்புகள் வலியுறுத்தியுள்ளன.

இன்றைய சித்திரம்

இன்றைய சித்திரம்