லி­பரான் ஆணையம் என்பது என்ன? Part-01 ~ சஹாரா தமிழ்

ads

சனி, 19 டிசம்பர், 2009

லி­பரான் ஆணையம் என்பது என்ன? Part-01


விடுதலைப்பெற்ற இந்தியாவில் மகாத்மா காந்தியடிகளின் படுகொலைக்கு பிறகு நடைபெற்ற மிகப்பெரும் பயங்கர வாதச் செயலாக பாபரி மஸ்ஜித் இடிப்பு விளங்குகிறது.


இந்த படுபாதக அராஜகம் குறித்து விசாரிக்க இடிப்பிற்கு 10 தினங் கள் கழித்து டிசம்பர் 16, 1992 சன்டிகர் நகரைச்சேர்ந்த உயர்நீதிமன்ற நீதிபதி மன்மோகன் சிங் ­லிபரான் தலைமையில் இந்த ஆணையம் அமைக்கப்பட்டது. உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் பாபரி மஸ்ஜித் இடிப்பிற்கு வழிவகுத்த நிகழ்வுகள் யாவை என்பதை கண்ட றிவதற்காக இந்த ஆணையம் அமைக் கப்பட்டது. அன்றைய உத்தரபிரதேச முதல்வர் கல்யான்சிங் மற்றும் அவ ரது சகாக்கள் அரசு அதிகாரிகள் அரசி யல் தலைவர்கள் அமைப்புகள் என பலதரப்பட்டவரகளுக்கு பாபரி மஸ்ஜித் இடிப்பில் உள்ள பங்கை விசாரிக் கவும் லி­பரான் ஆணையத்திற்கு பணிக் கப்பட்டது.

லி­பரான் ஆணையம் அமைக்கப்படு வது தொடர்பாக வெளயிடப்பட்ட மத்திய அரசு ஆணையில் மிகவிரை வாக அதிகபட்சமாக மூன்று மாதங் களுக்குள் ஆணையம்தனது அறிக் கையை சமர்பிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் 48 முறை ஆயுள் நீடிப்பு பெற்று விடுதலைப் பெற்ற இந்தியாவில் மிக நீண்ட காலம் இயங்கிய ஆணையமாக ­லிபரான் ஆணையம் அமைந்துள்ளது. இதே போல் மிக அதிக செலவில் இயங்கிய ஆணையமாகவும் லி­பரான் ஆணையம் அமைந்துள்ளது. இதற்கான செலவான ரூ. 8 கோடியில் பெரும்பாலனவை ஆணையத்தின் பணியாளர்களின் ஊதியம் மற்றும் படிகளுக்கு மட்டுமே செலவாகியது.

லி­பரான் ஆணையம் 399 அமர்வு களை நடத்தியது. முன்னாள் பிரதமர் நரசிம்மராவ், பா.ஜ.க. தலைவர்களான அத்வானி, முரளிமனோகர ஜோஷி, கல்யான்சிங், வி.ஹெச்.பி. தலைவர் அசோக் சிங்கால், காங்கிரஸ் தலைவர் அரஜூன் சிங் மற்றும் சமாஜ்வாதி தலைவர் முலயாம்சிங் யாதவ் ஆகியோர் விசாரிக்கப்பட்டார்கள்.

கடந்த ஜூன் 30 அன்று பிரதமர் மன்மோகன் சிங்கிடம் ஒப்படைக் கப்பட்ட அறிக்கை கடந்த நவம்பர் 24 அன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

999 பக்கங்கள் கொண்ட இந்த அறிக்கை 16 அத்தியாயங்களாக பிரிக்கப் பட்டுள்ளது. இந்த அறிக்கையில் சொல் லப்பட்டுள்ள செய்திகள் சொல்லப்படாத செய்திகள் குறித்து இனி விரிவாக ஆராய்வோம். --Tmmk.in--

இன்றைய சித்திரம்

இன்றைய சித்திரம்