பாபரி மஸ்ஜித் இடிப்பு மனிதகுலத்திற்கு ஏற்பட்ட பேரழிவு! Part-02 ~ சஹாரா தமிழ்

ads

சனி, 19 டிசம்பர், 2009

பாபரி மஸ்ஜித் இடிப்பு மனிதகுலத்திற்கு ஏற்பட்ட பேரழிவு! Part-02


விடுதலைப்பெற்ற இந்தியாவில் மகாத்மா காந்தியடிகளின் படுகொலைக்கு பிறகு நடைபெற்ற மிகப்பெரும் பயங்கர வாதச் செயலாக பாபரி மஸ்ஜித் இடிப்பு விளங்குகிறது.

­லிபரான் ஆணையத்தின் அறிக்கை 999 பக்கங்கள் கொண்ட தாகும். இதில் 16 அத்தியாயங்கள் உள்ளன. 1. அறிமுகம் 2. அயோத்தி மற்றும் அதன் பூகோள அமைப்பு 3. காவல்துறை நிர்வாகம் 4. நிகழ்வுகளின் வரிசை 5. நிர்வாகம் 6. கரசேவகர்களை திரட்டுதல் 7. பாதுகாப்பு அமைப்பு முறையும் மற்றும் சூழலும் 8. நிலவரங்கள் 9. அமைப்புகளும் அவற்றுக்கு இடையான தொடர்புகளும் 10.கூட்டு பொது நிறுவனம் 11.குடியரசு தலைவர் ஆட்சி 12. மதசார்பின்மை 13. ஊடகங்கள் மீதான தாக்குதல் 14. முடிவுரை 15. பரிந்துரைகள் 16. பின்னுரை என ­லிபரான் அறிக்கை 16. அத்தியாயங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கையில் கூறப் பட்டுள்ள முக்கிய கருத்துக்களையும் சொல்ல தவறிய செய்திகளையும் வரிசையாக பார்ப்போம்.

­லிபரான் அறிக்கையின் முதல் அத்தியாயமான அறிமுகம் பின்வருமாறு தொடங்குகின்றது:

அதிகாரம் பெற வேண்டும் என்ற சபலம் சிலரது மனதில் எல்லாவற்றையும் மிகைத்து நிற்கிறது. அதிகாரம் பெறுவதற்கு உரிய சாதாரண வழிமுறையாக அரசியல் அமைந்துள்ளது. சுய நலனுக்காக அரசியலை பயன்படுத்தி அதிகாரத்தை பெறுவது என்பது எப்போதுமே உந்து சக்தியாகவும் வேட்கையாகவும் இருந்து வந்துள்ளது. எந்த வழிமுறையை கடைபிடித்தாவது அரசியல் அதிகாரத்தை அடைய வேண்டும் என்பது தான் எல்லாவற்றையும் பின்னுக்கு தள்ளுகின்றது. அதிகாரத்தை பெற வேண்டும் என்ற முயற்சியின் போது தூயநோக்கம் நாணயம் நேர்மை என அனைத்தும் காணமல் போய் விடுகின்றது. அரசியல் அதிகாரத்தை பெறுவதற்காக அல்லது விருப்பப்படும் அரசியல் முடிவுகளை ஏற்படுத்துவதற்காக அர சியல் சாசன சட்டம் எழுதப்பட்ட அல் லது ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒழுக்க நெறிமுறைகள் என அனைத் தும் காற்றில் பறக்க விடப்படுகின்றன. ஒரு ஆரோக்கியமான அல்லது சட்டபூர்வமான நிர்வாக முறை அவசியம் என்பதெல்லாம் நிராகரிக்கப்படுகின்றது. நிர்வாகம் அரசியல் சாயம் இல்லாமல் இயங்க வேண்டும் என்பதெல்லாம் அவசியமில்லாதவை என்று கருதப் படுகின்றது.

நில மற்றும் மத்திய தலைவர்களின் முன்னிலையில் பாபரி மஸ்ஜித் தகர்ப்பு டிசம்பர் 6 1992லில் நிகழ்ந்தது. ராஷ்டிரிய சுயம்சேவக் சங் (ஆர்.எஸ்.எஸ்.) பஜ்ரங் தளம், விஷ்வ இந்து பரிஷத், பாரதீய ஜனதா கட்சி மற்றும் சிவசேனை ஆகிய அமைப்புகளின் தொண்டர்களும் தலைவர்களும் அந்த இடத்தில் இருந்தனர். அவர்கள் இடிப்பு நடவடிக்கைக்கு நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ ஆதரவு அளித்தனர். கோயில் கட்டும் இயக்கத்தைச் சேர்ந்த போதனையாளர்கள் சாதுக்கள் பூசாரிகள் அரசு நிர்வாகம் மற்றும் காவல்துறையைச் சேர்ந்த அதிகாரிகள் செய்தியாளர்கள் மற்றும் கரசேவகர்களும் அங்கு திரண்டு இருந்தனர்.

அரசியல் அதிகாரத்தை பெற்று விரும்ப கூடிய அரசியல் முடிவுகளை அடை யும் நோக்கத்தை இலக்காக கொண்டு அனைத்து செயல்பாடுகளும் அமைத்துக் கொள்ளப்பட்டன. இந்தியா அளவிலும் உலகளாவிய அளவிலும் தொலைக்காட்சி மற்றும் இதர ஊடகங்கள் வாயிலாக மக்கள் பார்த்துக் கொண்டிருக்கும் நிலையில் இடிப்பு நடைபெற்றது. அரசியல் ரீதியான நிர்வாகமும் சரி அதிகாரிகள் ரீதியான நிர்வாகமும் சரி இடிப்பை தடுப்பதற்கான எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இடித்தவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கையையும் அவர்கள் மேற்கொள்ளவில்லை.

சர்சைக்குரிய அந்த கட்டிடம் இடிக்கப்பட்டது நாடு மட்டும் அல்ல மனிதகுலமே சந்தித்த மிக மோசமான பேரழிவு என்று சமுதாயத்தின் பெரும் பகுதியான மக்கள் கருதினர். நல்ல நிர்வாகம் மதசார்பின்மை மற்றும் சட்டத்தின் ஆட்சியை விரும்பும் சமூகத்திற்கும் அது ஒரு பெரும் பேரிழப்பை ஏற்படுத்தி விட்டது என்று பெரும்பான்மையான மக்கள் கருதினர்.

பன்னாட்டளவில் நமது நாட்டிற்கு ஒரு பெரும் களங்கத்தை அந்த செயல் ஏற்படுத்தியது. அடிப்படை உரிமைகளுக்கு எதிரான ஒரு வன்கொடுமையாக அது அமைந்தது. ஒரு அரசியல் மாற்றத்தை நியாயமான அடிப்படையில் தான் கொண்டு வரவேண்டும் என்ற கோட்பாட்டிற்கு இடிப்பு மரண அடியாக விழுந்தது. நமது நாட்டின் வரலாற்றிலும் இந்து மத வரலாற்றிலும் நிகழ்ந்து விட்ட மிகவும் வெறுக்கத்தக்க மத சகிப்பற்ற கொடூரச் செயலாக அது அமைந்து விட்டது. இடிப்பிற்கு பிறகு நாடு முழுவதும் வகுப்பு கலவரம் வெடித்து அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த கலவரங்கள் குறித்து விசாரிக்க பல்வேறு ஆணையங்கள் அமைக் கப்பட்டன.

இடிப்பிற்கு பிறகு பல்வேறு முரண் பட்ட ஊகங்கள் வெளியாகின. இடிப் பிற்கான சதி அது உள்நாட்டில் திட்ட மிடப்பட்டதா அல்லது வெளிநாட்டில் உருவாக்கப்பட்டதா அல்லது அரசியல் ரீதியானதா என்று பல கேள்விகள் எழுந்து மக்கள் கவனத்தை ஈர்த்தன. இந்த ஊகங்கள் வதந்திகளை பரவச் செய்தன. நாடு முழுவதி­ருந்தும் ஏராளமான மக்கள் ஒன்று ஆதரவாக அல்லது எதிராக இந்த நடவடிக்கையில் பங்குக் கொண்டிருக்கையில் சாதாரண நீதியியல் நடவடிக்கை மூலம் முழு உண்மையையும் நாம் அறிந்திட இயலாது.

இத்தகைய சூழ­ல் பொது மேடைகளில் பெருமையாக பேசப்படும் நமது மதசார்பற்ற அரசியல் சாசனம் சிதைப்பதற்கு காரணமாக அமைந்தது எது என்பதை நாட்டு மக்கள் அறிவது மிக அவசியமாகும். இது போன்ற நிகழ்வு எதிர்காலத்தில் நிகழாமல் தடுப்பதற்கு உண்மையை அறிவது மிக மிக அவசியமாகும். சமூக நல்லி­ணக்கம் நிலவ வேண்டும் என்பதில் நம்பிக்கைக் கொண்டவர்கள் இனி இது போன்று நடக்ககூடாது என்றே விரும்புகிறார்கள்.


மேலே குறிப்பிடப்பட்ட முன்னுரை யுடன் நீதிபதி ­லிபரான் தனது அறிக்கையை தொடங்குகிறார்.
(தொடரும்) www.tmmk.in

இன்றைய சித்திரம்

இன்றைய சித்திரம்