“அல்குர்ஆன்” பாக்கியம் நிறைந்த வேத நூல் ~ சஹாரா தமிழ்

ads

வெள்ளி, 20 ஆகஸ்ட், 2010

“அல்குர்ஆன்” பாக்கியம் நிறைந்த வேத நூல்

 http://savingmemoir.files.wordpress.com/2009/04/23322-al-quran.jpg
- உஸ்தாத் இம்தியாஸ் ஸலபி

அல்குர்ஆன் என்பது அல்லாஹ்வின் வார்த்தைகள். மனிதன் எப்படி வாழவேண்டும் என்ற முழுமையான வழிகாட்டுதலைத் தருகிறது. இக்குர்ஆன் தனிமனிதஇ குடும்பஇ சமூக வாழ்வின் அத்தனை அம்சங்களை இலகுநடையில் விளக்கப்படுத்துகிறது. மனிதனைப் படைத்த அல்லாஹ் அந்த மனிதன் எப்படி அல்லாஹ்வை நம்ப வேண்டும்இ பின்பற்ற வேண்டும். கட்டளைகளை ஏற்று நடக்க வேண்டும் என்பதை தெளிவுபடுத்துகிறான்.

ஆன்மீகத்தை (இபாதத்களை) மட்டும் சொல்லித் தராமல் கொடுக்கல்-வாங்கல் (கடன்) அடைமானம்இ வட்டிஇ வியாபரம்இ

குழந்தைக்கு பாலூட்டல்இ குழந்தை வளர்ப்புஇ திருமண வாழ்வுஇ குடும்பப் பிரச்சினைக ளைத் தீர்த்து வைத்தல்இ தலாக்இ ஜீவனாம் சம் (மஹர்) பெண்ணுரிமை

பெற்றோரை பேணுதல்இ குடும்ப உறவை அண்டுதல்இ அடுத்த வீட்டாரை மதித்தல்இ பிற மக்களுடன் பரஸ்பரம் அன்பை பரிமாறுதல்இ நல்லிணக்கத்துடன் நடத்தல்இ

வீட்டுக்குள் செல்லும் ஒழுங்குகள்இ நம்பிக்கை நாணயம் பேணல்இ வாரிசுரிமைஇ சொத்துப் பங்கீட்டு இ ஒழுக்க மேம்பாட்டும் அதனை சீர் குலைக்கும் காரணிகளும்இ

சமூக சீர்கேடுகள்இ சமுதாய கொடுமைகள்இ குற்றவியல் சட்டங்கள்இ பொருளாதாரம்இ அரசியல்இ அனாதைகள் பராமரிப்புஇ கல்விஇ லௌகீக விடயங்கள் என்று அன்றாட வாழ்வுக்கான அனைத்து விடயங்களையும் அல்குர்ஆன் தெளிவுபடுத்துகிறது.

அல்லாஹ்வை நம்பிய மனிதன் (முஸ்லிம்) அந்தக் குர்ஆனையும் நம்ப வேண்டும். குர் ஆனை இறைவேதமாக நம்பியவன் அந்தக் குர்ஆனை தினம்தோறும் ஓதுவதுடன் அதன் விளக்கங்களையும் படித்துப் பின்பற்ற வேண்டும். இதற்காகவே அல்குர்ஆன் அருளப்பட்டது.

அல்லாஹ் அருளிய இந்த வேதம் படிப்பதற்கும் விளங்குவதற்கும் இலகுவானது. கருத்து முரண்பாடற்றது. நடைமுறைக்கு ஏற்றமானது. அதனாலேயே மிகத் தெளிவான வேதமாக உள்ளதுஇ இதனாலேயே இக்குர்ஆனை படித்து சிந்தித்துணர மாட்டீர்களா? என்று அல்லாஹ் கேட்கிறான்.

    'உங்களிடம் ஒரு வேதத்தை அருளி னோம். அதில் உங்களுக்கு 'அறிவுரை இருக்கிறது. நீங்கள் விளங்க வேண்டாமா? (21:10).

    இது பாக்கியம் நிறைந்த வேதம். இதன் வசனங்களை அவர்கள் சிந்திப்பதற்காகவும் அறிவுடையோர் படிப்பினை பெறுவதற்காகவும் (நபியே) உமக்கு அருளினோம். (38:29)

    அவர்கள் இக்குர்ஆனைச் சிந்திக்க வேண்டாமா? அல்லது அவர்களின் உள்ளங்கள் மீது அதற்கான பூட்டுக்கள் உள்ளனவா? (47:24).

    'அவர்கள் இந்தக் குர்ஆனைச் சிந்திக்க மாட்டார்களா? இது அல்லாஹ் அல்லாத வரிடமிருந்து வந்திருந்தால் இதில் ஏராளமான முரண்பாடுகளைக் கண்டிருப்பார்கள்' (4:84).

வாழ்கின்ற வாழ்வு அமைதியானதாக நிம்மதியானதாக இருக்க வேண்டுமானால் அந்த வாழ்வுக்கு பரகத் பொருந்திய அல்லாஹ்வுடைய வேதமான அல்குர்ஆன் வழிகாட்டுகிறது.

பாக்கியம் (பரகத்) நிறைந்த வேத நூலை இறக்கி வைத்த அல்லாஹ்இ அதில் அறிவுரைகள் வழிகாட்டல்கள் உண்டு என உறுதியாகக் கூறுகிறான். அதனைப் பார்த்து பின்பற்ற வேண்டும் என்றும் கட்டளையிடுகிறான்.

எவர் குர்ஆனை படிக்காமல் விளங்காமல் சிந்திக்காமல் அதனை விட்டு விலகி நடக்கிறாரோ அவருடைய உள்ளத்தில் அல்லாஹ்வின் அருள் இருக்காது. பூட்டுக்களால் மூடப்பட்ட இருண்ட அறையாகவே அது இருக்கும்.

இன்று குர்ஆன் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு வந்துள்ளது. பல தப்ஸீர் நூல்ளை வைத்துத்தான் இலகுவான நடையில் மார்க்க அறிஞர்கள் குர்ஆனை மொழி பெயர்த்துள்ளார்கள். படித்துப் பார்க்க வேண்டிய பொறுப்பு முஸ்லிம்களைச் சார்ந்தது.

நாளாந்தம் பத்திரிகைகள் படித்து விளங்க முடியுமாக இருந்தால் அதைவிட இலகுவாக குர்ஆனை விளங்க முடியும். (விளங்க முடியாது என்றால் உலமாக்களை அணுகி படிக்க வேண்டும்).

பத்திரிகை படிப்பதற்குஇ செய்திகள் பார்ப்பதற்குஇ நேரம் ஒதுக்குபவர்கள் குர்ஆனை படிப்பதற்கு குறைந்தது 15 நிமிடங்களாவது ஒதுக்கக் கூடாதா?

குர்ஆனின் போதனைகளை விட்டு ஓரமாகக் கூடியவர்களின் இம்மை வாழ்வும் மறுமை வாழ்வும் படுமோசமானதாக பயங்கரமானதாக அமையும் என்ற அல்குர்ஆனின் எச்சரிக்கையை எப்போதும் மனதில் வைத்திட வேண்டும்.

எவர் எனது போதனையைப் புறக்கணிக்கிறாரோ அவனுக்கு (இம்மையில்) நெருக்கடியான வாழ்க்கை உண்டு. அவனை கியாமத் நாளில் குருடனாக எழுப்புவோம்.

என் இறைவா! நான் பார்வையுடையவனாக (உலகில்) இருந்தேனே ஏன் என்னை குருடனாக எழுப்பினாய் என்று அவன் (மறுமையில்) கேட்பான்.

அப்படித்தான்இ நம்முடைய வசனங்கள் உன்னிடம் வந்தன. அதை நீ (உலகில்) மறந்தவாறேஇ (வாழ்ந்தாய்) இன்று (நீயும்) மறக்கப்படுவாய் என்று (அல்லாஹ்) கூறுவான். (20: 124-126).

குர்ஆனைப் பார்த்து படிப்பினை பெற்று வாழாமல் புறக்கணித்தவன் மறுமையில் குருடனாக எழுதப்படுவான்; என்று அல்லாஹ் எச்சரிக்கை செய்கிறான்.

நிச்சயமாக இந்தக் குர்ஆன் மிக நேரான வழியை அறிவிக்கின்றது. விசுவாசம் கொண்டு நற்கருமங்களைச் செய்வோருக்கு நிச்சயமாக மிகப் பெரிய கூலி உண்டு என்றும் நன்மாராயம் கூறுகிறது. (17:9).

மக்களை இக்குர்ஆன் மிக நேரான வழிக்கு இட்டுச் செல்லும் என்று அல்லாஹ் உத்தரவாதமளிக்கிறான். அதனைப் பற்றிப் பிடிக்கும் மக்களாக முஸ்லிம்கள் இருக்க வேண்டும்.

அல்குர்ஆன் ஓதும் இடங்களுக்கு (வீடுகளுக்கு) அருள் நிறைந்த மலக்குகள் இறங்குகிறார்கள் மற்றும் ஸகீனத் இறங்குகிறது.
ஷைத்தான் அந்த வீட்டிலிருந்து ஓடுகிறான்.

குர்ஆனுடன் தொடர்பாகின்றபோது மனிதனின் செயற்பாடுகள் நன்மையின் பாலும் இறை திருப்தியின் பாலும் சென்றுவிடுகிறது. இம்மை மறுமை வாழ்வு பயனுள்ளதாக அமைந்துவிடுகிறது.

எனவே 'பாக்கியம் (பரகம்) நிறைந்த வேத நூல்' என்று அல்லாஹ் கூறுவது அந்தக் குர்ஆனை அழகான அச்சில் வடித்து உயர்ந்த துணியில் வைத்து வீடுகளில் கடைகளில் தொங்கவிடுவதற்கோ மேனியில் கட்டிக் கொள்வதற்கோ மரணித்தவர்களுக்காக ஒதி பார்சல் பண்ணுவதற்கோ
தாயத்துகளாக தடுகளாக எழுதி வியாபாரம் பண்ணுவதற்கோ அல்ல.

உயிருடன் நடமாடும் மானுட சமூகம் நல்லுணர்ச்சி பெறுவதற்கே!

வாழ்க்கையின் ஒவ்வொரு எட்டிலும் குர்ஆன் பேசப்படக்கூடியதாக அமையும் போதே வாழ்வு பரகத் பொருந்தியதாக ஆகிவிடுகிறது.

இன்றைய சித்திரம்

இன்றைய சித்திரம்