வில்லிவாக்கம் தீ விபத்தில் பாதிக்கபட்டவர்களுக்கு தமுமுக உதவி ~ சஹாரா தமிழ்

ads

திங்கள், 27 ஜூன், 2011

வில்லிவாக்கம் தீ விபத்தில் பாதிக்கபட்டவர்களுக்கு தமுமுக உதவி
ஐ.சி.எப். அருகே உள்ள கக்கன் நகரில் சுமார் 300 குடிசைகள் உள்ளன. இதில் ஒரு குடிசை சனிக்கிழமை நண்பகல் 12.30 மணியளவில் திடீரென தீப்பிடித்து எரியத் தொடங்கியது. இதைப் பார்த்த அப்பகுதி மக்கள், தீயை அணைக்க முயற்சி செய்தனர். ஆனால் முடியவில்லை.

 இதையடுத்து வில்லிவாக்கம் தீயணைப்பு நிலையத்துக்கு அவர்கள் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடம் சென்ற தீயணைப்பு படையினர் தீயை அணைக்க முயற்சித்தனர்.

 தீயை உடனடியாக கட்டுப்படுத்த முடியாததால்,மேலும் இரு தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டன. சுமார் 45 நிமிடங்கள் போராடி தீயை அணைத்தனர்.

 இந்த தீ விபத்தில் 40 குடிசைகள் எரிந்து சாம்பலாகின.

தீவிபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தமுமுக வில்லிவாக்கம் கிளையின் மூலம் உதவிகள் வழங்கப்பட்டது (பார்க்க - புகைப் படம்).

இன்றைய சித்திரம்

இன்றைய சித்திரம்