விடைபெறும் நவநீதம் பிள்ளை, வருகிறார் ஜோர்டான் இளவரசர் ! கலக்கத்தில் ராஜபக்சே! ~ சஹாரா தமிழ்

ads

ஞாயிறு, 22 ஜூன், 2014

விடைபெறும் நவநீதம் பிள்ளை, வருகிறார் ஜோர்டான் இளவரசர் ! கலக்கத்தில் ராஜபக்சே!



ஐ நா மனித உரிமைகள் அமைப்பின் தலைவரும், சிங்கள ராஜபக்சேவின் தீராத தலைவலியுமாக இருந்து வந்த திருமதி. நவநீதம் பிள்ளையின் பதவிக்காலம் நிறவடையும் வேளையில், அடுத்த தலைவராக ஜோர்டான் நாட்டின் இளவரசர் திரு. சயீத் ராட் ஹுசேன் நியமிக்கப்பட்டிருக்கிறார்.

யார் இந்த இளவரசர் ?
ஜோர்டானின் மன்னர் இரண்டாம் அப்துல்லாவின் சகோதரர். ஐநா மனித உரிமைகள் குழுவிற்கு தலைமையேற்க போகும் முதலாவது இஸ்லாமியர், ஆசியாவிலிருந்து ஐநாவிற்கு தலைமையேற்க இருக்கும் முதல் நபர். இதையெல்லாம் விட மனித உரிமைகளை மீட்டெடுப்பதிலும் காப்பதிலும் தகுதி வாய்ந்த சிறந்த இளைஞர்.

பன்னாட்டு குற்றவியல் நீதிமன்றத்தின் தலைவராக மூன்றாண்டுகள் திறம்பட பணியாற்றி பல்வேறு பாராட்டுகளைப் பெற்றவர் மற்றும் மனிதத்திற்கெதிரான இனப்படுகொலைகளை எதிர்த்து தடுக்கும் விசாரணை மன்றத்தின் தலைவராக இருந்தவர்.
இதைவிட முக்கியமானது பன்னாட்டு போர்க்குற்ற விசாரணைக்குழுவின் தலைவராக வீற்றிருந்து காங்கோ மற்றும் சிரியாவில் அமெரிக்க படைகளின் அட்டூழியத்தை படம்பிடித்துக்காட்டி ஐநாவுக்கே ! எதிராக குரல் கொடுத்தவர். அமெரிக்காவிற்கு சிம்ம சொப்பனமாக விளங்கியவர்.

இவருடைய தைரியத்திற்க்கு ஒரு சான்று, தான் அடுத்த தலைவராக தெரிவு செய்யப்பட்டதை 193 உறுப்பினர்கள் கொண்ட பாராளுமன்றில் அறிவித்துவிட்டு “ என்னை தெரிவு செய்ததற்காக இன்று கைதட்டும் நீங்களே என் நடவடிக்கைகளைக்கண்டு நாளை கல்லெரியக்கூடும் என்பதை தெரிந்தே என் நகர்வுகளை முன்னெடுக்கப்போகிறேன்” என்று அறிவித்ததிலிருந்தே நாம் தெரிந்து கொள்ளலாம்.

இதற்கிடையில் போர்க்குற்ற விசாரணைகளுக்காக நவநீதம் பிள்ளை நிதி ஒதுக்கிவிடக்கூடாது என்பதில் கவனமாக இருந்த ராஜபக்சே வுக்கு அடுத்த தலைவலியாக ஜோர்டான் இளவரசரின் அறிவிப்பு வெளியாகியிருக்கிறது
நவநீதம் பிள்ளை ஒய்வு பெறுவதற்குள் நிதி ஒதுக்காவிட்டால், பின்னர் இளவரசர் வந்து நிதி ஒதுக்கீடு செய்வதற்குள் அவரது பதவிக்காலமே முடிந்துவிடும். இதை நன்கு உணர்ந்துள்ள பிள்ளை, முதல் வேளையாக இம்மாத இறுதிக்குள் நிதி ஒதுக்கீடு செய்ய froஇருப்பதாக் அறிவித்ததும் ராஜபக்சே வயிற்றில் புளியைக்கரைதிருக்கிறது.

எல்லாவற்றிற்கும் சிகரம் வைத்தது போல், அடுத்த தலைவர் இளவரசர் தான் என்பதை அறிந்து கொண்ட ராஜபக்சே கடந்த ஜனவரியில் ஜோர்டானுக்கு அரசுமுறைப்பயணம் மேற்கொண்டு எப்படியாவது இளவரசரோடு நண்பராகிவிட வேண்டும் என்று பலமாக முயற்சி செய்தபோது, “ நீங்கள் மனித் உரிமைகளுக்கு எதிரானவராக குற்றம் சாட்டபட்டிருக்கிறீர்கள், உங்கள் அரசின் மேல் போர்க்குற்றச்சாட்டு, இனப்படுகொலைக்கான குற்றச்சாட்டுகள் இருக்கின்றன, இவற்றிற்கெல்லாம் சரியான விடைகிடைக்கும் வரை உங்களை சந்திக்க எனக்கு விருப்பமில்லை” என முகத்திலடித்தாற்போல் கூறி, கடைசிவரை சந்திக்கமலேயே திருப்பி அனுப்பிவிட்டார்.

இத்தனைக்கும் ராஜபக்சே ஜோர்டானின் மன்னரைக்கூட சந்தித்து விட்டார் என்பது கூடுதல் தகவல். நவநீதம்பிள்ளை நிதி ஒதுக்கீடு செய்துவிட்டால், ஐநா குழு விசாரணையை துவக்கிவிடும், அவ்வாறு துவங்கும் நேரத்தில் ஐநாமனித உரிமைகள் கழகத்தின் தலைவராக இளவரசர் வந்தால் .. இதுவே ராஜபக்சே கலக்கத்திற்கு காரணம்..

இளவரசராவது சரியான போர்க்குற்ற மற்றும் இனப்படுகொலை விசாரணையை மேற்கொள்வாரா? காலம் பதில் சொல்லும் .. காத்திருப்போம்.

இன்றைய சித்திரம்

இன்றைய சித்திரம்