இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தில் இருந்து 'மதசார்பற்ற' என்ற வார்த்தையை நிரந்தரமாக நீக்க வேண்டும்: சிவசேனா கட்சி கூறியதால் புதிய சர்ச்சை ~ சஹாரா தமிழ்

ads

வியாழன், 29 ஜனவரி, 2015

இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தில் இருந்து 'மதசார்பற்ற' என்ற வார்த்தையை நிரந்தரமாக நீக்க வேண்டும்: சிவசேனா கட்சி கூறியதால் புதிய சர்ச்சை

 

நாட்டின் அரசியலைப்புச் சட்டத்திலிருந்து ‘மதசார்பற்ற, சோஷலிச’ (Secular and socialist) என்ற வார்த்தைகளை நிரந்தமாக நீக்கவேண்டும் என்று சிவசேனா கோரிக்கை விடுத்துள்ளது.

குடியரசு தினத்தையொட்டி மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகம் சார்பில் வெளியான விளம்பரத்தில் அரசியல் சாசனத்தின் முகப்புரை (preamble) படம் இடம்பெற்றிருந்தது. இந்த முகப்புரை 42-வது அரசியல் சாசன திருத்தத்துக்கு முந்தையது என்பதால் அதில் மதசார்பற்ற, சோஷலிச என்ற வார்த்தைகள் இடம்பெறவில்லை. இந்த விளம்பரம் தொடர்பாக மத்திய அரசு, எதிர்க்கட்சிகளின் கண்டனத்துக்கு உள்ளாகியிருக்கிறது.

இந்நிலையில் சிவசேனா எம்.பி. சஞ்சய் ரவத் நேற்று மும்பையில் கூறும்போது, “குடியரசு தின விளம்பரத்தில் இந்த வார்த்தைகள் நீக்கப்பட்டதை வரவேற் கிறோம். தற்செயலாக இது நிகழ்ந்தாலும், இந்திய மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பு அளிப்பதாக இருந்தது.

இந்த வார்த்தைகள் அரசியலைப்பு சட்டத்திலிருந்து நிரந்தரமாக நீக்கப்பட வேண்டும்” என்றார்.

முஸ்லிம்களுக்காக பாகிஸ்தான் உருவாக்கப்பட்டது. அப்படியானால் எஞ்சியிருக்கும் பகுதி இந்து நாடு என்றே அர்த்தம்.

அரசியல் ஆதாயத்துக்காகவே சிறுபான்மை சமூகத்தினர் பயன்படுத்தப் பட்டு வருகின்றனர். இந்துக்கள் தொடர்ந்து அவமதிக்கப்படுகின்றனர். இதற்கு அனுமதி வழங்கி அரசிலமைப்பு சட்டத்தில் எந்த வார்த்தைகளும் இல்லை” என்றார்.

இந்த விவகாரத்தில் காங்கிரஸ் எம்.பி. மணீஷ் திவாரி நேற்று முன்தினம் மத்திய அரசை தாக்கிப் பேசினார்.

இதற்கு பதில் அளித்த மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சர் ராஜ்யவர்தன் ரத்தோர், “முகப்புரையை கவுரவிக்கும் வகையில் அது திருத்தப் படுவதற்கு முன்புள்ள ஒரிஜினல் படத்தை பயன்படுத்தினோம்.

இதே படம் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் வெளி யான மத்திய அரசு விளம்பரத்திலும் பயன் படுத்தப்பட்டுள்ளது” என்றார்.

இன்றைய சித்திரம்

இன்றைய சித்திரம்