969 பயங்கரவாத அமைப்பு தலைவர் விராதுவின் மத துவேஷ பேட்டி! ~ சஹாரா தமிழ்

ads

புதன், 10 ஜூன், 2015

969 பயங்கரவாத அமைப்பு தலைவர் விராதுவின் மத துவேஷ பேட்டி!

969 burma க்கான பட முடிவு

மியான்மர் : "முஸ்லிம்களைத் தாய்லாந்து, ஆஸ்திரேலியா, மியான்மர் போன்ற நாடுகள் அகதிகளாக ஏற்றுக்கொள்ளக்கூடாது" என மியான்மரில் செயல்படும் 969 என்ற மத பயங்கரவாத அமைப்பின் தலைவர் விராது மத துவேஷ கருத்துகளைத் தெரிவித்துள்ளது உலக நாடுகளிலிருந்து மியான்மருக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

மியான்மரில் 969 என்ற பெயரில் செயல்படும் மத பயங்கரவாத அமைப்பின் தலைவர் விராது. இவர், ஆஸ்திரேலிய ஊடகமான மசோயன் மோனஸ்த்ரிக்கு வழங்கிய பேட்டியில் முஸ்லிம்களுக்கு எதிராக இன துவேஷ கருத்துகளை வெளியிட்டுள்ளார்.

அதில், "முஸ்லிம்கள் நாட்டிற்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருக்கின்றனர். முஸ்லிம் அல்லாதவர்களிடம் அவர்கள் பழகுவதில்லை. புத்தபெண்களை முஸ்லிம் ஆண்கள் திருமணம்செய்து மதம் மாற்றுகின்றனர்; ஜிஹாதைப் பரப்பி வருகின்றனர்.

முஸ்லிமைத் திருமணம் செய்த புத்தமத 6 மாத கர்ப்பிணிப்பெண் புத்தமடத்துக்கு சென்றுவந்ததால் அவள் அவனது கணவனால் அடிக்கப்பட்டாள். மற்றொரு முஸ்லிமைத் திருமணம் செய்த புத்த பெண், புத்தருக்குப் பூ போட்டதால் அவளது கணவனால் கொலை செய்யப்பட்டாள்." என்று கூறினார்.

மேலும், "நேற்று நூற்றுக்கும் மேற்பட்ட புத்த குடிமக்கள் 969 அமைப்புடன் கலந்துகொண்டு பேரணி நடத்தினர். கப்பலில் சென்ற அகதிகளை ஏற்றுக்கொள்ள கூறி மியான்மார் அரசுக்கு அழுத்தம் கொடுத்ததற்கு அவர்கள் சர்வதேச சமூகத்தைக் கண்டித்தனர்.

முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழாத  நாடுகளான மியான்மார், தாய்லாந்து மற்றும் ஆஸ்திரேலியா நாடுகள் அகதிகளை ஏற்றுக்கொள்ள கூடாது. அவர்களை  இந்தோனேசியா, மலேசியா மற்றும் புருணே போன்ற முஸ்லிம் நாடுகளுக்கு அனுப்ப வேண்டும்.

அகதிகள் இரண்டு வகைகள்; ஒன்று உண்மையான அகதிகள்; மற்றொன்று போலிகள்!" என்று முஸ்லிம்களுக்கு எதிராகக் கடுமையான இன துவேஷ கருத்துகளை வெளியிட்டார். இவரின் இக்கருத்துகளுக்கு உலக நாடுகளிலிருந்து கடும் கண்டனமும் எதிர்ப்பும் கிளம்பியுள்ளது. இது மியான்மர் அரசுக்கு மேலும் நெருக்கடியைக் கொடுக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இந்த விராது, முஸ்லிம்களுக்கு எதிராக கலவரம் உருவாக்கி அவர்களைப் படுகொலை செய்ய வேண்டுமென வெளிப்படையாக பேசி துண்டறிக்கைகள் வினியோகம் செய்ததற்காக கடந்த 2003 ம் ஆண்டு, 25 வருடங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு சிறையிலடைக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. எனினும் 8 ஆண்டுகளிலேயே கடந்த 2011 ஆண்டு அரசியல் கைதிகள் விடுவிக்கப்பட்டபோது, சூகி அரசால் விடுதலை செய்யப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

- அபூஷேக் முஹம்மத்

இன்றைய சித்திரம்

இன்றைய சித்திரம்