விநாயகர் சிலை வைக்க எதிர்ப்பால் பரபரப்பு ~ சஹாரா தமிழ்

ads

திங்கள், 24 ஆகஸ்ட், 2009

விநாயகர் சிலை வைக்க எதிர்ப்பால் பரபரப்பு

புதுப்பேட்டை : முஸ்லிம்கள் அதிகமாக வசிக்கும் பகுதியில், விநாயகர் சிலையை வைக்க எதிர்ப்பு தெரிவித்ததால் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.
இந்து முன்னணி அமைப்பைச் சேர்ந்தவர் ஹேமந்த். விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, இவர் சென்னை புதுப்பேட்டை வெங்கடாசல நாயக்கன் தெருவில் நேற்று விநாயகர் சிலையை வைக்க முயற்சித்தார். அப்பகுதியில் முஸ்லிம்கள் பெரும் பான்மையாக இருப்பதால், சிலை வைக்க கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்து முன்னணியினரோ அங்கு சிலை வைப்பதில் உறுதியாக இருந்தனர். இதனால் அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர். இருதரப்பினரிடையே எழும்பூர் உதவி கமிஷனர் கிருஷ்ணமூர்த்தி பேச்சுவார்த்தை நடத்தினார். கோமலீஸ்வரர் கோவில் அருகே விநாயகர் சிலையை வைத்துக் கொள்ள இந்து முன்னணியினர் ஒப்புக் கொண்டனர்.
நன்றி: www.tmmk-ksa.கம

இன்றைய சித்திரம்

இன்றைய சித்திரம்