ரமலான் நோன்பு இருப்பவர்களின் வசதிக்காக ~ சஹாரா தமிழ்

ads

திங்கள், 24 ஆகஸ்ட், 2009

ரமலான் நோன்பு இருப்பவர்களின் வசதிக்காக

ரமலான் நோன்பு இருப்பவர்களின் வசதிக்காகஅதிகாலை 3 மணியில் இருந்தே ஓட்டல்களை திறந்து வைக்கலாம் பெங்களூர் போலீஸ் அறிவிப்பு. பெங்களூர், ஆக.23-ரமலான் நோன்பு இருப்பவர்களின் வசதிக்காக பெங்களூரில் அதிகாலை 3 மணிக்கு ஓட்டல்களை திறந்து வைக்கலாம் என்று போலீசார் அறிவித்து உள்ளனர்.ரமலான் நோன்பு``ரமலான் மாதம் முழுவதும் நோன்பு இருக்க வேண்டும்'' என்பது, இஸ்லாமிய ஐம்பெரும் கடமைகளில் ஒன்றாகும்.கர்நாடகத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) ரமலான் நோன்பு தொடங்குவதாக, மாநில வக்பு வாரிய தலைவர் ஹாலித் அகமது தெரிவித்துள்ளார்.ஓட்டல்கள் 3 மணிக்கு திறப்புஇந்த நிலையில், ரமலான் நோன்பு இருப்பவர்களின் வசதிக்காக பெங்களூர் நகரில் அதிகாலை 3 மணிக்கே ஓட்டல்களை திறந்து வியாபாரத்தை தொடங்கலாம் என்று நகர போலீஸ் அறிவித்து உள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-அனுமதி பெற அவசியம் இல்லைபெங்களூர் நகரில் ரமலான் நோன்பு இருக்கும் முஸ்லிம்களுக்காக ஓட்டல்களை அதிகாலை 3 மணிக்கு திறக்கலாம். நள்ளிரவு 12 மணி வரை ஓட்டல்களை திறந்து வைத்து இருக்கலாம். முஸ்லிம்களுக்கு சஹர் உணவு வழங்குவதற்கு வசதியாக இந்த ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.இதற்காக அனுமதி எதுவும் பெற வேண்டிய அவசியம் இல்லை. என்றாலும் நள்ளிரவு 12 மணி முதல் அதிகாலை 3 மணி வரை ஓட்டல்களை கட்டாயம் அடைத்து விட வேண்டும்.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.
நன்றி: தினதந்தி

இன்றைய சித்திரம்

இன்றைய சித்திரம்