ரம்ஜானுக்காக தோரணக் கொடி கட்டிய 2 வாலிபர்களுக்கு அரிவாள் வெட்டு இந்து முன்னணி ஒன்றிய தலைவர் மீது கொலை முயற்சி வழக்கு ~ சஹாரா தமிழ்

ads

புதன், 23 செப்டம்பர், 2009

ரம்ஜானுக்காக தோரணக் கொடி கட்டிய 2 வாலிபர்களுக்கு அரிவாள் வெட்டு இந்து முன்னணி ஒன்றிய தலைவர் மீது கொலை முயற்சி வழக்கு

தஞ்சாவூர்,செப்.22-

தஞ்சை மாவட்டம் மதுக்கூரில் ரம்ஜான் பண்டிகைக்காக தோரணக் கொடியை கட்டிய 2 வாலிபர்களை அரிவாளால் வெட்டப்பட்டனர். இது தொடர்பாக இந்து முன்னணி ஒன்றிய தலைவர் உள்ளிட்ட 8 பேர் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தோரணக் கொடி தஞ்சை மாவட்டம் மதுக்கூர் சூரியத்தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் எம். ஷேக் பரீத் (வயது 35), மதுக்கூரைச் சேர்ந்தவர் மன்சூர் (21). இவர்கள் இருவரும் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு நேற்று முன் தினம் இரவு மதுக்கூர் பள்ளிவாசல் முதல் கடைத்தெரு வரை தோரண கொடியை கட்டும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மதுக்கூர் பஸ்நிலையம் அருகே நின்ற ஒரு கும்பல் அவர்களை வழிமறித்து, தகாத வார்த்தைகளால் பேசி அரிவாளால் வெட்டியது. இதில் ஷேக் பரீத்திற்கு தலையில் வெட்டுக்காயம் ஏற்பட்டது. அவர் சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். காயமடைந்த மன்சூர் பட்டுக்கோட்டை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த சம்பவம் குறித்து மதுக்கூர் போலீசார் இந்து முன்னணி அமைப்பின் மதுக்கூர் ஒன்றிய தலைவரான புலவஞ்சி கிராமத்தைச் சேர்ந்த போஸ் என்ற குபேந்திரன் உள்ளிட்ட 8 பேர் மீது கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்து அவர்களைத் தேடி வருகின்றனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக 2 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

--tmmk-ksa--

இன்றைய சித்திரம்

இன்றைய சித்திரம்