சம்பா சாகுபடி செய்த அனைவருக்கும் நிவாரணம் வழங்க வலியுறுத்தி, இரண்டாவது நாளாக இன்றும் திருவாரூர் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.
தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் நடந்த இந்த போராட்டத்தில் ஏராளமான விவசாயிகள் பங்கேற்றனர். 50 சதவீதம் பயிர் பாதிப்படைந்தவர்களுக்கு மட்டுமே நிவாரணம் வழங்கப்படும் என்று அரசு அறிவித்துள்ள நிலையில், பயிர் செய்த அனைவருக்கும், விவசாய தொழிலாளர்களுக்கும், காப்பீடு செய்தவர்களுக்கும் அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என்று போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. திருவாரூர் மாவட்டத்தில் திருத்துறைப்பூண்டி, கோட்டூர், பாமணி உள்ளிட்ட 48 இடங்களில் இந்த சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.
செவ்வாய், 26 பிப்ரவரி, 2013
நிவாரணம் வழங்க வலியுறுத்தி 2-வது நாளாக விவசாயிகள் சாலை மறியல்.
5:52 PM
விவசாயிகள்