புதன், 10 ஜூலை, 2019
இணைவீர் சஹாரா தமிழ் வாட்ஸ்அப் குழுமத்தில்..
வியாழன், 9 பிப்ரவரி, 2017
தமிழ்நாட்டில் மகிழ்ச்சியாக இருப்பதால் வேறு நாட்டில் குடியேறமாட்டேன்! ஏ.ஆர்.ரகுமான்
அப்போது அங்கிருந்த தமிழர்கள் மகிழ்ச்சியில் ஆரவாரம் செய்தனர். இந்நிகழ்ச்சியில் பேசிய டொரண்டோ மேயர், கனடாவில் குடியேறும்படி ரஹ்மானுக்கு அன்பு அழைப்பு விடுத்தார். இதுகுறித்து தனது முகநூல் பதிவில் பதிலளித்துள்ள ரஹ்மான், தான் தமிழகத்தில் மகிழ்ச்சியாக இருப்பதாகவும், வேறு நாட்டில் குடியேற விருப்பமில்லை என்று கூறியுள்ளார். இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மானை கெளரவிக்கும் விதமாக கனடா அரசு ஒரு தெருவுக்கு அல்லா ராகா ரஹ்மான் என்று பெயரிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
சனி, 6 ஆகஸ்ட், 2016
ரியோ ஒலிம்பிக்: இந்திய வீரர்கள் இன்று..
படகு பந்தயம் : தத்து போகனால் மாலை 5.00
துப்பாக்கி சுடுதல் :
ஜித்து ராய், குர்பிரித் சிங், அபுர்வி சண்டிலா, அயோனிகா பால் மாலை 5.00
டேபிள் டென்னிஸ் :
சரத் கமல், சவுமியாஜித் கோஷ், மனிகா பத்ரா, மவுதாஸ் மாலை 5.30
ஹாக்கி :
இந்தியா - அயர்லாந்து இரவு 7.30
டென்னிஸ் :
லியாண்டர் பயஸ்-ரோகன் போபண்ணா, சானியா மிர்சா-பிரார்த்தனா தாம்ப்ரே இரவு 11 மணி
அல்லாஹ் என்று சொன்னதால் விமானத்திலிருந்து இறக்கிவிடப்பட்ட தம்பதி...
சிகாகோ: அல்லாஹ் என்று சொன்னதற்காக இஸ்லாமிய தம்பதியை விமானத்தில் பயணிக்க அனுமதி மறுத்துள்ளது அமெரிக்காவைச் சேர்ந்த டெல்டா ஏர்லைன்ஸ் விமான சேவை நிறுவனம்.
நஸியா - ஃபைசல் அலி ஆகிய இஸ்லாமிய தம்பதி பாரிஸிலிருந்து சின்சினாட்டி செல்ல விமானத்தில் பதிவு செய்திருந்தனர். விமானத்தில் பயணத்திற்கு ஆயத்தமாக அமர்ந்திருந்த இருவரையும் விமானி மற்றும் பிற விமான பணியாளர்கள் இணைந்து விமானத்திலிருந்து வெளியேற்றியுள்ளனர்.
நஸியா தலையை மூடிய படுதா அணிந்திருந்து ஹெட்செட் அணிந்திருந்தார் என்றும் ஃபைசல் புழுக்கத்தினால் "அல்லா" என்று அடிக்கடி கூறினார் என்றும் கூறிய விமான பணியாளர்கள் அதனையே காரணமாகக் கொண்டு அவர்கள் விமானத்தில் பயணிக்க அனுமதிக்க அனுமதி மறுத்துள்ளனர்.
அவர்களிடம் சில கேள்விகள் கேட்க வேண்டும் என்பதால் தங்கள் உடைமைகள் அனைத்தையும் எடுத்துக்கொண்டு வெளியே வருமாறு கேட்டுக்கொண்ட விமானப் பணிப்பெண் அவர்கள் விமானத்தில் பயணம் செய்ய முடியாது என்று தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து, அமெரிக்க விமான நிறுவனங்களிடம் இந்த இஸ்லாமிய விரோதப் போக்கு தொடர்கிறது என்றும் இதனை எதிர்த்து அமெரிக்க அரசுக்கு இஸ்லாமிய நல அமைப்புகள் வலியுறுத்தியுள்ளன.
சவுதியில் பணி புரியும் சகோதரர்களுக்கு மிக மிக மகிழ்ச்சியான செய்தி!!
சவுதியில் வாழும் வெளிநாட்டவர்களுக்கு அரசு-சார் பணிகளை எளிதாக்கவும், கஃபாலத் பித்தலாட்டங்களை முறியடிக்கவும் புதிய அடையாள அட்டை வழங்க சவுதி அரசவை முடிவு செய்துள்ளது
இது பற்றி இளவரசர் முகமது பின் நைஃப், துணைப் பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சர், அரசவையில் கூறியதாவது:
“சவுதியில் வாழும் வெளிநாட்டவர்களுக்கு அரசு-சார் பணிகளை எளிதாக்கவும், கஃபாலத் பித்தலாட்டங்களை முறியடிக்கவும் இகாமா துறையை (DEPARTMENT OF JAWAZAT) மூட உள்ளோம்.
அதற்க்கு பதிலாக முக்கிய்ம் (MUQEEM) எனப்படும் தற்காலிக குடியுரிமை அட்டை ஒவ்வொரு வெளிநாட்டவருக்கும் வழங்கப்படும்.
IQAMA ஐ போன்று ஒவ்வொரு வருடமும் புதிப்பிக்க தேவை இல்லை இதன் கலாவதி காலம் முடிவற்றது. ஆனால் ஒவ்வொரு ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை புதுப்பித்து கொள்ள வேண்டும்.
இதனை புதுப்பிக்க எந்த ஒரு அலுவலகத்திலோ அல்லது அவரவர்களின் கம்பெனிகளிலோ அடையாள அட்டையை ஒப்படைக்க தேவை இல்லை. வலைதளத்திலேயே புதுபித்துகொள்ளலாம்.
இந்த MUQEEM அடையாள அட்டையின் படியே ஒவ்வொருவருக்கும் அவர்களது
1. வங்கி கணக்கு,
2. மருத்துவ பதிவு,
3. ஓட்டுனர் உரிமம்,
4. தொலைப்பேசி இணைப்பு,
5. இருப்பிட பதிவு,
6. கடவுச் சீட்டு விவரங்கள்,
7. தூதரக விவரங்கள்,
8. காவல்துறை விசாரணை ஆகியவை பதிவு செய்யப்படும்.இந்த அட்டையை சரிபார்க்க ஒவ்வொரு சோதனை சாவடி, வங்கி மற்றும் அரசு சார் நிறுவனங்களிலும் புதிய இயந்திரங்கள் மிக விரைவில் பொருத்தப்படும்.
இதை போன்று MUQEEM துறையில் பணி செய்யும் சவுதி அரசு பணியாளர்களை கண்காணிக்க புது ரக இயந்திரங்கள் ஒவ்வொரு அலுவலகத்திலும் சவுதி அரேபியா முழுவதிலும் மிக விரைவில் பொருத்தப்படும்.
இது முழுவதிலும் வெளிநாட்டவர்களை பாதுகாக்கும் எண்ணம் வருகிற இஸ்லாமிய வருடபிறப்பு 01, Muharram 1437 H (14, October 2015) தொடங்கப்பட உள்ளது.
இதனை போல் சவுதி அரேபிய மக்களின் நலம் பேணும் வகையில் அவர்களது MUQEEM அடையாள அட்டைகளிலும் சில மாற்றங்கள் வருவதாகவும் தெரிவித்தார்...!
திங்கள், 25 ஏப்ரல், 2016
பாரீஸ் உடன்படிக்கை- இந்தியா கையெழுத்து!
வியாழன், 17 செப்டம்பர், 2015
மக்கா விபத்தில் பலியானவர்களுக்கு 1.75 கோடி ரூபாய் இழப்பீடு!
கடந்த வெள்ளியன்று முஸ்லிம்களின் புனித நகரான மக்காவில் ஏற்பட்ட கடும் மணல் புயல் மற்றும் பலத்த மழை காரணமாக கிரேன் சரிந்து விழுந்து சுமார் 111 பேர் பலியானார்கள் 238 பேர் காயமடைந்தனர்.
இந்த நிலையில் இந்த விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு சவூதி அரேபிய மன்னர் சல்மான் பின் அப்துல் அஜீஸ் இழப்பீட்டு தொகைகளை அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள உத்தரவில், பலியானவர்கள் குடும்பங்களுக்கு ஒன்றே முக்கால் கோடி ரூபாய் (1 மில்லியன் சவூதி ரியால்) மற்றும் காயமடைந்தவர்களுக்கு 89 லட்ச ரூபாய் (அரை மில்லியன் சவூதி ரியால்) இழப்பீடாக வழங்க உத்தரவிட்டுள்ளார்.
மேலும், இறந்தோரின் குடும்பத்திலிருந்து எவரேனும் இருவர் அரசின் விருந்தாளிகளாக அடுத்த வருடம் (2016) ஹஜ் பயணம் மேற்கொள்ளவும் அதற்கான செலவையும் சவூதி அரசே ஏற்றுக் கொள்ளும் என்றும் அறிவிக்கபப்ட்டுள்ளது.
அதேபோல காயம்பட்டு இம்முறை ஹஜ் செய்ய இயலாது போனோர், இனி குணமடைந்த பிறகு அடுத்து வரமுடிந்த ஹஜ்ஜுக்கு, சவூதி மன்னரின் விருந்தாளியாக அவர் வந்து செல்லும் முழு செலவையும் சவூதி அரசே ஏற்கும் என்றும் அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை வந்து காண்பதற்கு பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினர் இருவருக்கு அரசு செலவில் விசிட் விசா வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
சவூதி அரசின் இந்த அறிவிப்பை பல்வேறு உலக தலைவர்கள் வரவேற்றுள்ளனர்.
சிலியில் பயங்கர நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 8.3 ஆக பதிவு, சுனாமி எச்சரிக்கையும் விடப்பட்டது...
இதனால் அந்த பகுதிகள் பயங்கரமாக குலுங்கின. இலாபெல் நகரில் ஏராளமான கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. அதில் 2 பேர் சிக்கி உயிரிழந்தனர். 15 பேர் காயமடைந்துள்ளனர். மற்றும் பல்வேறு இடங்களிலும் கட்டிடங்கள் இடிந்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் மேலும் உயிரிழப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது.
நிலநடுக்கம் 8.3 ரிக்டர் அளவுகோலில் இருந்தது. கடலுக்கு அடியில் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் இதன் மையம் அமைந்திருந்தது. எனவே சுனாமி தாக்கலாம் என எச்சரிக்கை விடப்பட்டது.
3 மீட்டர் உயரத்திற்கு அலை எழுந்து வந்து தாக்கும் என்று எச்சரிக்கையில் கூறப்பட்டது. பக்கத்து நாடுகளான பெரு, அமெரிக்காவின் கவாய், கலிபோர்னியா பகுதி, எதிர்பக்கத்தில் உள்ள நியூசிலாந்து ஆகிய நாடுகளிலும் சுனாமி தாக்கும் என்று எச்சரிக்கையில் கூறப்பட்டிருந்தது. ஆனால் சுனாமி தாக்கவில்லை. எனினும், லட்சக்கணக்கான மக்கள் அந்த பகுதியில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.
நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட இடங்களில் மீட்பு பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. நிலநடுக்கத்திற்கு பிறகு பலமுறை சிறிய அளவிலான அதிர்வுகள் ஏற்பட்டன. இதனால் மக்கள் கடும் பீதி அடைந்தனர். அவர்கள் இரவு முழுவதும் வீதியிலேயே படுத்து தூங்கினார்கள்.
சிலி நாட்டில் 2010–ம் ஆண்டு 8.8 அளவில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. அப்போது 500 பேர் பலியானது குறிப்பிடத்தக்கது.
வியாழன், 11 ஜூன், 2015
மியான்மர் தாக்குதல்: பாஜகவின் மற்றொரு ரேம்போ பொய்!
மியான்மர் : "இந்திய இராணுவம் மியான்மருக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தவில்லை; இந்திய எல்லைக்குள்ளேயே தாக்குதல் நடந்தது" என மியான்மர் அரசு கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவுக்குள் பயங்கரவாதத் தாக்குதல்களை நடத்திவிட்டு மியான்மருக்குள் புகுந்து ஒளிந்துகொண்ட பயங்கரவாதிகளை அந்நாட்டுக்குள் புகுந்து தாக்குதல் நடத்த மோடி உத்தரவிட்டதன் பேரில் இந்திய இராணுவம் மியான்மருக்குள் புகுந்து நடத்திய அதிரடி தாக்குதலில் 100 க்கு மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர் என்ற செய்தி கடந்த நாட்களில் இந்தியாவில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்தியா மீது அத்துமீறுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கும் இதுதான் கதி என்றும் எந்த நாடாக இருந்தாலும் மியான்மருக்குள் புகுந்து தாக்குதல் நடத்தியதுபோன்றே அந்நாட்டுக்குள் புகுந்தும் இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாதிகளை ஒழிக்க இந்தியா தயங்காது என்றும் பாகிஸ்தான் தொடர்பாக கேட்கப்பட்ட கேள்வி ஒன்றுக்கு மத்திய பாஜக அமைச்சர் வீராவேசமாக முழங்கியிருந்தார்.
இந்திய பாதுகாப்புக்காக மியான்மருக்குள் புகுந்து இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தி பயங்கரவாதிகளைக் கொன்றது என்ற செய்தி இந்திய மக்களிடையே மிகுந்த ஆர்வத்துடன் பேசப்பட்டது. ஆனால், நடத்தப்பட்ட தாக்குதல் இந்திய எல்லைக்குள்ளேயே நடத்தப்பட்டதாகும் மியான்மருக்குள் இந்திய இராணுவம் நுழையவில்லை என்றும் பயங்கரவாதிகள் இந்தியாவிலேயே ஒளிந்திருந்தனர் என்றும் மியான்மர் அரசு வெளியிட்டுள்ள மறுப்பறிக்கை, பாஜகவின் மற்றொரு பொய்யைக் கிழித்து தொங்கவிட்டுள்ளது.
இது தொடர்பாக மியான்மர் அதிபர் மாளிகை இயக்குநர் ஸா ஹிதாய் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
"அண்டை நாடுகளைத் தாக்க மியான்மர் மண்ணை யாரும் பயன்படுத்த அனுமதிக்க மாட்டோம். இந்த நாட்டில் பயங்கரவாதிகளுக்கு இடமில்லை. இருப்பினும் இந்திய ராணுவத்தின் நடவடிக்கை இந்திய எல்லைக்குள்தான் இருந்தது. மியான்மர் ராணுவம் கொடுத்த தகவலின்படி, இந்திய - மியான்மர் எல்லையில், இந்தியாவுக்கு உட்பட்ட பகுதியில்தான் இந்த நடவடிக்கை நடந்ததாக அறிகிறோம். எந்த வெளிநாட்டு சக்தியும், மியான்மர் மண்ணைப் பயன்படுத்தி அண்டை நாடுகளைத் தாக்குவதை அனுமதிக்க மாட்டோம்."
மேற்கண்டவாறு அந்தச் செய்தி குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
"பயங்கரவாதிகளை ஒழிக்க எந்த நாட்டுக்குள்ளும் மியான்மர் போன்று உள்நுழைந்து தாக்குதல் நடத்த மத்திய அரசு தயங்காது" என வீராவேசம் பேசிய மத்திய பாஜக அமைச்சரிடமிருந்து மேற்கண்ட மியான்மர் அதிபர் மாளிகையின் அறிக்கை குறித்தான எந்தப் பதிலையும் காணமுடியவில்லை.
புதன், 10 ஜூன், 2015
தினமும் 5-முறை யோகா செய்யும் எங்களுக்கு உங்கள் யோகாவெல்லாம் தேவையில்லை!
மத்திய காவி அரசு பல வழிகளிலும் தனது காவிச் சிந்தனையை பிற மதத்தினர் மீது திணித்து வருகிறது! அதில் ஒன்றுதான் யோகா தினம்!
எங்களுக்கு அதெல்லாம் தேவையில்லைப்பா! உங்க மூத்த தலைவர் முரளி மனோகர் ஜோஷி ‘முஹம்மது மிகப் பெரிய யோகி’’ என்று சொன்னது உண்மைதான்! அந்த யோகி உங்களது யோகாவை விட சிறப்பான யோகத்தை எங்களூக்கு கற்றுத் தந்துள்ளார்! அதை ஒரு நாளைக்கு ஐந்து முறை கோடிக்கணக்கான மக்கள் செய்து கொண்டு தான் இருக்கிறோம்!
நான் பள்ளியில் படிக்கும் காலத்தில் உட்ற்பயிற்சி வகுப்பில் வஜ்ராசனம் சொல்லிக் கொடுக்கும் போது முஸ்லிம் பசங்க அசால்ட்டா செய்யுரானுங்க உங்களூக்கு என்ன வந்தது என ஆசிரியர் கேட்கும் போது நான் சொன்னேன் அது எங்களுக்கு தொழுகையில் அத்தஹிய்யாத் இருப்பு நிலை அதனால் எங்களுக்கு பழகி விட்டது சார் ! என்ற போது அந்த கிறி்ஸ்தவ ஆசிரியர் வியந்தது இப்பொது நினைவுக்கு வருகிறது!
அதனால உங்க யோகாவெல்லாம்
எங்களுக்கு தேவையில்லை காவி பாய்ஸ்!
-செங்கிஸ் கான்
969 பயங்கரவாத அமைப்பு தலைவர் விராதுவின் மத துவேஷ பேட்டி!
மியான்மர் : "முஸ்லிம்களைத் தாய்லாந்து, ஆஸ்திரேலியா, மியான்மர் போன்ற நாடுகள் அகதிகளாக ஏற்றுக்கொள்ளக்கூடாது" என மியான்மரில் செயல்படும் 969 என்ற மத பயங்கரவாத அமைப்பின் தலைவர் விராது மத துவேஷ கருத்துகளைத் தெரிவித்துள்ளது உலக நாடுகளிலிருந்து மியான்மருக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
மியான்மரில் 969 என்ற பெயரில் செயல்படும் மத பயங்கரவாத அமைப்பின் தலைவர் விராது. இவர், ஆஸ்திரேலிய ஊடகமான மசோயன் மோனஸ்த்ரிக்கு வழங்கிய பேட்டியில் முஸ்லிம்களுக்கு எதிராக இன துவேஷ கருத்துகளை வெளியிட்டுள்ளார்.
அதில், "முஸ்லிம்கள் நாட்டிற்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருக்கின்றனர். முஸ்லிம் அல்லாதவர்களிடம் அவர்கள் பழகுவதில்லை. புத்தபெண்களை முஸ்லிம் ஆண்கள் திருமணம்செய்து மதம் மாற்றுகின்றனர்; ஜிஹாதைப் பரப்பி வருகின்றனர்.
முஸ்லிமைத் திருமணம் செய்த புத்தமத 6 மாத கர்ப்பிணிப்பெண் புத்தமடத்துக்கு சென்றுவந்ததால் அவள் அவனது கணவனால் அடிக்கப்பட்டாள். மற்றொரு முஸ்லிமைத் திருமணம் செய்த புத்த பெண், புத்தருக்குப் பூ போட்டதால் அவளது கணவனால் கொலை செய்யப்பட்டாள்." என்று கூறினார்.
மேலும், "நேற்று நூற்றுக்கும் மேற்பட்ட புத்த குடிமக்கள் 969 அமைப்புடன் கலந்துகொண்டு பேரணி நடத்தினர். கப்பலில் சென்ற அகதிகளை ஏற்றுக்கொள்ள கூறி மியான்மார் அரசுக்கு அழுத்தம் கொடுத்ததற்கு அவர்கள் சர்வதேச சமூகத்தைக் கண்டித்தனர்.
முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழாத நாடுகளான மியான்மார், தாய்லாந்து மற்றும் ஆஸ்திரேலியா நாடுகள் அகதிகளை ஏற்றுக்கொள்ள கூடாது. அவர்களை இந்தோனேசியா, மலேசியா மற்றும் புருணே போன்ற முஸ்லிம் நாடுகளுக்கு அனுப்ப வேண்டும்.
அகதிகள் இரண்டு வகைகள்; ஒன்று உண்மையான அகதிகள்; மற்றொன்று போலிகள்!" என்று முஸ்லிம்களுக்கு எதிராகக் கடுமையான இன துவேஷ கருத்துகளை வெளியிட்டார். இவரின் இக்கருத்துகளுக்கு உலக நாடுகளிலிருந்து கடும் கண்டனமும் எதிர்ப்பும் கிளம்பியுள்ளது. இது மியான்மர் அரசுக்கு மேலும் நெருக்கடியைக் கொடுக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இந்த விராது, முஸ்லிம்களுக்கு எதிராக கலவரம் உருவாக்கி அவர்களைப் படுகொலை செய்ய வேண்டுமென வெளிப்படையாக பேசி துண்டறிக்கைகள் வினியோகம் செய்ததற்காக கடந்த 2003 ம் ஆண்டு, 25 வருடங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு சிறையிலடைக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. எனினும் 8 ஆண்டுகளிலேயே கடந்த 2011 ஆண்டு அரசியல் கைதிகள் விடுவிக்கப்பட்டபோது, சூகி அரசால் விடுதலை செய்யப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
- அபூஷேக் முஹம்மத்
வெள்ளி, 5 ஜூன், 2015
மலேசியா சபாவில் இன்று காலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம்!
மலேசியாவின் பார்நியோ திவீல் இன்று காலை ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.0 ஆக பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
பூமிக்கு அடியில் 10 கி.மீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் உருவாகி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் வீடுகள், கட்டிடங் கள் குலுங்கின.
இந்த நிலநடுக்கம் காரண மாக ரோடுகள் சேதம் அடைந்துள்ளன. வீடுகளின் சுவர்கள், ஜன்னல்கள், மற்றும் தரைகளில் கீறல்களும், விரிசல்களும் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக் கப்பட்டுள்ளது. சுனாமி எச்ச ரிக்கையும் விடுக்கப்பட வில்லை.
இதற்கிடையே இந்த நில நடுக்கத்தில் கிணபாழு மலை மீது ஏறும் மலையேற்ற வீரர்களில் ஒருவர் பலியானதாகவும் 89 பேரை காணவில்லை என்றும் என கூற்ப்படுகிறது ஆனால் இத்தகவல் உறுதி படுத்தப்படவிலை.
வியாழன், 4 ஜூன், 2015
காட்டுக்குள் இழுத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்யும் கொடுமை: ரொஹிங்யா பெண்களின் பரிதாப வாழ்க்கை (வீடியோ இணைப்பு)
ரொஹிங்யா முஸ்லிம் பெண்களை கடத்தல்காரர்கள் பலாத்காரம் செய்வதாக பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது.
புத்த மதத்தினரைப் பெரும்பான்மையாகக் கொண்ட மியான்மரில், ரொஹிங்யா முஸ்லிம்கள் மீது அண்மைக் காலமாக தாக்குதல்கள் நிகழ்ந்து வருகின்றன.
இந்த தாக்குதலுக்கு பயந்து ரொஹிங்யா முஸ்லிம்கள், மலேசியா இந்தோனேஷியா மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளுக்கு ஆதரவு கோரி செல்கின்றனர்.
ஆதரவு கோரி செல்லும் இவர்கள் பயணிக்கும் வழியிலேயே, பசியாலும் பட்டியாலும் செத்துமடிவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன, சமீபத்தில் மலேசிய எல்லைப்பகுதியில் 139 கல்லறை தளங்களும், 28 கடத்தல் முகாம்களும் கண்டுபிடிக்கப்பட்டது.
அந்த கல்லறை தளங்களில் 100-க்கும் மேற்பட்ட எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டதால் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டது.
இந்த எலும்புக்கூடுகள் கடத்தல்காரர்களால் கடத்தி வரப்பட்ட, ரொஹிங்யா முஸ்லிம் மக்களுடையதாக இருக்கலாம் என சந்தேகிப்பதாக மலேசிய உள்துறை மந்திரி அகமது ஷாகித் ஹமிதுவும் கூறியிருந்தார்.
இந்நிலையில் அடைக்கலம் தேடி வந்த ரொஹிங்யா முஸ்லிம் பெண்களை கடத்தல் கும்பல் பாலியல் பலாத்காரம் செய்ததாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.
தாய்லாந்து நாட்டின் படாங் பேசர் பகுதியில் உள்ள கடத்தல் முகாமில் இருந்து தப்பித்த நூர் கைதா அப்துல் சுகுர் என்ற பெண்மணி, இது குறித்து மலேசிய செய்தி ஊடகமான பெர்னாமாவுக்கு அளித்துள்ள பேட்டியில், ஒவ்வொரு நாள் இரவிலும் எங்கள் இனத்தை சேர்ந்த 2 அல்லது 3 இளம்பெண்களை காட்டுக்குள் இழுத்துச்சென்று கடத்தல்கும்பல் பாலியல் பலாத்காரம் செய்தனர்.
இதனால் இரு பெண்கள் கர்ப்பமடைந்துள்ளனர் என்று அவர் தெரிவித்துள்ளார்.
இதே போன்ற பாலியல் பலாத்கார சம்பவங்கள் மலேசிய பகுதியிலும் நடைபெற்றதாக சுகுரின் கணவரான நூருல் அமின் நோபி ஹுசைனும் கூறியுள்ளார்.
அவமதிக்கப்பட்ட இஸ்லாமிய பெண் : மன்னிப்பு கோரிய அமெரிக்க விமான நிறுவனம்
இஸ்லாமிய பெண் பயணியை தவறாக நடத்திய குற்றத்திற்காக அமெரிக்க யுனைடெட் ஏர்லைன்ஸ் நிறுவனம் அவரிடம் மன்னிப்பு கோரியுள்ளது.
அமெரிக்காவை சேர்ந்த தஹேரா என்ற இஸ்லாமிய பெண், கடந்த 31 ஆம் திகதி சிகாகோவிலிருந்து வாஷிங்டன் செல்லும் யுனைடெட் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் விமானத்தில் பயணித்துள்ளார்.
அப்போது, இவர் விமானப்பணிப்பெண்ணிடம் "டயட் கோக்" கேட்டுள்ளார், அதற்கு பணிப்பெண்ணோ நீங்கள் அதனை ஆயுதமாக பயன்படுத்தக்கூடும் என்று கூறி கோக்கினை தர மறுத்துள்ளார்.
ஆனால் தஹேராவின் அருகில் இருந்த பயணி ஒருவர், டின் பியரை குடித்துக்கொண்டிருந்தார், இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த தஹேரா, அதனை சுட்டிக்காட்டி பணிப்பெண்ணிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
ஆனால், விமானத்தில் பயணம் செய்த மற்ற பயணிகளும், இஸ்லாமிய மதத்திற்கு எதிரான கருத்துகளை சுட்டிக்காட்டி தஹேராவை அடக்கியுள்ளனர், தஹேராவும் தனது பயணத்தை அமைதியாக தொடர்ந்தார்.
இதனைத் தொடர்ந்து இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தததைத் தொடர்ந்து, டுவிட்டரில் #UnitedforTahera என்ற ஹேஷ்டேக் உருவாக்கப்பட்டது.
தஹேராவை அவமதித்ததை கண்டித்து யுனைடெட் ஏர்லைன்ஸ் நிறுவனத்தை புறக்கணிக்கப் போவதாகவும் பொதுமக்கள் கருத்து தெரிவித்தனர்.
இந்நிலையில், இந்த சம்பவத்திற்கு காரணமான பணிப்பெண், பணியிலிருந்து நீக்கப்பட்டுவிட்டார் என்றும் தஹேராவிடம் நாங்கள் மன்னிப்பு கேட்பதாகவும் யுனைடெட் ஏர்லைன்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.
ஞாயிறு, 5 ஏப்ரல், 2015
மலேசிய விமானம் வெடித்து சிதறியது: முன்னாள் தூதர் உட்பட 6 பேர் பலி
மலேசிய விமானம் வெடித்து சிதறிய விபத்தில், அமெரிக்காவுக்கான முன்னாள் தூதர் உட்பட 6 பேர் பரிதாபமாக பலியாகினர். மலேசிய பிரதமருடைய மகளின் திருமண நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டு திரும்பியபோது நேற்று இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
மலேசிய நாட்டு பிரதமர் நஜீப் ரசாக் மகளின் திருமணம், பெகான் என்ற இடத்தில் நேற்று நடைபெற்றது. இந்த திருமணத்தில் மலேசியாவை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
திருமணம் முடிந்து, அமெரிக்காவுக்கான முன்னாள் தூதர் ஜமாலுதீன் ஜார்ஜிஸ், பிரதமரின் உதவியாளர் உள்ளிட்ட 6 பேர் ஹெலிகாப்டரில் திரும்பினர்.
மலேசியாவின் தெற்கு மாகாணமான செமன்யீக் பகுதியில் ஹெலிகாப்டர் சென்று கொண்டிருந்தது. காலை 4.55 மணியளவில் ஹெலிகாப்டரில் திடீரென தீபிடித்தது. பின்னர் வெடித்து சிதறிய விமானம் அடர்ந்த காட்டு பகுதியில் விழுந்தது. இதில் முன்னாள் தூதர் ஜமாலுதீன் உட்பட 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
தகவலறிந்து மீட்பு படையினர் விரைந்து சென்று உடல்களை மீட்டனர்.
இயந்திர கோளாறு காரணமாக இந்த விபத்து நடந்திருக்கலாம் என கூறப்படுகிறது.
இந்த விபத்து குறித்து உயர்மட்ட விசாரணைக்கு மலேசிய பிரதமர் நஜீப் ரசாக் உத்தரவிட்டுள்ளார்.
திருமண நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டு திரும்பிய முக்கிய பிரமுகர்கள், ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தது அங்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
செவ்வாய், 5 ஆகஸ்ட், 2014
ஹமாஸ் VS இஸ்ரேல் ஒரு போர் வியுகம் குறித்த ஒரு பார்வை...
"ஹமாஸ் வெற்றி பெற்றுவிட்டது" :
1- இஸ்ரேலின் பென்குயுரின் விமான நிலையத்தை மூடவேண்டும் என்று ஹமாஸ் முடிவெடுத்தது. இதன் பொருட்டு இஸ்ரேலுக்கு வந்து போகும் பல நாட்டு விமான சேவைகளையும் எச்சரிக்கை செய்தது.
2- இஸ்ரேல் படை சிப்பாய்கள் போராட்டத்தில் கலந்து
கொள்ளது இருக்க தமது கால்களுக்கே சுட்டனர்.
3- இஸ்ரேல் படை சிப்பாய்கள் தற்கொலை செய்து கொண்டனர்.
4- நாளடைவில் இஸ்ரேலுக்கு பல டாலர்கள் நஷ்டம் ஏற்பட்டது.
5- கஸ்ஸாமின் ஏவுகணைகள் டெல் அவிவில் பல நிறுவனங்களுக்கு பாதிப்புக்களை ஏற்படுத்தின.
6- ஐந்து மில்லியன்களை விட அதிகமான இஸ்ரேலியர்கள் முகாம்களில் தஞ்சம் அடைந்துள்ளனர்.
7- உலகமே காசாவுக்கு சார்பாக மாறியது.. சில யூதர்கள் கூட.
8- அமெரிக்கா இஸ்ரேலுடன் சேர்ந்திருந்து .அதன் அசிங்கமான முகத்தை உலகிற்கு நிரூபித்தது.
9- அறுபது ஆண்டுகள் கடந்து இஸ்ரேல் தமது கொல்லப்பட்ட படைகளுக்காக ஒப்பாரி வைத்தது .
10- கஸ்ஸாம் இரு சியோனிச இராணுவ சிப்பாய்களை கைது செய்தது.
11- கஸ்சாமின் போர் வியூகங்கள் கடும் முன்னேற்றத்தை கண்டது,
12- இஸ்ரேல் படையின் முக்கிய தலைவர்கள் கொல்லப்பட்டனர்.
13- இஸ்ரேலின் ஆயுதங்களுக்கு கடும் சேதம் ஏற்பட்டது.
14- தமது மானத்தை காத்துக்கொல்ல போர் நிறுத்ததுக்கு
வழிகளை இஸ்ரேல் தேடியது.
15- இஸ்ரேலுக்குள்ளேயே அதன் எதிர்ப்பாளர்களது எண்ணிக்கை அதிகரித்தது.
16- அரபு சியோனிஸ்டுகளது உண்மை முகம் உலகிற்கு தெரிந்தது.
17- அரபு சியோனிஸ்டுகளது மீடியாக்கள் உருவாக்கிய இஸ்ரேல் சார்பியக் கருத்துக்கள் தோல்வி கண்டன .
18- பலஸ்தீனுக்குள் போராடும் ஏனைய குழுக்களும்
ஹமாஸுடன் போர் நிறுத்த நிபந்தனைகளுடன் ஒத்துச் சென்றன.
19- இன்னும் கஸ்சாமின் ஏவுகணைகள் இஸ்ரேலை பதம் பார்க்கின்றன.
20- இஸ்ரேலின் அரசியல்பகுப்பு ஆய்வாளர்கள் ஹமாஸ் போராட்டத்தில் வெற்றி பெற்றுவிட்டது என்று ஏற்றுக்கொண்டனர்.
அஷ்ஷெய்க் அப்துல் ஹமீத் பிலாலி-
ஆழமான செய்திகள்
Press- imtiyas
#JournalisticviewAbusheikMuhammed
பிரிட்டிஷ் துணை அமைச்சர் சயீதா வார்சி காசா தாக்குதலில் பிரிட்டிஷ் அரசின் நிலைப்பாடு தொடர்பாக பதவி விலகியுள்ளார்.
பிரிட்டிஷ் வெளியுறவு அமைச்சகத்தின் துணை அமைச்சர் , சயீதா வார்சி, காசா தாக்குதல் பிரச்சினையில் பிரிட்டிஷ் அரசின் நிலைப்பாடு தொடர்பாக பதவி விலகியுள்ளார்.
காசா பிரச்சினையில் பிரிட்டிஷ் அரசு எடுத்திருக்கும் நிலைப்பாடு " தார்மீக ரீதியில் நியாயப்படுத்த முடியாதது" என்று அவர் கூறியிருக்கிறார்.
தான் வருத்தத்துடனே பதவி விலகுவதாகவும், ஆனால்,காசா குறித்த அரசின் தற்போதைய கொள்கை, பிரிட்டனின் நற்பெயருக்கு சேதம் விளைவிப்பதாகத் தான் நம்புவதாகவும், வார்சி, பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கேமரனுக்கு எழுதிய கடிதத்தில் கூறியிருக்கிறார்.
வார்சி அம்மையார்தான் , பிரிட்டிஷ் அமைச்சரவை ஒன்றில் பதவிக்கு வந்த முதல் முஸ்லிம் பெண்மணியாவார்.
அவரது பதவி விலகல் குறித்து வருத்தம் தெரிவித்த பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கேமரன், தனது அரசு காசாவில் தற்போதைய நிலைமை சகித்துக்கொள்ள முடியாததாகவே இருப்பதாகவும், இரு தரப்புகளும் உடனடியாக நிபந்தனையற்ற போர் நிறுத்தத்துக்கு உடன்படவேண்டும் என்றுமே கூறிவருவதாகவும் கூறினார்.
காசாவின் மீது இஸ்ரேலியக் குண்டுத்தாக்குதல் பற்றி போதிய அளவு கடுமையாக கேமரன் கண்டனத்தைத் தெரிவிக்கவில்லை என்று எதிர்க்கட்சியினரும், அவரது கன்சர்வேட்டிவ் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலரும் விமர்சித்து வருகிறார்கள் என்று பிபிசியின் அரசியல் விவகாரச் செய்தியாளர் கூறுகிறார்.
Source- BBC Tamil
#MuhammedHaris
போர் நிறுத்தம் காலையில் என்று இருக்க, இரவோடு இரவாக இஸ்ரேலிய படையினர் வாபஸ்!
போர் நிறுத்தம் ஆரம்பமாக 10 நிமிடங்களுக்கு முன்பே 25 ராக்கெட்டுகள் பல பாகங்களுக்கும் அடித்துள்ளார்கள் கஸ்ஸாம் வீர்கள்!
போர் நிறுத்தம் காலையில் என்று இருக்க, இரவோடு இரவாக இஸ்ரேலிய படையினர் வாபஸ் பெற ஆரம்பித்தார்கள் உலகின் பலம் பொருந்திய 4வது படையினர்.
மோட்டார் தாக்குதல்களும் விழ விழ அவர்களும் கொண்ட கொள்கையில் விடாப் பிடியாக வாபஸ் வாங்கி விட்டார்கள் !..
Source- Al Jazeera
Press- fairoos
#JournalisticviewAbusheikMuhammed
காஸா, பாலஸ்தீனத்திற்க்கு ஆதரவாக கால்பந்தாட்ட வீரர்கள் - பிரேசிலிய லீக்
காஸா, பாலஸ்தீனத்திற்க்கு ஆதரவாக கால்பந்தாட்ட வீரர்கள் - பிரேசிலிய லீக்.
Source- SHEHABNEWS
#MuhammedHaris
காசா மீதான இஸ்ரேலின் தாக்குதலை கண்டித்து ஈரான் மாணவர்கள் ஆர்ப்பாட்டம்...
ஈரானிய மாணவர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் தெஹ்ரானில் உள்ள எகிப்திய நலன்களை பிரிவினை முற்றுகையிட்டு எகிப்திய கட்டுப்பாட்டில் உள்ள ரஃபா எல்யை மீண்டும் திறக்குமாறு கோரியும் காசா மீதான இஸ்ரேலிய பயங்கரவாதிகளின் கொடூரமான தாக்குதல்களை கண்டித்தும் தங்கள் கோபத்தை வெளிப்படுத்தினர்
Source- Press Tv
#MuhammedHaris