ஷார்ஜா-வில் இஸ்லாமிய அறிவரங்கம் ~ சஹாரா தமிழ்

ads

திங்கள், 5 அக்டோபர், 2009

ஷார்ஜா-வில் இஸ்லாமிய அறிவரங்கம்

நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை முறையிலிருந்து கற்றுக் கொள்ள வேண்டிய படிப்பினைகள் மற்றும் பின்பற்ற வேண்டிய அவசியங்களை வலியுறுத்தும் இஸ்லாமிய அறிவரங்கம் நிகழ்ச்சி அக்டோபர் 23, 2009 வெள்ளிக்கிழமை அன்று ஷார்ஜா ரோலா சதுக்கத்தில் அமைந்துள்ள அல் நஜஃப் ரெஸ்ட்டாரண்ட் அரங்கத்தில் மாலை 04.30 மணி முதல் 07.30 மணி வரை நடைபெறவுள்ளது.
நபி (ஸல்) அவர்கள் ஒரு அழகிய முன் மாதிரி என்ற தலைப்பில் நடைபெறும் இந்த அறிவரங்கத்தில் அவருடைய குடும்ப வாழ்க்கை, அரசியல் வாழ்க்கை, இறையச்சம், சமுதாயப் பணி, குண நலன்கள், கொடைத்தன்மை ஆகிய தலைப்புகளில் சொற்பொழிவுகள் நடைபெறும். பொறியாளர் ஜெய்லானி தலைமை வகிக்கிறார். பேச்சாளார்கள் நாசர் அலிகான், மௌலவி ஹிதாயத்துல்லாஹ் நூரி, அப்துல் ஹாதி, யாசின் நூருல்லாஹ், ஹுசைன் பாஷா, அப்துல் ரஹ்மான் ஆகியோர் சொற்பொழிவாற்றுகின்றனர்.
ஷார்ஜா மண்டல முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் சார்பாக நடைபெறும் இந்நிகழ்ச்சியில் பார்வையாளர்களாக கலந்துக் கொள்ள முன்பதிவு செய்பவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுமென மண்டலத் தலைவர் இக்பால் தெரிவித்துள்ளார். முன்பதிவுக்கு 055-6800275, 050-8669186, 055-3369649
என்ற கைபேசி எண்களுக்கு தொடர்பு கொள்ளலாம்.

இன்றைய சித்திரம்

இன்றைய சித்திரம்