வந்தவாசி - தகுந்த நேரத்தில் சிகிச்சை அளிக்காததால் வா­லிபர் இறந்தார்! தமுமுகவினர் சாலைமறியல் ஆர்ப்பாட்டம் ~ சஹாரா தமிழ்

ads

வெள்ளி, 13 நவம்பர், 2009

வந்தவாசி - தகுந்த நேரத்தில் சிகிச்சை அளிக்காததால் வா­லிபர் இறந்தார்! தமுமுகவினர் சாலைமறியல் ஆர்ப்பாட்டம்

வந்தவாசியை அடுத்த அம்மைப்பட்டு பக்கிர் தக்காவைச் சேர்ந்த ரகுமான் இவர் வீட்டில் தூங்கிக் கொண்டிருக்கும் போது தோட்டத்தில் அவரது ஆட்டின் அலரல் சத்தம் கேட்டு எழுந்து சென்று பார்த்தபோது இருட்டில் இருந்த கட்டு விரியன் பாம்பு கடித்தது.

உடனே அவருடைய மனைவி அவரை அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அப்போது பணியில் இருந்த செவிலி­யர் அவருக்கு ஊசி போட்டு ஒன்றும் ஆகாது கூறினார். இருப்பினும் ரகுமானின் மனைவி மருத்துவரை வரச் சொல்லுங்கள் என்று கூறினார். அதற்கு அந்த செவி­லியர் மருத்துவர் உறங்கிக் கொண்டு இருப்பதாகவும், காலையில் வருமாறு சொல்­லி அனுப்பி விட்டார். இச்சம்பவம் இரவு 1.30 மணியளவில் நடைபெற்றது.
மீண்டும் அதிகாலை 4.00 மணியளவில் வாந்தி, வயிற்று வ­லியும் வந்ததால் உடனே அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக மீண்டும் கொண்டு சென்றார்.
அப்பொழுது தூக்கத்திலி­ருந்து எழுந்து வந்த மருத்துவர் இங்கே ஒன்றும் செய்ய முடியாது மேல் சிசிக்சைக்காக செங் கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லுங்கள் என்று கூறிவிட்டார். ரகு மானை செங்கல்பட்டுக்கு அழைத்து சென்று அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு அவர் சிகிச்சை பலன் இல்லாமல் காலை 8.00 மணி யளவில் உயிர் இழந்தார்.
இந்த தகவல் அவருடைய உறவினர்களுக்கு தெரிய வந்தது. இதனால் ஆத்திரம் அடைந்த உறவினர்களும், தமிழ்நாடு முஸ்லிம் முன்னற்றக் கழகத்தினரும், மனிதநேய மக்கள் கட்சியினரும் மருத்துவமனை எதிரே கூடினர். ரகுமான் உடல் பிரேத பரி சோதனை முடிந்து மாலை 6.00 அளவில் வந்தவாசிக்கு கொண்டு வரப்பட்டது. வந்தவாசி அரசு மருத்துவமனை எதிரே உடலை வைத்து ஆர்ப்பாட்டம் செய்தனர். ஆர்ப்பாட்டத்தில் மருத்துவர் பூபால னையும், பணியில் இருந்த செவி­லியரையும் கண்டித்து ஆர்ப்பாட்டம் செய்தனர்.
இந்த தகவல் அறிந்த வந்த வாசி காவல்துறை ஆய்வாளர் சுப்ரமணியும், மருத்துவர் நாகராஜும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். பேச்சுவார்த்தையை உறவினர்களும் ஆர்ப் பாட்டம் செய்த தமுமுகவினரும் ஏற்க மறுத்தனர். மேலும் ஆர்ப்பாட்டகாரர்கள் சாலைமறிய­லும் ஈடுபட்டனர். அதனால் இருபுறமும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அதன் பிறகு தகவல் அறிந்து வந்தவாசி வட்டாட்சியர் நீல வேணி, சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டார்.
இதில் ரகுமானின் மனைவியும், ஆர்ப்பாட்டக்காரர்களும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப் பொழுது ரகுமானுக்கு 13வயதில் பெண்ணும், 2 மகன்களும் உள்ளனர். இவர்களுக்கு அரசு உதவி வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும் என ஆர்ப்பாட்டகாரர்கள் கோரிக்கை வைத்தனர்.
இதை உரிய அதிகாரிகளிடம் கூறி நிவாரணம் தருவ தாக உறுதியளித்தும், பணியில் இருந்த மருத்துவர் செவிலி­யர் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததின் பேரில் ஆர்ப்பாட்டத்தில் நகர தலைவர் முபாரக், நகர செயலாளர் அக்பர், நகர துணைச் செயலாளர் முகமத்­ ஆசர்சிங், ம.ம.க. சலீம், முபாரக், சமி, உசேன், டி.எஸ்.அப்துல், நகர பொருளாளர் ரபி மற்றும் நிர்வாகிகளும் உறுப்பினர்களும் ஏராளமான பெண்களும் கலைந்து சென்றனர்.
--Tmmk.in--

இன்றைய சித்திரம்

இன்றைய சித்திரம்