வெட்கம் கைவிடலாமா? ~ சஹாரா தமிழ்

ads

வியாழன், 25 பிப்ரவரி, 2010

வெட்கம் கைவிடலாமா?

http://www.psychologytoday.com/files/u45/letter_writing.jpg
அன்புத் தங்கைக்கு.......

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) நலம் நலமறிய விருப்பம்...

இந்த விடுமுறை நாட்கள் இனிமையாக அமைந்தது. குறிப்பாக நம் மாமி வீட்டுத்திருமண நிகழச்சியில் நம் உறவினர்களை ஒரே இடத்தில் சந்தித்த சூழல் மறக்க முடியாது.

இந்த திருமணத்தில் நீயும் உன் தோழியருடன் இணைந்து இருந்தது கண்டு சந்தோஷம் அடைந்தேன் ஆனால் உன் தோழியரில் சிலர் அருகில் அந்நிய ஆண்கள் உள்ளனர் என்ற உணர்வு இல்லாமல் நடந்து கொண்ட விதம் பலருக்கும் சங்கட்த்தை ஏற்படுத்தி இருக்கலாம்.

அந்த தோழியர்களுக்கு நீ வெட்கம்-நாணம் பற்றி கூறுவது நல்லது. இஸ்லாம் அதை எந்த அளவுக்கு வலியுறுத்துகிறது என்பதை நீ அறிவாய்...

மதீனாவாசியான ஒரு நபித்தோழர், தம் சகோதரர் அடிக்கடி வெட்கப்படுவது கண்டு கண்டித்துக்கொண்டிருந்தார். அப்போது அவ்வழியே சென்று கொண்டிருந்த நபி(ஸல்) அவர்கள் அவரைக் கண்டிக்காதீர்கள். நிச்சயமாக நாணம் கொள்வது ஈமானில் ஒரு பகுதி என்று கூறினார்கள் என இப்னு உம்ர்(ரலி) அறிவிக்கின்றார்கள்..(புகாரி)

ஆண்-பெண் வித்தியாசமின்றி ஒரு முஃமீனிடம் நாணம் இருந்தாக வேண்டும் என்பதை இந்த ஹதீஸ் கூறுகிறது. நாணம் உள்ளவன், தவறு செய்ய யோசிப்பான், மக்கள் முன் அசிங்கப்பட்டு விடுவோம் என்ற பயம்கலந்த நாணம், தவறு செய்வதிலிருந்து ஒருவனை காப்பாற்றும்...

வெட்கம், நாணம், மடம், பயிர்ப்பு, ஆகியவை பெண்களிடம் இருக்க வேண்டிய இயற்கைப் பண்பு என்று கூறுவர், நாணமில்லாத பெண்களை, பெண்ணாகவே எவரும் மதிப்பதில்லை..

பெண்களிடம் ஏற்படும் இயல்பான வெட்க வெளிப்பாடு, அவர்களின் அழகை மெருகூட்டும், மதிப்பையும் அதிகரிக்கச் செய்யும். நாணத்தால் ஒதுங்கி நிற்கும் பெண்களைக் காணும் ஆணொருவன்-அவன் தரங்கெட்டவனாக இருந்தாலும்-அந்தப் பெண்ணிற்கு மதிப்பளிக்க வருகிறான் என்பதே நிதர்சன உண்மை...

அடுப்பூதும் பெண்ணாயினும், ஆகாயத்தில் பறக்கும் பெண்ணாயினும் வெட்கம், நாணம் கொல்வது, அவர்களிடம் இருக்க வேண்டிய பண்பு. ஆனால் இந்த இயற்கை பண்பு இன்றையப் பெண்களிடம் உள்ளதா? நாணம் உள்ள பெண்களைக் காண்பதே அரிதுதான்..

பெண்களில் சிலர், கணவனை தாங்களே தேர்வு செய்வது என்ற பெயரில் காதல் கொண்டு, பீச்-லாட்ஜ் என தனிமைச் சந்திப்புகளால் கருவுற்று வந்து நிற்கும் அவல நிலையைக் காண்கிறோம். நாணத்தைக் கைவிட்டதால் வந்த வினை இது..

உடுத்தி இருக்கும் ஆடை சற்றுவிலகினால் ஆடையை சரி செய்து கொள்வது வழக்கம். வேஷ்டி அணிந்து செல்லும் ஒருவன் காற்றினால் தன் ஆடை விலகும்போது மூட முயற்சிக்கிறான். இதுதான் வெட்கத்தின் வெளிப்பாடு. காற்றினால் ஆடை விலகி தொடை தெரிந்தாலும் பரவாயில்லை என்று நடந்து கொள்பவனை நாணமில்லாதவன் என்றெ கூறுவோம்..

பிறரை சுண்டி இழுக்கும் கவர்ச்சியோ, ஈர்ப்போ இல்லாத ஆண் தன்னை மறைக்க முயற்சிக்கிறான். அவன் அப்படி மறைக்காவிட்டாலும் அவனால் எவருக்கும் சஞ்சலம் ஏற்படப் போவதில்லை ஆனால் பெண்ணொருத்தி ஆடை விலகிய நிலையில் சென்றால்......? ஆண் பட்டாளமே அணி வகுக்கும்.

ஆனால் அரைகுறை ஆடையுடன் பெண்கள் வந்தால், நிலைமை என்னவாகும்? ஈவ்டீசிங், ராகிங் போன்றவை நடக்கத்தானே செய்யும். பெண்கள் எப்படிதான் நடந்து கொள்வது?

நபியே! முஃமீனான பெண்களிடம் நீர் கூறுவீராக! அவர்கள் தங்களின் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளட்டும்! தங்கள் வெட்கஸ்தலங்களை பாதுகாத்து கொள்ளட்டும் தங்கள் அலங்காரத்தில்(சாதாரணமாக வெளியில்) தெரியக் கூடியதை தவிர(வேறு எதையும்) வெளிக்காட்ட வேண்டாம். மேலும் அவர்கள் தங்கள் மார்புகளை முந்தானைகளால் மறைத்துக் கொள்ளட்டும் ! (அல்குர்ஆன் 24:31)

எந்த ஒரு ஆணும், ஒரு பெண்ணோடு தனித்திருக்க வேண்டாம் ஏனெனில் மூன்றாவதாக ஷைத்தான் உள்ளான் என்று நபி(ஸல்) கூறினார்கள். இதை இப்னு உமர்(ரலி) அறிவிக்கின்றார்கள். (திர்மிதி, அஹ்மத்)

நாணம் வளர பெண்கள் கொள்ள வேண்டிய முறையை மேற்கண்ட வசனமும், ஹதீஸும் கூறுகின்றன.

எனவே பெண்கள் பார்வையைத் தாழ்த்த வேண்டும், அலங்காரமும் உடல் பகுதிகளும் வெளியே தெரியாதவகையில் ஆடை அமய வேண்டும்.

மார்புகளில் முந்தானை போடவேண்டும். அன்னிய ஆணுடன் தனிமையில் இருக்கக்கூடாது.

இன்றைய பெண்களிடம் இது குறைந்து விட்டதால்தான் நாணம் ஏற்பட்டுவிட்டது. நாணமில்லாத வாழ்க்கை இறைகோபத்தைப் பெற்றுத்தரும் என்பதை உன் தோழியரிடம் கூறு! எல்லாவற்றையும் விட நீ உன் வாழ்க்கையில் நாணத்தை விட்டு விடாதே!..

அன்புடன்॥அண்ணன்।
www.tmmk-ksa.com

இன்றைய சித்திரம்

இன்றைய சித்திரம்