இன்று (27.10.19) தோப்புத்துறை பெரிய பள்ளிவாசலில் , மதிய நேர (அஸர்) தொழுைகக்கு பின்பு , குழந்தை சுர்ஜித் மீண்டு வர சிறப்பு பிரார்த்தனை நடைப்பெற்றது.
இமாம் முனீர் அவர்கள் பிரார்த்தனை ( துவா) செய்தார்.
இதில் மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA, ஜமாத் தலைவர் AR.ஷேக் அப்துல்லா, முன்னாள் ஜமாத் தலைவர் K .
M K. I. .நவாஸ்தீன், ஜமாத் செயலர் அபுபக்கர் சித்தீக் மற்றும் ஜமாத்தினர்கள், மாணவர்கள், இளைஞர்கள் பங்கேற்றனர்.
இந்நிகழ்வில் பத்திரிக்கையாளர்களிடம் பேசிய, மு.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் , மீட்பு பணியில் ஈடுபடும் அமைச்சர்கள்,,அதிகாரிகள், வீரர்கள் பாராட்டுக்குரியவர்கள் என்றவர், அக்குழந்தை மீண்டு வர வேண்டும் என நாடே காத்திருப்பதாக கூறினார்.
மேலும், இனி வரும் காலத்தில் இது போன்ற பேரிடர்களில் சீனாவின் தொழில் நுட்பத்தை பயன்படுத்த முனைப்பு காட்ட வேண்டும் என்றார்.
இந்திகழ்வை பிரபல கல்வி மற்றும் சுற்றுச்சூழல் அமைப்பான முஸ்லிம் மாணவர் முன்னணி (MSF) ஏற்பாடு செய்தது குறிப்பிடத்தக்கது.
இதே போன்று நாகூர் தர்ஹா மற்றும் முத்துப்பேட்டை தர்ஹாவிலும் சிறப்பு பிரார்த்தனைகள் நடைப்பெற்றதோடு, பரவலாக தமிழக மெங்கும் பள்ளிவாசல்களில் குழந்தை சுர்ஜித்துக்காக பிரார்த்தனைகள் நடைப்பெற்று வருவது அனைவரையும் உருக வைத்திருக்கிறது.
புனித மெக்கா, மதீனா விலும் தமிழக யாத்ரீகர்கள் பிரார்த்தனை நடத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.
செய்தி வெளியீடு:
MSF, தோப்புத்துறை
நாகை மாவட்டம்