விரைவில் அகில இந்திய அளவில் முஸ்லிம்களுக்கு 6 சதவீத இடஒதுக்கீடு - மத்திய அரசு தீவிரம்!! ~ சஹாரா தமிழ்

ads

சனி, 7 ஆகஸ்ட், 2010

விரைவில் அகில இந்திய அளவில் முஸ்லிம்களுக்கு 6 சதவீத இடஒதுக்கீடு - மத்திய அரசு தீவிரம்!!

இந்திய அளவில் முதன் முறையாக இட ஒதுக் கீட்டு விழிப்புணர்வை அனைத்து இயக்கங்களுக்கும் வழங்கிய தமுமுகவிற்கு வெற்றி.

முஸ்லிம்களுக்கான இட ஒதுக்கீடு கோரிக்கைப் போர் அகில இந்திய அளவில் முஸ்லிம்கள் தொடுக்கும் காலகட்டம் இது.

முஸ்லிம்களை இன ஒதுக்கல் முறையில் காலங்காலமாக ஒடுக்கி வந்த ஆதிக்க சக்திகள் முஸ்லிம்கள் பெற்றுவந்த உரிமை களை படிப்படியாக பறித்துக் கொண்டது. இந்த நாட்டின் கெடுதல்களுக்கு எல்லாம் முக்கிய காரணியான சங்பரிவார் சதி சக்திகள் ஒருங்கிணைந்த இந்திய நாட்டை துண்டாடியதில் முக்கிய பங்கு வகித்தன.

ஆனால் நாட்டு பிரிவினைக்கு காரணம் முஸ்லிம்கள் தான் என்ற துடைக்க முடியாத களங்கத்தையும் முஸ்லிம்கள் மீது சுமத்தினர்.

இந்த கறை மிகுந்த களங்கத்தை சுமக்க முடியாமல் நலிந்து கிடந்த இந்த சமுதாயம் அரசியல் அரங்கில் தங்களுக்கென ஓர் அங்கீகாரத்தைப் பெற முடியவில்லை.

கல்வி, சமூகம், வேலைவாய்ப்பு என ஒவ்வொரு அம்சத்திலும் பின்தங்கியிருந்த இந்த சமூகம் நத்தை தன் கூட்டுக்குள் ஒடுங்கிக் கொள்வதைப் போல சுருக்கிக் கொண்டது.

இடையில் பயங்கரவாதக் குற்றச் சாட்டுகள் வேறு இந்த இடிதாங்கி சமுதாயத்தின் மீது தொடர்ந்து சுமத்தப்பட்டது.

இத்தனையும் சதிக்கூட்டம் செய்ததற்கு முக்கியக் காரணம், எக்காரணம் கொண்டும் முஸ்லிம் கள் சமூக அளவில் எழுச்சியுடன் எழுந்து நின்றுவிடக் கூடாது என்ற ஒரே காரணத்திற்காகத்தான்.

கொடு மதியாளர்கள் கனவு கண்டதைப் போல அகில இந்திய அளவில் முஸ்லிம்கள் எழுச்சிப் பெறும் வழியைக் காணவில்லை.

கண்ணிருந்தும் குருடராக, வாயிரு ந்தும் ஊமையராய் சோர் ந்திருந்த அகில இந்திய முஸ்லிம் சமுதாய த்திற்கு பாலைவனத்தில் ஒரு சோலைவனமாக வாய்த்தது தமிழ் நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம்.

முஸ்லிம்களின் ஜீவாதாரக் கோரிக்கையாக இடஒதுக்கீட்டுப் பிரச்சினையை முன் முழங்கியது தமுமுக. தமுமுக ஒவ்வொரு அசைவும், இலக்கும் இலட்சியமும் இந்திய விடுதலைக்கு முன்பாக இழந்த இடஒதுக்கீட்டு உரிமையை மீட்க வேண்டும் என்பதே.

அதற்காக தமுமுக கண்ட களங்கள் எண்ணற்றவை. பிரச்சார வியூகங்கள் வார்த்தைகளால் விவரிக்க முடியாதவை. தமிழ கம் மற்றும் புதுவையின் பட்டி தொட்டியெங்கும் இழந்த இட ஒதுக்கீட்டு உரிமையை மீட்க களமி றங்கியது தமுமுக. அகில இந்திய அளவிலும் முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு பெற தலைநகர் டெல் லியில் களம்கான முடிவு செய்தது. 2007 ஆம் ஆண்டு மார்ச் 7&ல் டெல்லியில் கூடிய மாபெரும் பேரணி இரண்டு இலக்குகளை வென்றெடுத்தது.

ஒன்று அகில இந்திய ஆட்சி யாளர்களை சிறுபான்மையின ருக்கு உரிய இட ஒதுக்கீடு வழங்க வேண் டும் என்ற சிந்தனைப் பொறிகளை தட்டி விட்டு இட ஒதுக்கீட்டினை நிறை வேற் றுவதற்கான அடுத்த கட்டத்தை நகர்வதற்கான ஒரு முன் முயற்சியை தமுமுக&வின் டெல்லி பேரணி ஏற்படுத்தியது. இரண்டாவதாக தமுமுக அடைந்த இலக்கு வென்றெடுத்த இலட்சியம் என்னவெனில் இட ஒதுக்கீடு என்ற ஜீவாதார உரிமை குறித்து அகில இந்திய அளவில் விழிப்புணர்வு ஏற்படுத்தியது.

நாடாளுமன்றம் நோக்கி நடந்த பேரணியிலும் அதனைத் தொடர்ந்து நடைபெற்ற சமூக நீதி மாநாட்டிலும் பங்கேற்காத, உரையாற்றாத பிரபலமான சமுதாய இயக்கங்களின் தலைவர்களே இல் லை என்ற அளவுக்கு அனைத்து தலைவர்களும் பங்கேற்றனர். சமூக நீதிப் போராட்டத்தில் தமுமுக இந்தியாவிலேயே முன்னோடியாக விளங்குகிறது என பெருமிதத்துடன் குறிப்பிட்டனர்.

தமுமுகவின் போராட்ட வியூகத்தைப் பயன்படுத்தி ஒவ்வொரு மாநிலங்களிலும் உள்ள இயக்கங்கள் இட ஒதுக்கீட்டு போராட்டங்களை முன்னெடுத்தன. அகில இந்திய அளவில் முஸ்லிம்கள் கொடுத்த அழுத்தத்தின் விளைவாக இதர பிற்படுத்தப்பட்ட பிரிவுக்கான ஓபிசி பிரிவில் முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க மத்திய அரசு முடிவு செய்திருப்பதாகவும், இது தொடர்பாக தீவிர ஆலோசனையில் இறங்கியிருப்பதாகவும் மத்திய சிறுபான்மை நலத்துறை அமைச் சர் சல்மான் குர்ஷித் அறிவித்திருக்கிறார்.

நாங்கள் இட ஒதுக்கீட்டுப் பிரச்சினையை மிகவும் தீவிரமாக ஆய்வு செய்து வருகிறோம். காங் கிரஸ் அதன் செயல்திட்டத்தில் அதனை நடைமுறைப்படுத்த முடிவெடுத் துள்ளதாகவும் காங்கிரஸ் நிச்சயம் இதனை செயல்படுத்தும் இதில் சிறிதும் சந்தேகம் இல்லை என்றும் கூறியிருக்கிறார்.


ரங்கநாத் மிஸ்ரா ஆணையத்தின் அறிக்கை கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. அதில் 10 சதவீத இட ஒதுக்கீடு முஸ்லிம் களுக்கு வழங்கப்பட வேண்டும் என்று கூறியுள்ளது. ஆனால் இதை செயலாக்குவதில் பல சிக்கல்கள் உள்ளன.

மண்டல் கமிஷன் அறிக்கை யில் கூறியுள்ளவாறு பிற்படுத்தப் பட்டவர்களுக்கான இட ஒதுக்கீட் டில் 8.4 சதவீதம் சிறுபான் மையி னர் விரிவாக் கத்திற்காக உள்ளது. இதர பிற்படுத்தப்பட்ட பிரிவில் வரையரை செய்யப்பட்டுள்ள மொத்த 27 சதவீதம் இட ஒதுக்கீட்டில் 8.4 சதவீதம் சிறுபான்மையினருக்கு வரையறுக்கப்பட்டதில் 6 சதவீத இட ஒதுக்கீடு முஸ்லிம்களுக்கு கண்டிப்பாக வரையறுக்கப்பட வேண்டும்.

மிஸ்ரா ஆணையம் சிறுபான் மையினருக்கு 15 சதவீதம் இட ஒதுக்கீடு கொடுக்க வேண்டும் அல்லது ஓபிசி என்ற இதர பிற்படுத்தப்பட்ட பிரிவிலிருந்து பகிர்ந்து அளிக்க வேண்டும் எனக் கூறுகிறது. இதில் இரண்டாவதை நாங்கள் தேர்ந்தெடுத்தோம் என் றும் அமைச்சர் கூறினார்.

இது தொடர்பாக கடந்த மே மாதம் முஸ்லிம் தலைவர்களுடன் நிகழ்ந்த சந்திப்பில் ஐக்கிய முற் போக்குக் கூட்டணித் தலைவர் திருமதி சோனியா காந்தி முஸ்லிம்களுக்கான இட ஒதுக்கீடு இன்னும் 6 மாதங்களில் செயல்படுத் தப்படும் என உறுதி அளித்திருக்கிறார்.

மிஸ்ரா ஆணையம் பரிந்துரை யின்படி முஸ்லிம்களுக்கு 10 சதவீ தம் இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்பதே த.மு.மு.கவின் கோரிக்கையாகும். இடஒதுக்கீடு விவகாரத்தில் இதுவரை மவுனம் சாதித்து வந்த மத்திய அரசு இணக்கமான நடவடிக்கை நோக்கி பயணிப்பதை பாராட்டும் அதேவேளையில் முஸ் லிம்களுக்கு ரங்கநாத் மிஸ்ரா ஆணையத்தின் பரிந்துரையின் படி 10 சதவீதம் இடஒதுக்கீடு வழங்க வேண்டும்.

இந்த தேசத்தில் காலகா லமாக ஒடுக்கப்பட்டுவரும் முஸ்லிம் சமூகத்தின் பின்னடைவு என்ற நோயை நீதியரசர் ராஜிந்தர் சச்சார் கண்டறிந்தார் என்றால் அதற்கான தீர்வினை நீதியரசர் ரங்கநாத் மிஸ்ரா வின் பரிந்துரைகள் அடித்துக் கூறிய து. 10 சதவீத ஒதுக்கீடு வழங்க மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.                                                                      tmmk.in

இன்றைய சித்திரம்

இன்றைய சித்திரம்