MIM கட்சி தலைவரின் சகோதரர் அக்பருதீன் உவைசி அவர்கள் மீது கொலை முயற்சி. ~ சஹாரா தமிழ்

ads

ஞாயிறு, 18 மே, 2014

MIM கட்சி தலைவரின் சகோதரர் அக்பருதீன் உவைசி அவர்கள் மீது கொலை முயற்சி.


இன்று அதிகாலை கர்நாடகா மாநிலம் இந்துப்பூர் அருகே மஜ்லீஸ் கட்சி தலைவர் அஸாதுதீன் ஒவைஸி அவர்களின் சகோதரர் ஆன அக்பருதீன் ஒவைஷி அவர்களை கொலை செய்யும் நோக்கத்தோடு வந்த கூலிப்படைக்கும் பெங்களூர் போலிஸாருக்கும் இடையே நடந்த துப்பாக்கி சண்டையில் கோவிந்த என்பவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தான். கிரி என்பவன் படுகாயமடைந்தான். மேலும் இருவரை போலிஸார் கைது செய்துள்ளனர்.

இதன் மூலம் அக்பருதீன் ஒவைஷி அவர்களை கொலை செய்யும் திட்டம் முறியடிக்கப் பட்டுள்ளது. இதன் காரணமாக ஹைதராபாத் நகரில் பரபரப்பு நிலவுகிறது. மேலும் ஹைதராபாத்தில் முக்கிய இடங்களில் போலிஸ் பெரும்அளவில் குவிக்கப்பட்டுள்ளனர். தற்போது இறைவனின் அருளால் அக்பருதீன் ஒவைஷி நலமுடன் இருக்கிறார்.

இந்தியாவிலேயே டச் பண்ண முடியாத ஒரு தொகுதி உண்டென்றால் அது ஹைதராபாத் தொகுதியாகவே இருக்க முடியும் என்கின்றது சமீபத்திய தி ஹிந்து இதழ். காரணம் அசாதுத்தீன் உவைசி. கல்வி, விவேகம், வேகம், சாதுர்யம் இவை தான் இவரின் அடையாளங்கள்.

இவை நிச்சயம் மிகைப்படுத்தப்பட்ட வார்த்தைகள் கிடையாது. பாரிஸ்டர் பட்டம் பெற்ற அசாதுத்தீன் உவைசியின் உரையை அல்லது விவாதத்தை நீங்கள் பார்த்திருந்தால் எளிதாக இந்த முடிவுக்கு தான் வருவீர்கள். 1984-ஆம் ஆண்டிலிருந்து இத்தொகுதியை உவைசி சகோதரர்களின் MIM கட்சியே தக்க வைத்துக்கொண்டிருக்கின்றது.

மற்ற தொகுதிகளில், எனக்கு சீட் கொடுக்கவில்லை அவருக்கு சீட் கொடுக்கவில்லை என்று சண்டைகள் நடந்துக்கொண்டிருக்க, இங்கேயோ உவைசியை யார் எதிர்ப்பது என்ற தயக்கமே மிஞ்சுவதாக தி ஹிந்து சொல்கின்றது.

இன்றைய சித்திரம்

இன்றைய சித்திரம்