இலங்கை அகதிகளை விசாரிக்க சட்டப்படி இந்தியாவுக்கு உரிமை இல்லை! ஆஸ்திரேலிய எம்.பி. சாரா ஹன்சன்-யங் ~ சஹாரா தமிழ்

ads

வியாழன், 31 ஜூலை, 2014

இலங்கை அகதிகளை விசாரிக்க சட்டப்படி இந்தியாவுக்கு உரிமை இல்லை! ஆஸ்திரேலிய எம்.பி. சாரா ஹன்சன்-யங்



ஆஸ்திரேலியாவில் அகதிகளாக தஞ்சம் அடையச் சென்றபோது கைது செய்யப்பட்ட 157 இலங்கைத் தமிழர்களை இந்தியத் தூதரக அதிகாரிகள் விசாரிக்க உரிமையில்லை என்று ஆஸ்திரேலிய எம்.பி. எதிர்ப்புத் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக ஆஸ்திரேலிய நாடாளுமன்ற மேலவை உறுப்பினரான சாரா ஹன்சன்-யங் கூறியதாவது: ஆஸ்திரேலியாவில் அடைக்கலம் கோரியுள்ள அகதிகளின் விவகாரத்தில் இந்தியா தலையிட சட்டப்படி எவ்வித உரிமையும் இல்லை. இந்த விவகாரத்தில் ஆஸ்திரேலிய அரசின் செயல்பாடுகள் கண்துடைப்பாகவே உள்ளது. இலங்கை அகதிகள் தஞ்சம் கேட்டு ஆஸ்திரேலியா வந்திருக்கிறார்கள். எனவே, ஆஸ்திரேலிய அதிகாரிகள் அந்த அகதிகளைச் சந்தித்து தேவையான பாதுகாப்பு உதவிகளை செய்ய வேண்டும்.

இராக்கில் இருந்து யாரும் இங்கு வந்திருந்தால் அவர்களை விசாரிக்க ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் அனுமதிக்கப்படுவார்களா? எனவே, ஆஸ்திரேலியாவில் அந்த அகதிகளின் உரிமைகளுக்கு அரசு மதிப்பளிக்க வேண்டும் என்று சாரா ஹன்சன்-யங் கூறினார். இதற்கு ஆஸ்திரேலிய குடியேற்றத்துறை அமைச்சர் ஸ்காட் மொர்ரிசன் பதிலளிக்கையில், ""இந்தியாவில் துன்புறுத்தப்பட்டு அந்த அகதிகள் ஆஸ்திரேலியாவுக்கு தப்பி வரவில்லை. இதனை ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளுடன் ஒப்பிடக்கூடாது. இத்தகைய கருத்துக்கு சாரா வருத்தம் தெரிவிக்க வேண்டும்'' என்றார்.

ஆஸ்திரேலியாவுக்கான இந்திய தூதர் பிரென் நந்தா கூறுகையில், "ஐ.நா. அகதிகள் உடன்படிக்கையில் இந்தியா கையெழுத்திடாத போதிலும், அகதிகளுக்கான சேவையை மிகச்சிறப்பாக செய்துள்ளது. இதனை ஐ.நா. மனித உரிமை ஆணையம் பல முறை பாராட்டியுள்ளது" என்றார்.

Source-seithy.com
#Mohamedharis

இன்றைய சித்திரம்

இன்றைய சித்திரம்