இஸ்லாமிய பெண் பயணியை தவறாக நடத்திய குற்றத்திற்காக அமெரிக்க யுனைடெட் ஏர்லைன்ஸ் நிறுவனம் அவரிடம் மன்னிப்பு கோரியுள்ளது.
அமெரிக்காவை சேர்ந்த தஹேரா என்ற இஸ்லாமிய பெண், கடந்த 31 ஆம் திகதி சிகாகோவிலிருந்து வாஷிங்டன் செல்லும் யுனைடெட் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் விமானத்தில் பயணித்துள்ளார்.
அப்போது, இவர் விமானப்பணிப்பெண்ணிடம் "டயட் கோக்" கேட்டுள்ளார், அதற்கு பணிப்பெண்ணோ நீங்கள் அதனை ஆயுதமாக பயன்படுத்தக்கூடும் என்று கூறி கோக்கினை தர மறுத்துள்ளார்.
ஆனால் தஹேராவின் அருகில் இருந்த பயணி ஒருவர், டின் பியரை குடித்துக்கொண்டிருந்தார், இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த தஹேரா, அதனை சுட்டிக்காட்டி பணிப்பெண்ணிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
ஆனால், விமானத்தில் பயணம் செய்த மற்ற பயணிகளும், இஸ்லாமிய மதத்திற்கு எதிரான கருத்துகளை சுட்டிக்காட்டி தஹேராவை அடக்கியுள்ளனர், தஹேராவும் தனது பயணத்தை அமைதியாக தொடர்ந்தார்.
இதனைத் தொடர்ந்து இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தததைத் தொடர்ந்து, டுவிட்டரில் #UnitedforTahera என்ற ஹேஷ்டேக் உருவாக்கப்பட்டது.
தஹேராவை அவமதித்ததை கண்டித்து யுனைடெட் ஏர்லைன்ஸ் நிறுவனத்தை புறக்கணிக்கப் போவதாகவும் பொதுமக்கள் கருத்து தெரிவித்தனர்.
இந்நிலையில், இந்த சம்பவத்திற்கு காரணமான பணிப்பெண், பணியிலிருந்து நீக்கப்பட்டுவிட்டார் என்றும் தஹேராவிடம் நாங்கள் மன்னிப்பு கேட்பதாகவும் யுனைடெட் ஏர்லைன்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.
வியாழன், 4 ஜூன், 2015
அவமதிக்கப்பட்ட இஸ்லாமிய பெண் : மன்னிப்பு கோரிய அமெரிக்க விமான நிறுவனம்
4:30 PM
இஸ்லாம், உலக செய்திகள், World News