ஏப்.25., திமுக, தலைவர் கருணாநிதி திருவாரூர் தொகுதியிலும், அதிமுக பொதுசெயலாளரும் முதலமைச்சருமான ஜெயலலிதா ஆர்.கே.,நகர் தொகுதியிலும் இன்று வேட்புமனு தாக்கல் செய்கின்றனர். 234 உறுப்பினர்களை கொண்ட தமிழக சட்டசபைக்கு மே 16 ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. அதற்கான வேட்புமனு கடந்த வெள்ளிக்கிழைமை தொடங்கியது. இந்நிலையில் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் வேட்புமனு தாக்கல் இல்லை என்று அறிவிக்கப்பட்ருந்தது. இதனால், இன்று வேட்பு மனு தாக்கல் தொடங்க உள்ளது. இன்று திமுக தலைவர் கருணாநிதி திருவாரூர் தொகுதியில் வேட்பு மனுவை தாக்கல் செய்கிறார். இதேபோல, அவைத்தலைவர் மதுசூதனன் முன்மொழிய பிற்பகலில் அதிமுக, பொதுசெயலர் ஜெயலலிதா ஆர்.கே.,நகர் தொகுதியிலும் வேட்பு மனு தாக்கல் செய்கிறார்.