மோட்டார் வாகன சட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்... ~ சஹாரா தமிழ்

ads

சனி, 6 ஆகஸ்ட், 2016

மோட்டார் வாகன சட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்...

ஆக.06., புதுடில்லி: மோட்டார் வாகன சட்டத்திருத்த மசோதாவிற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

நாட்டில் நடக்கும் சாலை விபத்துக்களை குறைக்கவும், சாலை பாதுகாப்பை அதிகரிக்கும் வகையில் மத்திய அரசு மோட்டார் வாகன சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்தது. குடிபோதையில் வாகனம் ஓட்டுவோர் மீது கடும் நடவடிக்கை, சாலை விதிகளை மீறுவோர் மீதான தண்டனை மற்றும் அபராதம் அதிகரிப்பு, சிறுவர்கள் வாகனம் ஓட்டுவதற்கு தடை உள்ளிட்ட பல்வேறு மோட்டார் வாகன சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

இதில் குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களுக்கு 10 ஆயிரம் ரூபாய் அபராதம், வேகமாக வாகனம் ஓட்டுபவர்களுக்கு ஆயிரம் முதல் 4 ஆயிரம் வரை அபராதம், லைசன்ஸ் இல்லாமல் ஓட்டினால் 2 ஆயிரம் அபராதம், ஹெல்மெட் இல்லாமல் வாகனம் ஓட்டினால் 2 ஆயிரம் அபாரதம் மற்றும் வாகன ஓட்டுநர் உரிமம் ரத்து செய்தல் உள்ளிட்ட பல்வேறு கடுமையான சட்ட திருத்தங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது.

மேலும் இந்த சட்ட திருத்தத்தில் வாகன விபத்திற்கான இழப்பீடு தொகை 25 ஆயிரத்தில் இருந்து 2 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் வாகன விபத்தில் உயிரிழப்பு ஏற்பட்டால் 10 லட்சம் வரை இழப்பீடு தொகை உள்ளிட்ட பல்வேறு சட்ட திருத்தங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது.

இந்த மசோதாவிற்கு மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் வழங்கியது. இத்தகவலை மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்துள்ளார்.

இந்த மசோதா விரைவில் பார்லிமென்ட்டில் தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் நாடாளுமன்ற வளாகத்தில் நுாலகம் அமைப்பது, நாடு முழுவதும் உள்ள 13 மருத்துவகல்லூரிகளை தரம் உயர்த்துவதற்கான மசோதாகளுக்குள் அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

இன்றைய சித்திரம்

இன்றைய சித்திரம்