ரஷியா மீது கூடுதல் பொருளாதாரத் தடை - அமெரிக்கா முடிவு ~ சஹாரா தமிழ்

ads

வியாழன், 31 ஜூலை, 2014

ரஷியா மீது கூடுதல் பொருளாதாரத் தடை - அமெரிக்கா முடிவு



பிரஸ்ஸல்ஸில்: ரஷியா மீது கூடுதல் பொருளாதாரத் தடை விதிக்க அமெரிக்கா முடிவு செய்துள்ளது.

ரஷியா மீது கூடுதல் பொருளாதாரத் தடை விதிக்க அமெரிக்காவும், ஐரோப்பிய யூனியன் நாடுகளும் ஒருமனதாகத் தீர்மானித்துள்ளன.

பெல்ஜியம் தலைநகர் பிரஸ்ஸல்ஸில் ஐரோப்பிய யூனியன் அமைப்பின் தூதர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. அப்போது, உக்ரைனில் கிளர்ச்சியாளர்களுக்கு தொடர்ந்து ஆதரவளிப்பதாகக் கூறி,ரஷியா மீதான கூடுதல் பொருளாதாரத் தடை குறித்த விவரங்களை இறுதி செய்வதற்கான திட்டம் வகுக்கப்பட்டது.

இந்தப் புதிய பொருளாதாரத் தடையின்படி, ஐரோப்பிய யூனியனின் நிதிச் சந்தைகளில் ரஷிய வங்கிகளின் பரிவர்த்தனைகளை குறைப்பது, ராணுவத் தளவாடங்களிலும், எரிசக்தித் துறையிலும் நவீன தொழில்நுட்பங்கள் ஏற்றுமதி மற்றும் பொதுமக்கள் அல்லது ராணுவத் தேவைக்காக இரட்டை முறை பயன்படுத்தக்கூடிய பொருள்களைத் தடை செய்வது என திட்டமிடப்பட்டுள்ளது.

முன்னதாக, இது குறித்து அமெரிக்க அதிபர் ஒபாமா, ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்க்கல், பிரான்ஸ் அதிபர் பிரான்சுவா ஹொலாந்த், பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூன், இத்தாலி பிரதமர் மாத்யூ ரென்ஸி ஆகியோர் தொலைபேசியில் கான்பரன்சிங் முறையில் திங்கள்கிழமை கலந்தாலோசித்ததாக ஜெர்மனி அரசு செய்தித்தொடர்பாளர் தெரிவித்தார்.

Source- Inneram.com
#Mohamedharis

இன்றைய சித்திரம்

இன்றைய சித்திரம்