தம்மாமில் நாடு மதம் மொழி கடந்த மனித நேயம்தம்மாம். ~ சஹாரா தமிழ்

ads

செவ்வாய், 15 செப்டம்பர், 2009

தம்மாமில் நாடு மதம் மொழி கடந்த மனித நேயம்தம்மாம்.

15.09.2009
தம்மாம் மாநகரில் கோல்டன் டூலிப் அல்ஹம்ரா என்ற கம்பெனியில் வேலை செய்து வரும் பெயிண்டர் பய்யாசு என்பவருக்கு நெஞ்சு வலி காரணமாக மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு இருதயக் குழாயில் அடைப்பு இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. நல்லவேளையாக சரியான நேரத்தில் இரத்தக்குழாய் அடைப்பு கண்டு பிடிக்கப்பட்டதால் உயிர் தப்பினார். இந்தியாவில் கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்த இவர் ஏழ்மையானர்.
பய்யாசு
மருத்துவர்கள் இந்த இரத்தக்குழாய் அடைப்பை மருந்துகளால் சரிசெய்ய முடியாது, ஓப்பன் ஹார்ட் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று திட்டவட்டமாக கூறிவிட்டனர்.
அனஸ் - கேரள மாநிலம்
இவரது ஆப்பரேஷனுக்காக இரத்தம் அதிகம் தேவைப்பட்டதால் கோல்டன் டூலிப் அல்ஹம்ரா நிர்வாகத்தினர் அந்த கம்பெனியில் வேலை செய்பவர்களிடமிருந்து இரத்தக்கொடையை வேண்டி நின்றது.
எஸ்ஸாம் - சிரியா
சவூதி அரேபியாவில் பணிபுரிபவர்களில் பலருக்கு டயாபடிஸ் என்ற சர்க்கரை நோய் இருக்கக்கூடியவர்கள் இரத்ததானத்தை இவர்கள் செய்ய இயலாது. இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் இரத்ததானம் செய்ய இயலாது. எனவே நல்ல நிலையில் உள்ளவர்களிடமிருந்து இரத்தம் பெற வேண்டி இருந்தது.
இம்ரான் - இலங்கை
8 யூனிட் இரத்தம் தேவைப்படும் நிலையில் அதே கம்பெனியில் வேலை செய்யும் பலர் முன் வந்தனர்.
காலிதாஸ் - கர்நாடகா மாநிலம்
இரத்ததான செய்ய முன்வந்தவர்களில் ஒருவர் எனக்கு பயமாக இருக்கிறது என்று கூறி பாதியிலேயே திரும்பி வந்து விட்டார்.
நெய்னா முஹம்மது - தமிழ்நாடு
நோன்பு காலம் என்பதால் தூக்கம் குறைந்த காரணத்தினால் இரத்தத்தில் இருக்கும் வெள்ளை அணுக்கள் குறைந்து காணப்பட்டதால் ஒருவர் இரத்ததானம் செய்ய அனுமதிக்கப்பட வில்லை.
பலித்தா - இலங்கை
இருவருக்கு இரத்த அழுத்தம் கூடுதலாக இருந்ததாலும், அவர்களுக்கே தெரியாமல் உள்காய்ச்சல் இருந்ததாலும் இரத்ததானம் செய்ய அனுமதிக்கப்பட வில்லை.இரத்ததானம் செய்ய சென்றவர்களில் 6 பேர் மட்டும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.1. நெய்னா முஹம்மது - இந்தியா – தமிழ்நாடு2. இம்ரான் - இலங்கை3. பலித்தா - இலங்கை4. காலிதாஸ் - இந்தியா – கர்நாடகா5. எஸ்ஸாம் - சிரியா6. அனஸ் - இந்தியா – கேரளா
ஏழை இந்திய முஸ்லிம் ஒருவருக்கு இந்தியாவைச் சேர்ந்த தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா போன்ற மாநிலங்களைச் சேர்ந்தவர்களும் இலங்கை சிரியா போன்ற மற்ற நாடுகளைச் சேர்ந்தவர்களும் முஸ்லிம், புத்தா, இந்து போன்ற மதங்களைச் சேர்ந்தவர்களும் இரத்ததானம் செய்ய முன்வந்தது மனிதநேயத்திற்கு மிகச் சிறந்த முன் உதாரணமாகும். இவர்களின் தாய்மொழியும் வெவ்வேறானவை என்பதும் கவனிக்கத் தக்கது.பெயிண்டர் பய்யாசு இருதய அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்து நலமுடன் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.அவர் பூரண குணமடைய இந்த ரமளானில் நீங்களும் பிரார்த்தியுங்களேன்.
tmmk-ksa

இன்றைய சித்திரம்

இன்றைய சித்திரம்