ரியாத்தில் இந்தியர் மன நலம் பாதிக்கப்பட்டு மரணம் - தவிக்கும் தமிழர்கள். ~ சஹாரா தமிழ்

ads

புதன், 2 செப்டம்பர், 2009

ரியாத்தில் இந்தியர் மன நலம் பாதிக்கப்பட்டு மரணம் - தவிக்கும் தமிழர்கள்.

ரியாத்தில் உள்ள தடுப்பு முகாமில் அடைக்கப்பட்டிருந்த மன நலம் பாதித்த இந்தியர் உரிய மருத்துவ சிகிச்சை தரப்படாத காரணத்தால் பரிதாபமாக உயிரிழந்தார். அவரது பெயர் முகம்மது சகியூப். உ.பி. மாநிலத்தைச் சேர்ந்தவர். தற்போது அவரது உடலை சோமைஷி மத்திய மருத்துவமை பிணவறைக்கு அதிகாரிகள் அனுப்பி வைத்துள்ளனர். முறையான ஆவணங்களுடன் சவூதி சென்று வேலை பார்த்து வந்த சகியூப், பேசிய ஊதியம் தராததால் அதிருப்தி அடைந்து தனது ஸ்பான்சரிடம் சொல்லாமல் வெளியேறி விட்டார். இதையடுத்து பிடிக்கப்பட்ட அவர் தடுப்பு முகாமில் அடைக்கப்பட்டார்.இந்த நிலையில் மன நலம் பாதிக்கப்பட்டார். மேலும், அவருக்கு உடல் நலமும் பாதிக்கப்பட்டது. ஆனால் உரிய சிகிச்சை வசதி செய்து தரப்படவில்லை. இந்த நிலையில் அவர் மரணமடைந்துள்ளார்(இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்).இதேபோல, சியாராம் (60) என்ற இந்தியரும் உடல் நலம் பாதிக்கப்பட்டு கவலைக்கிடமான நிலையில் இருப்பதாக தெரிகிறது.இந்த முகாமில் அடைபட்டுள்ள தஞ்சையைச் சேர்ந்த கபீர் அகமது என்பவர் தொலைபேசி மூலம் கூறுகையில், நான் கடந்த ஒரு வருடமாக சவூதியை விட்டு வெளியேற முயன்று வருகிறேன். ஆனால் முடியவில்லை. தமிழகத்தைச் சேர்ந்த பெண்கள் உள்பட ஆயிரக்கணக்கானோர் இந்த தடுப்பு முகாமில் சிக்கித் தவித்து வருகிறோம்.பிச்சைக்காரர்களின் நிலையை விட எங்களது நிலை மோசமாக உள்ளது. இந்திய தூதரகத்தை பலமுறை நாங்கள் அணுகியும் ஒரு உதவியும் கிடைக்கவில்லை. இந்திய அரசு எங்களுக்காக எதையும் செய்யாமல் உள்ளது என்று கண்ணீர் மல்க கூறினார்.
நன்றி - தட்ஸ்தமிழ்.

இன்றைய சித்திரம்

இன்றைய சித்திரம்