அஸ்ஸலாமு அலைக்கும்.
சவுதி நேரப்படி நேற்று இரவு 7 மணிக்கு - “புலன் விசாரணை” என்ற பெயரில்
அர்ச்சகர் தேவநாதன் கோவில் கருவறையில் பெண்களுடன் நிகழ்த்திய அருவருக்கத்தக்க
அசிங்ககங்களை படம்போட்டு காட்டிய வசந்த் டிவி - இறுதியில் தனது விழமத்தனமான
கருத்துகளை இஸ்லாமிய மார்க்கத்தின் மீதும் அதை பின்பற்றுவோர்மீதும் அள்ளி
தெறித்தது.
“இத்தகைய நிகழ்வுகள் இந்து மதத்தில் மட்டும் நடப்பது அல்ல - கிறித்துவ
மதத்திலும், இஸ்லாமிய மதத்திலும் தொடர்ந்து நடந்துகொண்டுதான் இருக்கிறது”
என்பதாக கூறி சர்வ சாதாரணமாக ஒரு மகா பாரதூர்வமான குற்றச்சாட்டை நம்முடைய
இஸ்லாமிய சமுதாயத்தின்மீது சுமத்தி இருக்கின்றது.
முதலில் எத்தனை இஸ்லாமியர்கள் இத்தகைய அசிங்கங்களை செய்ததாக இதுவரை பிடிபட்டு
இருக்கிறார்கள் (அல்லது) தண்டிக்கப்படிருக்கிரார்கள் என்பதை விஷம் கக்கும் இந்த
டிவிக்கள் பட்டியல்போட முடியுமா ?
இத்தகைய அசிங்கங்களை அரங்கேற்றியதாக இதுவரை பிடிபட்ட சாமியார்களையும்
பாதிரியார்களையும் நாம் பட்டியல்போட ஆரம்பித்தால் பேப்பர்கள் பத்துமா ?
தயவு செய்து இந்த விழயத்தை நமது இஸ்லாமிய சமுதாயஅமைப்புகள் அனைத்தின்
கவனத்திற்கும் கொண்டுசென்று – நமது கடும் கண்டனத்தை வீரியமாக
பதிவுசெய்யவேண்டும் என நம் சகோதரர்கள் அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்.
திங்கள், 7 டிசம்பர், 2009
இஸ்லாமிய சமுதாயத்தின்மீது பாரதூர்வமான குற்றச்சாட்டு
12:27 PM