1.1230 ஷுஹதாக்கள் மற்றும் சுமார் 7000 காயமடைந்தவர்களுடன் காஸா போராட்டம் தொடர்கின்றது.
2.7000 காயப்பட்டவர்களில் ரமழான் 27 அன்று வரை எகிப்திய துரோக இராணுவ அரசு 73 பேருக்கு மாத்திரமே ரபாஹ் எல்லையைக் கடந்து எகிப்துக்குள் சிகிட்சை பெற அனுமதித்தது.
3.தற்பொழுது சிகிட்சை பெறும் காஸா மக்கள் எகிப்திய உளவுத்துறையினரால் விசாரிக்கப்பட்டு அவர்களுக்கு வழங்கப்படும் பாதுகாப்பு மற்றும் போராட்டத்துறை சார் பயண்மிக்க தகவல்களின் அடிப்படையிலேயே கவனிக்கப்படுகிறார்கள் என்ற விஷயம் மனிதாபிமானமுள்ள அனைவரையும் கவலையில் ஆழ்த்தியுள்ளது.
4.இப்பொழுது சிகிட்சைக்காக கெய்ரோ வந்தடைந்துள்ள காஸா மக்கள் மொத்தம் 91 பேர்களே. அவர்களும் ராக்கெட் தளங்கள் எங்குள்ளன? ஆயுதகளஞ்சியங்கள் எங்கிருக்கின்றன? மற்றும் போராளிகளின் நடமாட்டங்கள் குறித்த தகவல்களை வழங்க வேண்டும் என்ற ஸீஸியின் அரக்கப் படையினரின் நிபந்தனைகளுக்கு கட்டுப்பட்டே வரவேண்டியிருந்தது.
5.இந்நிலை கடந்த அல்புர்கான் போராட்ட காலத்திலும் இறந்து போன உமர் சுலைமானின் அரக்கர் படைகளால் அரங்கேற்றப்பட்டிருந்தது.
6.சில பினாமிகள் ரபாஹ் வாயில் திறக்கப்பட்டிருக்கிறது ..வைத்திய சாலைகளில் ஆயிரக்கணக்கில் சிகிட்சையளிக்கப்படுகிறது என்று ஸீஸியின் ஆட்சிக்கு வர்ணமடிக்கும் வேலையைச் செய்கின்றனர்.
7.ஸீஸிக்கு போஸ்டர் ஒட்டிய, ஒட்டுகின்ற, ஒட்டப்போகின்ற
மார்க்கமும் மனிதமும் இழந்த கூட்டத்தின் அனுதாபிகளாகவோ ஆதரவாளர்களாகவோ அவர்கள் இருந்து விட்டுப் போகட்டும்.
முர்ஸிக்கும் இஃவான்களுக்கும் தம் காழ்ப்புணர்வை வேண்டியளவு கொட்டட்டும்.
8.காஸா மக்களின் குருதியில் தம் கேடுகெட்ட அரசியல் சாயத்தை பூசி இஸ்ரேலுக்கும் உறவாவதையிட்டு அஞ்சிக் கொள்ளட்டும். அல்லாஹ்வைப் பயந்து கொள்ளட்டும்.
(எகிப்தில் 4000 பேரின் குருதியில் வராத ஏகத்துவமா 1230 பேரில் வரப்போகுது என்று யாரோ சொல்வது கேட்கிறது. )
Press&Thanks- Fairoos
#JournalisticveiwAbusheikMuhamed
புதன், 30 ஜூலை, 2014
30-07-2014 - காஸா குறித்த இன்றைய முக்கிய செய்திகள்...
10:52 AM
உலக செய்திகள், காஸா, பலஸ்தீனம்